twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பொன்னியின் செல்வன் -பாகுபலி மோதல்.. நாகார்ஜுனா என்ன சொல்லியிருக்காருன்னு பாருங்க!

    |

    சென்னை : பொன்னியின் செல்வன் தற்போது 4 நாட்களை கடந்து வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடி வருகிறது.

    இந்தப் படத்தின் வெற்றி வரலாற்றைத் தெரிந்துக் கொள்ளும் அந்த பிரம்மாண்டத்தை திரையில் பார்க்கும் மக்களின் ஆர்வத்தை எடுத்துக் காட்டியுள்ளது.

    முன்னதாக தமிழகத்தில் வெளியான பாகுபலி படங்களின் வெற்றியும் இதையே வெளிக்காட்டியுள்ளது.

    பொன்னியின் செல்வன் படம் பார்த்தாச்சா..யார் இந்த நந்தினி?ஆதித்த கரிகாலனை கொல்ல துடிப்பது ஏன்? பொன்னியின் செல்வன் படம் பார்த்தாச்சா..யார் இந்த நந்தினி?ஆதித்த கரிகாலனை கொல்ல துடிப்பது ஏன்?

    பொன்னியின் செல்வன் படம்

    பொன்னியின் செல்வன் படம்

    நடிகர்கள் ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உள்ளிட்டவர்களின் நடிப்பில் கடந்த சில தினங்களுக்கு முன்பு திரையரங்குகளில் வெளியான பொன்னியின் செல்வன் படம் 4 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடி வருகிறது. 4 நாட்களில் சர்வதேச பாக்ஸ் ஆபீஸ் கலெக்ஷனாக 250 கோடி ரூபாயை தாண்டியுள்ளது

    ஸ்கோர் செய்த மணிரத்னம்

    ஸ்கோர் செய்த மணிரத்னம்

    இந்தப் படத்தின் கேரக்டர்கள் தேர்வு, திரைக்கதை அமைப்பு, வரலாற்றுப் பின்னணியில் அமைந்த பொன்னியின் செல்வம் கதையை உள்வாங்கி அதை காட்சிகளாக கொண்டுவந்த நேர்த்தி உள்ளிட்டவற்றில் இயக்குநர் மணிரத்னம் ஸ்கோர் செய்துள்ளார். படத்தின் பிரம்மாண்டம் படத்தின் வெற்றிக்கு முக்கியமான காரணமாக அமைந்துள்ளது.

    மணிரத்னத்தின் தாகம்

    மணிரத்னத்தின் தாகம்

    மணிரத்னத்தின் பல ஆண்டு கனவே படமாக அமைந்துள்ள நிலையில், அந்தக்கதையை திரைவடிவமாக கொடுக்க நினைத்த அவரின் தாகமே இந்தப் படத்தை 150 நாட்களில் எடுக்க மிகவும் உறுதுணையாக இருந்திருக்க வேண்டும். இதே பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களையும் எடுத்து முடிக்க ராஜமௌலிக்கு 5 ஆண்டுகள் பிடித்ததாக அவரே கூறியுள்ளார்.

    தெலுங்கு ரசிகர்கள் வாக்குவாதம்

    தெலுங்கு ரசிகர்கள் வாக்குவாதம்

    இதனிடையே பொன்னியின் செல்வன் படம் வெளியானவுடன் இணையதளத்தில் தெலுங்கு மற்றும் தமிழ் ரசிகர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பாகுபலி படம் தான் பெஸ்ட் என்று தெலுங்கு ரசிகர்கள் பொன்னியின் செல்வன் படத்தை குறைகூறி வந்தனர். தெலுங்குப் படங்களை நாம் கொண்டாடிவரும் நிலையில், அவர்களின் இந்த நிலைப்பாடு குறித்து தமிழ் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர்.

    நாகர்ஜுனா கருத்து

    நாகர்ஜுனா கருத்து

    இதனிடையே தன்னுடைய படத்தின் பிரமோஷனுக்காக சென்னை வந்த தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், இதையெல்லாம் கண்டுக் கொள்ள வேண்டாம் என்று தெரிவித்துள்ளார். தான் படத்தை பார்த்ததாகவும் குறிப்பாக பொன்னியின் செல்வன் நாவலை முன்னதாக படித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

    English summary
    Actor Nagarjuna on Ponniyin selvan vs Bahubali issue and says dont care about that
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X