கில்லி ரிலீஸ் போது மிஸ்ஸானது.. 20 வருஷம் கழிச்சு ரீ-ரிலீஸில் நடந்திருக்கு.. நாகேந்திர பிரசாத் எமோஷனல்
சென்னை: நடிகர் விஜய் நடிப்பில் வெளியான கில்லி திரைப்படம் 20 வருடம் கழித்து மீண்டும் ரிலீஸ் செய்யப்பட்டு இருக்கும் நிலையில் அந்த திரைப்படத்தில் நடித்த நடிகர் மற்றும் டான்ஸ் மாஸ்டர் நாகேந்திர பிரசாத் கில்லி திரைப்பட அனுபவங்கள் குறித்து மனம் திறந்து பேசி இருக்கிறார்.
அதில் 20 வருடங்களுக்கு முன்பு கில்லி திரைப்படம் வெளியாகும் போது தான் தியேட்டரில் இருக்கும் வரவேற்பை பார்க்க முடியாமல் போய்விட்டது. ஆனால் இப்போது 20 வருடங்களுக்கு பிறகு இந்த திரைப்படத்திற்கு இருக்கும் வரவேற்பை பார்த்து மெய்சிலிர்த்து போனேன் என்று கூறியிருக்கிறார்.

அந்த வகையில் ஒரு சில திரைப்படங்கள்தான் காலத்திற்கும் நிலைத்து நிற்கும். அந்த வகையில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான கில்லி திரைப்படம் 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் திரைப்படம். இந்த திரைப்படம் எப்போது தொலைக்காட்சியில் ஒளிபரப்பானாலும் அதை முதல் முறை பார்ப்பது போன்று அசையாமல் பார்த்துக் கொண்டிருக்கும் ரசிகர்கள் ஏராளம்.
விஜய் ரசிகர்கள் மட்டுமல்லாமல் மற்ற நடிகர்களின் ரசிகர்களும் கில்லி திரைப்படத்திற்கு ரசிகர்களாக இருக்கின்றனர். அதோடு இந்த திரைப்படம் ஒளிபரப்பாகும் போது அதில் வரும் வசனங்கள் மற்றும் பாடலை மனப்பாடமாக சொல்லும் ரசிகர்கள் ஏராளமாக இருக்கின்றனர். அதை உறுதி செய்யும் விதமாகத்தான் சமீபத்தில் கில்லி திரைப்படம் ரீ ரிலீஸ் செய்யப்படும் தியேட்டரில் "கொக்கர கொக்கரக்கோ" என்ற பாடல் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும்போது பாடலின் சவுண்ட் திடீரென்று குறைந்தாலும் தியேட்டரில் இருந்த ரசிகர்கள் பாடிய பாடல் காதை பிளக்க வைத்திருந்தது.
இந்த அளவிற்கு கில்லி திரைப்படம் ரீ ரிலீஸ் மக்களை தியேட்டருக்கு இழுத்து கொண்டு இருக்கிறது. இந்த நிலையில் இந்த திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்த நாகேந்திர பிரசாத் இந்த திரைப்படத்தில் தான் நடிக்கும் போது ஏற்பட்ட அனுபவங்கள் குறித்து பேசி இருக்கிறார். அதில்
கில்லி திரைப்படத்தின் ரீ- ரிலீஸை முதல் நாளே நான் பார்த்துட்டேன்.
தியேட்டரில் புதுசா ரிலீஸ் ஆன படம் மாதிரி கொண்டாடுறாங்க. நான் போன தியேட்டர் திருவிழா மாதிரி இருந்துச்சு. அந்த படத்தில் நடிச்ச எனக்கே படத்தை 20 வருஷம் கழிச்சு பார்க்கிறப்போ ரொம்ப பிரஷ்ஷா இருந்துச்சு... மக்களுக்கு சொல்லவா வேணும்? 2004 இல் கில்லி படம் ரிலீஸ் ஆன போது நான் சென்னையிலேயே இல்லை. அப்போ ரசிகர்களுடைய கொண்டாட்டத்தை பார்க்க முடியவில்லை. எனக்கு அது ஒரு குறை ஆகவே இருந்துச்சு.
இப்போ இருபது வருஷம் கழிச்சு எனக்கு இருந்த குறை போயிடுச்சு. இப்படி எல்லாம் நடக்கணும்னு நான் நினைச்சு கூட பார்க்கல. இந்த அனுபவத்தை எனக்கு கொடுத்தது இயக்குனர் தரணி சார்தான். அவருக்கு நான் எப்போதும் நன்றி சொல்லிக்கிட்டே இருப்பேன். அதோடு தரணி சார் எனக்கு கேரக்டருக்கு ரொம்பவே முக்கியத்துவம் கொடுத்தார்.
எனக்கு மட்டுமல்லாமல் அந்த படத்தில் நடிச்ச எல்லா நடிகர்களுக்கும் அவர்களுடைய முழு திறமையும் படத்திற்குள் கொண்டு வரனும்னு மெனக்கெட்டார். எனக்கு சண்டை காட்சிகளில் நடிப்பது பிடிக்கும் என்பதால் எனக்கு சில ஸ்டண்ட் ஷார்ட்ஸ் வச்சார். அதை நான் பண்றதை பார்த்து விஜய், "பிரசாத் நீ ரொம்ப நல்லா பண்ணுறியேன்னு சொன்னார்".
அது மட்டும் அல்லாமல் 7 ஏக்கரில் மகாபலிபுரத்தில் தான் அந்த படத்துக்கான ஷெட் போட்டு இருந்தாங்க. அதில் தான் நாங்க எல்லோரும் ஒரே குடும்பமாக இருந்தோம். அதை என்னைக்குமே மறக்க முடியாது என்று நெகிழ்ச்சியாக நாகேந்திர பிரசாத் பேசியிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











