Kubera movie: கட்டுக்கட்டாக பணம்.. வெளியானது குபேரா படத்தில் நாகார்ஜூனா பர்ஸ்ட் லுக்!

சென்னை: நடிகர் தனுஷ் நடிப்பில் அடுத்தடுத்த படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன. அந்த வகையில் அவரது இயக்கம் மற்றும் நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ளது ராயன் படம். இந்தப்படம் வரும் ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து விரைவில் அப்டேட் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து படத்தின் டீசரும் வெளியாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

முன்னதாக நடிகர் தனுஷ் -சேகர் கம்முலா கூட்டணியில் உருவாகி வரும் குபேரா படத்தில் தனுஷின் பர்ஸ்ட் லுக் வெளியானது. இதில் தனுஷ் யாசகன் லுக்கில் காணப்பட்டார். இந்நிலையில், இன்றைய தினம் படத்தில் நடிகர் நாகார்ஜுனா கேரக்டரின் ஃபர்ஸ்ட் லுக் கிளிம்ப்ஸ் வெளியாகி உள்ளது. இது ரசிகர்களை கவரும் வகையில் அமைந்துள்ளது.

Actor Nagarjuna s first look glimpse in Kubera movie released

நடிகர் தனுஷ்: நடிகர் தனுஷின் குபேரா படம் தற்போது மும்பை, ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் ஷூட்டிங் நடத்தப்பட்டு வருகிறது. இந்த படத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து வருகின்றனர். படத்தை பிரபல தெலுங்கு பட இயக்குனர் சேகர் கம்முலா இயக்கி வருகிறார். படம் பான் இந்தியா படமாக ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த படத்தின் நடிகர் தனுஷின் ஃபர்ஸ்ட் லுக் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியானது. இதில் யாசகன் லுக்கில் நடிகர் தனுஷ் காணப்பட்டார். இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் படத்திற்கான எதிர்பார்ப்பை எகிற செய்துள்ளது.

குபேரா பட அப்டேட்: இந்நிலையில் இந்த படத்தின் அடுத்த அப்டேட்டை படக்குழுவினர் இன்றைய தினம் வெளியிட்டுள்ளனர். நடிகர் தனுஷ் நடிப்பில் ராயன் படம் ரிலீசுக்கு தயாராகியுள்ள சூழலில் இந்தப்படம் ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் ராயன் படத்தின் டீசர் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருந்தனர். ஆனால் ஷூட்டிங்கில் இருக்கும் தனுஷ் -சேகர் கம்முலா கூட்டணியில் உருவாகி வரும் குபேரா படத்தின் அடுத்த அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. இந்த படத்தின் நாகார்ஜூனா கேரக்டர் கிளிம்ப்ஸ் தற்போது வெளியாகியுள்ளது.

நாகார்ஜூனா ஃபர்ஸ்ட் லுக்: இதில் கட்டு கட்டாக பணம் காணப்படுகிறது. இதையடுத்து மழையில் குடை பிடித்தபடி நடந்து வரும் நாகார்ஜுனா, கீழே கிடக்கும் ஒரு ரூபாய் நோட்டை எடுத்து அந்த கட்டில் சேர்ப்பதாக இந்த கிளிம்ப்சில் காணப்படுகிறது. இதில் நாகார்ஜுனா கண்ணாடி போட்டுக்கொண்டு சிறப்பான லுக்கிங் காணப்படுகிறார். படத்தில் அவரது கேரக்டர் வில்லன் என்று கூறப்பட்டுள்ள சூழலில் பணக்கட்டுகளுடன் அவர் காணப்படுவது படத்தின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. முன்னதாக தெலுங்குப்பட இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடித்து வெளியான வாத்தி படம் மிகப்பெரிய அளவில் ஹிட்டடித்தது.

விரைவில் ராயன் ரிலீஸ்: இந்தப் படம் தமிழில் மட்டும் இல்லாமல் தெலுங்கிலும் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து 100 கோடி கிளப்பில் இணைந்தது. இந்நிலையில் தற்போது மீண்டும் தெலுங்கு பட இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் குபேரா படத்தில் இணைந்துள்ளார். இந்தப் படமும் ரசிகர்களை வெகுவாக கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே ராயன் படம் விரைவில் வெளியாகவுள்ள சூழலில் இந்த படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. முன்னதாக படத்தின் கேரக்டர் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்த சூழலில் அடுத்ததாக படத்தின் டீசர் உள்ளிட்டவை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X