Rajinikanth: கூலி படத்தில் அந்த விஷயம்.. லோகேஷ் கனகராஜ் குறித்து பேசிய நாகார்ஜுனா!

ஐதராபாத்: நடிகர் ரஜினிகாந்த் அடுத்தடுத்து இளம் இயக்குநர்களுடன் இணைந்து வெற்றி படங்களை கொடுத்து வருகிறார். அந்த வகையில் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவருடன் நாகார்ஜுனா, ஸ்ருதிஹாசன், உபேந்திரா, சத்யராஜ் உள்ளிட்டவர்கள் நடித்து வருகின்றனர்.

கூலி படத்தின் சூட்டிங் அடுத்தடுத்து ஐதராபாத் மற்றும் சென்னை ஆகிய இடங்களில் பிரம்மாண்டமான செட் போடப்பட்டு நடந்து வருகின்றன. அதிரடி ஆக்ஷன் படமாக உருவாகிவரும் இந்தப்படத்தில் தங்கக்கடத்தலை மையமாக கொண்டு லோகேஷ் கனகராஜ் கதைக்களத்தை உருவாக்கியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த படம் அடுத்த ஆண்டு கோடை கொண்டாட்டமாக வெளியாக உள்ளதாக படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது.

rajinikanth coolie movie nagarjuna

நடிகர் ரஜினிகாந்த்: நடிகர் ரஜினிகாந்த், நாகார்ஜுனா, உபேந்திரா, ஸ்ருதிஹாசன், சத்யராஜ் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து வரும் கூலி படத்தின் சூட்டிங் அடுத்தடுத்து சென்னை மற்றும் ஹைதராபாத் ஆகிய இடங்களில் பிரம்மாண்டமான செட்கள் போடப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது. தற்போது இந்த படத்தின் ஷூட்டிங் சென்னையில் நடைபெற்று வரும் நிலையில் படத்தின் ஷூட்டிங்கில் ரஜினிகாந்துடன் ஸ்ருதிஹாசன், நாகார்ஜுனா உள்ளிட்டவர்கள் பங்கேற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்தப் படம் அடுத்த ஆண்டு கோடைக் கொண்டாட்டமாக மே மாதத்தில் ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

கூலி படம்: சன் பிக்சர்ஸ் நிறுவன தயாரிப்பாக உருவாகிவரும் கூலி படத்தில் தங்கக்கடத்தலை மையமாக கொண்டு கதைக்களத்தை இயக்குநர் உருவாக்கியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் ரஜினிகாந்திற்கு அதிகமான அதிரடி ஆக்ஷன் காட்சிகள் அமையவுள்ளதாக முன்னதாக லோகேஷ் கனகராஜ் தன்னுடைய பேட்டியில் கூறியிருந்தார். இந்தப் படத்தின் சூட்டிங் விசாகப்பட்டினத்தில் அதிகமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது சென்னையில் அடுத்தடுத்த சண்டைக் காட்சிகளின் சூட்டிங் நடத்தப்பட உள்ளதாகவும் படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து படத்தின் ஒட்டுமொத்த சூட்டிங்கும் ஏறக்குறைய நிறைவடையவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

நாகார்ஜுனா பாராட்டு: இந்தப் படத்தை தொடர்ந்து மீண்டும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பிலேயே ஜெயிலர் 2 படத்தில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் இணையவுள்ளது ஏறக்குறைய உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கூலி படம் குறித்தும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் குறித்தும் பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா தனது பேட்டியொன்றில் பேசியுள்ளார். முன்னதாக தமிழில் சில படங்களில் நடித்துள்ள இவரது நடிப்பில் அடுத்ததாக குபேரா படம் ரிலீசாகவுள்ளது. இந்தப் படத்தில் தனுஷுடன் இணைந்து நடித்துள்ளார் நாகார்ஜுனா. இந்நிலையில் கூலி படத்தில் இளைய தலைமுறையை கருத்தில் கொண்டு லோகேஷ் கனகராஜ் படத்தை உருவாக்கி வருவதாக அவர் பாராட்டியுள்ளார்.

சுதந்திரமாக இயங்கும் லோகேஷ் கனகராஜ்: கூலி படத்தை அவர் எந்தவிதமான கட்டுப்பாடும் இல்லாமல் சுதந்திரமாக இயக்கி வருவதாகவும் அனைத்து கேரக்டர்களையும் அவர் எந்தவிதமான கட்டுப்பாடும் இல்லாமல் இயக்கி வருவதாகவும் கூறியுள்ளார். அவரது இந்த அணுகுமுறை தன்னை மிகவும் உற்சாகப்படுத்தி வருவதாகவும் இந்தப் படத்தை தான் மிகவும் எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கூலி மற்றும் குபேரா படங்களில் தன்னுடைய கேரக்டர் குறித்தும் அவர் உற்சாகம் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X