Nagarjuna: சோபிதா அதுக்குத்தான் முன்னுரிமை கொடுப்பார்.. மருமகள் குறித்து நாகார்ஜுனா சொன்ன சீக்ரெட்!
ஐதராபாத்: நடிகர் நாக சைத்தன்யா மற்றும் நடிகை சோபிதா துலிபாலாவின் திருமணம் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஐதராபாத்தில் வெகு விமரிசையாக நடைபெற்றது. பெற்றோர் சம்மதத்துடன் சோபிதாவை இரண்டாவதாக நாக சைத்தன்யா திருமணம் செய்துக் கொண்டார். இந்த திருமணம் பல்வேறு விமர்சனங்களையும் வாழ்த்துக்களையும் பெற்றது.
முன்னதாக கடந்த 2017ம் ஆண்டில் நடிகை சமந்தாவை திருமணம் செய்துக் கொண்ட நாக சைத்தன்யா, சில ஆண்டுகளிலேயே அவரை பிரிந்துவிட்டார். இவர்களின் பிரிவுக்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும் சமந்தா தொடர்ந்து நடித்ததே பிரதான காரணமாக கூறப்பட்டது. இதனிடையே சோபிதா தொடர்ந்து நடிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

நாக சைத்தன்யா -சோபிதா திருமணம்: நடிகர் நாகார்ஜுனாவின் மூத்த மகனும் டோலிவுட்டின் பிரபல நடிகருமான நாக சைத்தன்யா கடந்த 2017ம் ஆண்டில் நடிகை சமந்தாவை காதல் மணம் செய்துக் கொண்ட நிலையில் சில ஆண்டுகள் இடைவெளியிலேயே இவர்களின் திருமணம் முடிவுக்கு வந்தது. இதையடுத்து நடிகை சோபிதா துலிபாலாவுடன் டேட்டிங் செய்துவந்த நாக சைத்தன்யா, கடந்த சில வாரங்களுக்கு முன்பு அவரை திருமணம் செய்துக் கொண்டார். பெற்றோர் சம்மதத்துடன் இவர்களின் திருமணம் ஐதராபாத்தில் அன்னபூர்ணா ஸ்டூடியோவில் வெகு விமரிசையாக நடைபெற்றது. பல்வேறு திரைத்துறை பிரபலங்களும் இந்த திருமணத்திற்கு நேரில் வந்திருந்து வாழ்த்துக்களை பகிர்ந்திருந்தனர்.
நாகார்ஜுனா உற்சாகம்: முன்னதாக இவர்களின் நிச்சயதார்த்தமும் சிறப்பாக நடந்த நிலையில், தன்னுடைய மகனின் நிச்சயதார்த்தத்தை கலர்புல் புகைப்படங்களுடன் நடிகர் நாகார்ஜுனா அறிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது திருமண கொண்டாட்டத்திலும் இவர் சிறப்பான வகையில் பொறுப்பான தந்தையாக தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். இந்நிலையில் தன்னுடைய புதிய மருமகள் சோபிதா துலிபாலா குறித்து அவர் பேசியுள்ள விஷயம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் நாக சைத்தன்யாவிற்கு சோபிதா மீது காதல் பிறப்பதற்கு முன்னதாகவே தனக்கு அவரை நன்றாக தெரியும் என்று நாகார்ஜுனா தெரிவித்துள்ளார்.
நாகார்ஜுனா பாராட்டு: மேலும் தன்னுடைய கடினமான உழைப்பாலும் திறமையாலும் சோபிதா தற்போதைய நிலையை அடைந்துள்ளதாகவும் தன்னுடைய வேலையில் எப்போதும் Qualityக்கு சோபிதா முக்கியத்துவம் தருவார் என்றும் நாகார்ஜுனா தெரிவித்துள்ளார். அவரை போன்ற அமைதியான மருமகள் கிடைத்ததற்கு தான் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளதாகவும் கூறியுள்ளார். அடுத்தடுத்து தமிழ் , தெலுங்கு மொழிகளில் நடித்துவரும் சோபிதா துலிபாலா தொடர்ந்து படங்களில் நடிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. முன்னதாக சமந்தா -நாக சைத்தன்யா பிரிவிற்கு, சமந்தா படங்களில் நடித்ததே காரணமாக கூறப்பட்ட நிலையில், தற்போது சோபிதா குறித்து ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
கூலி படத்தில் நாகார்ஜுனா: இதனிடையே, நடிகர் நாகார்ஜுனா தமிழில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்துடன் இணைந்து கூலி படத்தில் நடித்து வருகிறார். படத்தில் சைமன் என்ற கேரக்டரில் அவர் அதிரடி காட்டி வருகிறார். முன்னதாக மற்றொரு பேட்டியில் லோகேஷ் கனகராஜை நாகார்ஜுனா பாராட்டி பேசியிருந்தார். லோகேஷிடம் புதிய வடிவிலான இயக்கத்தை தான் பார்ப்பதாகவும், அவர் கொடுக்கும் கேரக்டரில் நடிப்பது சுதந்திரத்தை உணர வைப்பதாகவும் கூறியிருந்தார்.


Click it and Unblock the Notifications











