Dhanush: தனுஷுடன் இணைந்த தெலுங்கு ஹீரோ நாகர்ஜூனா.. டி51 அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

சென்னை: நடிகர் தனுஷின் கேப்டன் மில்லர் படம் வரும் டிசம்பர் 15ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது.

இந்தப் படத்தை தொடர்ந்து தன்னுடைய டி50 படத்தை இயக்கி தயாரித்து வருகிறார் தனுஷ். கேங்ஸ்டர் படமாக இந்தப் படம் உருவாகி வருகிறது.

இதையடுத்து பிரபல தெலுங்குப்பட இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் இணையவுள்ளார் தனுஷ். இந்தப் படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள் வெளியாகி வருகின்றன.

Actor Nagarjuna joined in Dhanushs D51 movie under sekhar kammula direction

நடிகர் தனுஷின் டி51 படத்தில் இணைந்த நாகர்ஜுனா: நடிகர் தனுஷ் தேர்ந்தெடுத்தக்கதைகளில் நடித்து வருகிறார். துள்ளுவதோ இளமை படத்தில் பள்ளி மாணவனாக துவங்கிய இவரது பயணம் தற்போது பள்ளி ஆசிரியராக வாத்திப் படத்தில் தொடர்ந்துள்ளது. முன்னதாக வெளியான திருச்சிற்றம்பலம் படத்திலும் சரி, அடுத்ததாக வெளியாகவுள்ள கேப்டன் மில்லர் படத்திலும் சரி வித்தியாசமான ஜானர்களில் நடிப்பதை மட்டும் தொடர்ந்து உறுதி செய்து வருகிறார் தனுஷ். கேப்டன் மில்லர் படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கி முடித்துள்ளார்.

முன்னதாக அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் வெளியான ராக்கி, சாணி காயிதம் படங்கள் மிகச்சிறந்த அனுபவங்களை ரசிகர்களுக்கு கொடுத்த நிலையில், அடுத்ததாக தனுஷ் நடிப்பில் வெளியாகவுள்ள கேப்டன் மில்லர் சுதந்திர போராட்ட காலகட்டத்தை முன்னிறுத்தும் படமாக வெளியாகவுள்ளது. இந்தப் படத்திற்காக அந்த காலகட்டத்தில் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கிகள் சகிதம் தனுஷை பார்க்க முடிந்தது. டிசம்பரில் வெளியாகவுள்ள இந்தப் படத்தின் போஸ்டர் மற்றும் டீசர் மிரட்டலாக அமைந்தது.

இந்தப் படத்தை தொடர்ந்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனுஷ் இயக்கிவரும் டி50 படத்தின் சூட்டிங்கும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. கேங்ஸ்டர் படமாக உருவாகிவரும் இந்தப் படத்தில் எஸ்ஜே சூர்யா, அபர்ணா முரளி உள்ளிட்ட நட்த்திரப் பட்டாளமே நடித்துள்ளது. படத்தின் சூட்டிங்கை அக்டோபர் மாதத்திற்குள் நிறைவு செய்துவிட்டு அடுத்ததாக பிரபல தெலுங்குப்பட இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் இணையவுள்ளார் தனுஷ்.

Actor Nagarjuna joined in Dhanushs D51 movie under sekhar kammula direction

இந்தப் படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள் வெளியாகி வருகின்றன. படத்தில் தனுஷின் நாயகியாக ராஷ்மிகா மந்தனா இணைந்துள்ளார். சமீபத்தில் இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து சமூக வலைதளத்தில் தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருந்தார் ராஷ்மிகா. இந்தப் படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் இந்தப் படம் வெளியாகவுள்ளது. முன்னதாக சில மாதங்களுக்கு முன்பு தெலுங்கில் வெளியான தனுஷின் சார் படம் மிகப்பெரிய வசூலை அள்ளியது.

இந்நிலையில் இந்தப் படத்தில் நடிகர் நாகர்ஜூனாவும் முக்கியமான கேமியோ ரோல் ஒன்றில் நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக தனுஷின் டைரக்ஷனில் அறிவிக்கப்பட்டு 35 நாட்கள் சூட்டிங் நடத்தப்பட்ட நான் ருத்ரன் படத்திலும் நாகர்ஜூனா முக்கியமான ரோலில் கமிட்டாகியிருந்தார். அந்தப் படம் ட்ராப் செய்யப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் தனுஷுடன் இணையவுள்ளார் நாகர்ஜூனா. சார் படத்தை தொடர்ந்து தனுஷின் நேரடி தெலுங்குப்படமாக டி51 உருவாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X