Actor Dhanush: தனுஷின் டி51 பட சூட்டிங்கில் இணைந்த நாகார்ஜூனா.. அட இந்த பாலிவுட் நடிகரும் இருக்காரா!

சென்னை: நடிகர் தனுஷ் அடுத்தடுத்து நடிப்பு, தயாரிப்பு, இயக்கம், பாடகர், பாடலாசிரியர் என பன்முகம் காட்டி வருகிறார். இவரது நடிப்பில் கடந்த 12ம் தேதி திரையரங்குகளில் வெளியானது கேப்டன் மில்லர். படம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து தற்போது 100 கோடி கிளப்பிலும் இணைந்துள்ளது. தற்போது தெலுங்கிலும் படம் வெளியாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வருகிறது. தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு, இந்தி மற்றும் ஹாலிவுட் படங்களிலும் நடித்துவரும் தனுஷிற்கு ஒவ்வொரு மொழியிலும் ரசிகர்கள் காணப்படுகின்றனர். கடந்த ஆண்டில் வெளியான வாத்தி படம் தெலுங்கிலும் சார் என்ற பெயரில் வெளியாகி சிறப்பான வெற்றியை பெற்றது.

இந்நிலையில் தற்போது சேகர் கம்முலா இயக்கத்தில் தனது டி51 படத்தில் கமிட்டாகி நடித்து வருகிறார் தனுஷ். இந்தப் படத்தின் சூட்டிங் கடந்த சில தினங்களுக்கு முன்பு துவங்கப்பட்டது. படத்தில் நாகார்ஜூனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடிக்க கமிட்டாகியுள்ளனர். கடந்த சில தினங்களால் இந்தப் படத்தில் தனுஷ் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டன. இந்நிலையில் இன்று முதல் படத்தின் சூட்டிங்கில் நாகார்ஜூனா இணைந்துள்ளார். படத்தின் நாயகி ராஷ்மிகா மந்தனா, அடுத்த மாதத்தில் டி51 படத்தின் சூட்டிங்கில் இணையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Actor Nagarjuna joins the sets of Dhanushs D51 movie with Director Sekhar kammula

நடிகர் தனுஷ்: நடிகர் தனுஷ் அடுத்தடுத்து தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கில மொழிப்படங்களில் நடித்து சர்வதேச அளவில் தன்னை சிறப்பான ஹீரோவாக நிலைநிறுத்தி வருகிறார். சமீபத்தில் அவரது கேப்டன் மில்லர் படம் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் பொங்கல் கொண்டாட்டமாக வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து 100 கோடி கிளப்பில் இணைந்துள்ளது. தொடர்ந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. தற்போது தெலுங்கிலும் கேப்டன் மில்லர் படம் வெளியாகியுள்ளது. தெலுங்கிலும் ஏராளமான ரசிகர்களை கொண்டவராக இருக்கும் தனுஷிற்கு இந்தப் படமும் நல்ல வெற்றியை கொடுக்கும் என்று நம்பலாம்.

தனுஷ் இயக்கத்தில் படங்கள்: இந்நிலையில் தன்னுடைய இயக்கம் மற்றும் நடிப்பில் அடுத்தடுத்த படங்களை இயக்கியுள்ளார் தனுஷ். இதில் அவரது டி50 படம் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூட்டிங் நிறைவடைந்துள்ளது. விரைவில் இந்தப் படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் வெளியாகவுள்ளதாக கூறப்படும் நிலையில் படத்திற்கு ராயன் என்று பெயர் வைக்கப்படலாம் என்று கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தை பேமிலி கேங்ஸ்டர் கதைக்களத்தில் எடுத்து முடித்துள்ளார் தனுஷ். படத்தில் எஸ்ஜே சூர்யா, சந்தீப் கிஷன், அபர்ணா முரளி, துஷாரா விஜயன் உள்ளிட்டவர்களுடன் தனுஷும் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார். இதற்காக லேசான தலைமுடியுடன் கூடிய கெட்டப்பில் அவர் காணப்பட்டார்.

தனுஷ் -சேகர் கம்முலா கூட்டணி: இந்தப் படத்தை தொடர்ந்து தன்னுடைய தயாரிப்பு, இயக்கம் மற்றும் நடிப்பில் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தின் சூட்டிங்கையும் 70 சதவிகிதம் எடுத்து முடித்துள்ளார். இதனிடையே முன்னதாக கமிட்டானபடி தற்போது சேகர் கம்முலா இயக்கத்தில் இணைந்துள்ளார். படத்தின் சூட்டிங் கடந்த சில தினங்களுக்கு முன்பு பூஜையுடன் துவங்கிய நிலையில், தனுஷ் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டன. தமிழ், தெலுங்கில் வெளியாகவுள்ள இந்தப் படத்தில் நாகார்ஜூனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடிக்கவுள்ள நிலையில், படத்தின் சூட்டிங்கில் இன்றைய தினம் நாகார்ஜூனா இணைந்துள்ளார்.

Actor Nagarjuna joins the sets of Dhanushs D51 movie with Director Sekhar kammula

டி51 படத்தில் பாலிவுட் நடிகர் ஜிம் சர்ப்: படத்தின் நாயகி ராஷ்மிகா மந்தனா அடுத்த மாதத்தில்தான் இந்தப் படத்தின் சூட்டிங்கில் இணைகிறார். தனுஷ், நாகார்ஜூனாவுடன் இணைந்து நடிப்பது குறித்து அவர் பேட்டியொன்றில் மிகுந்த உற்சாகத்தை வெளிப்படுத்தியிருந்தார். இந்நிலையில் டி51 படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் ஜிம் சர்ப் இணைந்துள்ளார். பாலிவுட் படங்கள் மற்றும் மேடை நாடகங்களில் பிரபலமான இவர், ராக்கெட் பாய்சில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக கடந்த ஆண்டில் சர்வதேச எம்மி விருதுகளில் சிறந்த நடிப்பிற்காக பரிந்துரைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. பான் இந்தியா படமாக டி51 உருவாகிவரும் சூழலில் ஜிம் சர்ப் இந்தப் படத்தில் இணைந்துள்ளது சிறப்பாக பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X