பிந்து மாதவியை பாராட்டிய நாகார்ஜுனா... எதுக்குன்னு தெரியுமா?
ஐதராபாத் : நடிகை பிந்து மாதவி தமிழில் தேர்ந்தெடுத்த கதைகளில் நடித்திருப்பவர்.
தமிழ் மட்டுமின்றி தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிப் படங்களிலும் இவர் நடித்துள்ளார்.
தமிழில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமான இவர் தற்போது நான்ஸ்டாப் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார்.

நடிகை பிந்து மாதவி
நடிகை பிந்து மாதவி தமிழில் கேடி பில்லா கில்லாடி ரங்கா, ஜாக்சன் துரை, பசங்க 2 உள்ளிட்ட படங்களில் நடித்து ஏராளமான ரசிகர்களை பெற்றவர். தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் இவர் அதிகமான படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு பெண்ணான இவர் தமிழில் அதிகமான ரசிகர்களை பெற்றுள்ளார்.

தமிழில் அடுத்தடுத்த படங்கள்
தற்போது சசிக்குமாரின் உருவாகிவரும் யாமிருக்க பயமேன், மாயன் மற்றும் புரியாத புதிர் இயக்குநர் ரஞ்சித் இயக்கத்தில் நாயகியை முதன்மை கதாபாத்திரமாக கொண்ட படம் என அடுத்தடுத்த படங்களில் பிந்து மாதவி நடிப்பில் உருவாகி வருகின்றன. இந்தப் படங்களின் சூட்டிங் நிறைவடைந்து ரிலீசுக்கு தயாராகி வருகின்றன.

நான்ஸ்டாப் பிக் பாஸ் நிகழ்ச்சி
முன்னதாக தமிழில் உலக நாயகன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் இவர் கலந்து கொண்டு பரபரப்பை ஏற்படுத்தினார். இந்த நிகழ்ச்சி மூலம் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் கிடைத்தனர். இந்நிலையில் தற்போது தெலுங்கு டிஜிட்டலில் 24 மணிநேரமும் ஒளிபரப்பாகும் நான்ஸ்டாப் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றுள்ளார் பிந்து மாதவி.

பிந்து மாதவிக்கு வரவேற்பு
நடிகர் நாகார்ஜுனா தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில் பிந்து மாதவிக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. தற்போதே பிந்து மாதவி ஆர்மி என பல ட்விட்டர் மற்றும் ஹாஷ்டாக்குகள் இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. இந்தப் நிகழ்ச்சியில் பிந்து மாதவியிடம் நாகார்ஜுனா கேட்ட கேள்வி ரசிகர்களிடைய குஷியை ஏற்படுத்தியுள்ளது.

இதயத்தில் தனியிடம்
போட்டியின் தொகுப்பாளர் நாகார்ஜுனா பிந்து மாதவியிடம் அவருக்கு தமிழ் திரைத்துறை பிடிக்குமா அல்லது தெலுங்கு திரைத்துறை பிடிக்குமா? என்ற கேள்வியை கேட்டார். இரண்டுமே தனக்கு ரொம்ப பிடிக்கும் என்று கூறியுள்ளார். சென்னைக்கு தன் இதயத்தில் எப்போதுமே தனி இடம் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாகார்ஜுனா பாராட்டு
சென்னைக்கும் தனக்கும் மிக ஆழமான உறவு உள்ளதாகவும் சென்னையில் தான் தான் வேலை செய்வதாகவும் கூறியுள்ள பிந்து மாதவி, தன் தாய் மொழி தெலுங்காக இருந்த போதிலும் தமிழ் மற்றும் தெலுங்கு இரண்டுமே தனக்கு ரெண்டு கண்கள் மாதிரி தான் என்று கூறினார். இதை கேட்ட நாகார்ஜுனா சூப்பர் பதில் என்று பிந்து மாதவியை பாராட்டியுள்ளார்.

ரசிகர்கள் வரவேற்பு
இதனிடையே, பிந்து மாதவியின் இந்த பதிலை ரசிகர்கள் மற்றும் பார்வையாளர்கள் சமூக வலைதளங்களில் டிரண்ட் ஆக்கி வருகின்றனர். இந்தப் போட்டி பிந்து மாதவிக்கு தெலுங்கிலும் பெரும் புகழை பெற்றுத்தருமென அவரது ரசிகர்கள் உற்சாகமடைந்து வருகின்றனர். இந்தப் நிகழ்ச்சி பிந்து மாதவிக்கு பட வாய்ப்புகளையும் பெற்றுத் தருமென எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











