''83'' படத்திற்கு பெருகும் ஆதரவு.. தெலுங்கில் நாகார்ஜுன் வெளியிடுகிறார்!
ஐதராபாத்: நாகார்ஜுனாவின் தயாரிப்பு நிறுவனமான அன்னபூர்ணா ஸ்டுடியோஸ் "83" என்ற படத்தை தெலுங்கில் வெளியிடுகிறது.
தெலுங்கு சினிமாவில் உச்ச நட்சத்திரங்கள் இரண்டு பேர் அதில் ஒருவர் தான் நாகேஷ்வரராவ் தெலுங்கு சினிமாவை ஆண்டவர்களில் இவரும் ஒருவர். இவர் நடித்த அனைத்து படங்களும் வசூல் சாதனை புரிந்தன. இவர் படங்களில் தொடர்ந்து நடிக்க இவரது ஸ்டார் வேல்யு கூடி கொண்டே போனது.

இவரது மகன் தான் நாகார்ஜுனா தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழி படங்களில் நடித்து வருபவர். பல படங்களை தயாரித்தும் உள்ளார். இவர் தெலுங்கு சினிமாவின் கிங் என்று அழைக்கப்பட்டார். இவரது படங்கள் அங்கு சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது.
இவர் நடித்த அண்ணமயா படம் அங்கு வசூல் சாதனை புரிந்தது. இப்படத்திற்காக இவருக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது வழங்கப்பட்டது.
இவரது அப்பா துவங்கியது தான் அன்னபூர்ணா ஸ்டுடியோஸ். தற்போது ரன்வீர் சிங் நடித்து வரும் "83" என்ற படத்தை நாகார்ஜுனாவின் நிறுவனம் தெலுங்கு பதிப்பை வெளியிடுகிறது.
இப்படம் 1983 ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணி உலகக்கோப்பை கைபற்றியது பற்றிய படம். மேலும் இப்படம் வரும் ஏப்ரல் மாதம் 10 ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது.
இதனை தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் வெளியிட உள்ளனர்.
கமல்ஹாசனின் தயாரிப்பு நிறுவனம் ராஜ் கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் எண்டர்டெயின்மெண்ட், ஓய் நாட் ஸ்டுடியோஸ் இணைந்து 83 படத்தின் தமிழ் பதிப்பை வெளியிட உள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











