Nagarjuna: இனி இதுபோல நடக்காது.. முதியவர் தள்ளிவிடப்பட்ட சம்பவத்தில் மன்னிப்பு கேட்ட நாகார்ஜுனா!

ஐதராபாத்: நடிகர் தனுஷ், நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோர் இணைந்து நடித்து வரும் குபேரா படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இந்த படத்தின் அடுத்த கட்ட சூட்டிங்கிற்காக தனுஷ், நாகார்ஜுனா உள்ளிட்டவர்கள் ஹைதராபாத்திற்கு விமானம் மூலம் சென்று இறங்கினர். உடன் தனுஷின் மகனும் இருந்தார்.

விமானநிலையத்தில் நாகார்ஜுனாவின் தீவிர மற்றும் வயதான ரசிகர் ஒருவர் அவரை தொட்டு அவருடன் பேச முயன்றார். ஆனால் இதை பார்த்துக் கொண்டிருந்த பாதுகாவலர் ஒருவர் அந்த வயதான நபரை கீழே பிடித்து தள்ளிவிட்டுள்ளார். இதன் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி, நாகார்ஜுனாவிற்கு மட்டுமில்லாமல் தனுஷ் உள்ளிட்டவர்களுக்கும் கண்டனத்தை ஏற்படுத்தியுள்ளது.

Nagarjuna Dhanush Kubera movie tamil cinema

குபேரா பட சூட்டிங்: நடிகர் தனுஷ். நாகார்ஜுனா. ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டவர்கள் நடித்து வரும் குபேரா படத்தின் ஷூட்டிங் இம்மாதத்துடன் நிறைவடையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த படத்தின் சூட்டிங் அடுத்தடுத்து மும்பை மற்றும் ஹைதராபாத் ஆகிய இடங்களில் நடந்து வருகிறது. இந்நிலையில் படத்தின் அடுத்த கட்ட ஷூட்டிங்கிற்காக தனுஷ், நாகார்ஜுனா உள்ளிட்டவர்கள் ஹைதராபாத்திற்கு புறப்பட்டு சென்றனர். அவர்கள் விமான நிலையத்தில் இறங்கி நடந்து சென்று கொண்டிருந்த போது நாகார்ஜுனாவை தொட்டு பேச அவரது தீவிர மற்றும் வயதான ரசிகர் ஒருவர் முயன்றார். இதைப் பார்த்த அவரது பாதுகாவலர் அந்த வயதான நபரை சிறிதும் இரக்கமின்றி தள்ளி விட்டார்.

ரசிகரை கீழே பிடித்து தள்ளிய பாதுகாவலர்: இதனால் நிலைதடுமாறிய அந்த ரசிகர் கீழே விழப் போனார். அவரை அங்கிருந்தவர்கள் தாங்கிப் பிடித்தனர். இந்நிலையில் இதை சிறிதும் கண்டு கொள்ளாமல் நாகார்ஜுனா சென்றதை இந்த வீடியோவில் பார்க்க முடிந்தது. இது மட்டும் இல்லாமல் நாகார்ஜுனா பின்னால் வந்து கொண்டிருந்த தனுஷ் மற்றும் அவரது இளைய மகன் இருவரும் இதை பார்த்தும் எந்த ரியாக்ஷனும் இல்லாமல் தங்களது நடையை தொடர்ந்தனர். இதையடுத்து இந்த வீடியோ சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு நாகார்ஜுனாவின் இந்த செயல்பாடு மிகப்பெரிய விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.

மன்னிப்பு கேட்ட நாகார்ஜுனா: நாகார்ஜுனா சிறிதும் இரக்கம் இல்லாமல் இப்படி நடந்து கொண்டது குறித்து சமூக வலைதளங்களில் ரசிகர்கள் வறுத்தெடுத்து வருகின்றனர். இந்த விவகாரத்தில் தனுஷின் செயலும் மிகப்பெரிய விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது. இந்நிலையில் இந்த விவகாரத்தில் நடிகர் நாகார்ஜுனா மன்னிப்பு கேட்டுள்ளார். இந்த விஷயம் தன்னுடைய கவனத்திற்கு வந்ததாகவும் இதுபோன்ற ஒரு சம்பவம் நடந்திருக்கக்கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் அந்த வயதான ரசிகர்களிடம் தான் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இனி வருங்காலங்களில் இது போன்ற செயல்கள் நடைபெறாத வண்ணம் தான் எச்சரிக்கையாக நடந்துக் கொள்வதாகவும் தன்னுடைய பதிவில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


குபேரா படத்தில் நாகார்ஜுனா: தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் நாகார்ஜுனா. அவர் அவ்வப்போது பிறமொழிப் படங்களிலும் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகிறார். தமிழிலும் முன்னதாக இவரது படங்கள் மாஸ் ஹிட் கொடுத்துள்ளன. கார்த்தியுடன் நாகார்ஜுனா இணைந்து நடித்திருந்த தோழா படம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்திருந்தது. இந்நிலையில் தற்போது தனுஷுடன் இணைந்து குபேரா படத்தில் நடித்து வருகிறார் நாகார்ஜுனா. இந்தப் படத்தில் அவரது லுக் போஸ்டர் வெளியாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்திருந்தது. படம் தமிழ், தெலுங்கில் ரிலீசாகவுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X