twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தலைமுறை தாண்டி மனதில் நிற்கும் நகைச்சுவை மன்னன் நாகேஷ் - இன்று நாகேஷ் பிறந்தநாள்

    இன்று நடிகர் நாகேஷ் அவர்களின் பிறந்த நாள்.. இந்தியாவின் ஜெர்ரி லூயிஸ் என்று புகழப்பட்ட ஒப்பற்ற கலைஞனைப் பற்றி இந்த நாளில் நினைவுகூர்வதால் பெருமை அடைவோம்.

    |

    சென்னை: நாகேஷ் என்றால் டைமிங் டைமிங் என்றால் நாகேஷ்.. டயலாக் டெலிவரியின் டிக்‌ஷ்னரி நாகேஷ் என்றால் மிகையாகாது. இன்று நடிகர் நாகேஷ் அவர்களின் பிறந்த நாள். இந்தியாவின் "ஜெர்ரி லூயிஸ்" என்று புகழப்பட்ட ஒப்பற்ற கலைஞனைப் பற்றி இந்த நாளில் நினைவுகூர்வதால் பெருமை அடைவோம்.

    சொந்த ஊர் தாராபுரம் ரயில்வே அமெச்சூர் நாடக நடிகராக இருந்து கே. பாலச்சந்தரால் அறிமுகமானவர். இவரது முதல் படம் தாமரைக்குளம் கடைசி படம் கோச்சடையான். 1958 முதல் 2008 வரை ஆயிரக்கணக்கான படங்களில் நடித்து ரசிகர்களை சிரிக்க வைத்த நகைச்சுவை மன்னன் என்றால் மிகையாகாது.

    ஒல்லியான உருவ அமைப்பை பெற்ற இவரது இயற்பெயரும் உங்களை சிரிக்கவைக்கும்.!ஆம் நாகேஷின் இயற்பெயர் குண்டு ராவ். துணை நடிகராக தனது பயணத்தை தொடங்கி பிற்காலத்தில், கதாநாயகனாக நடித்து பல வெற்றி படங்களை தந்திருக்கிறார். இவரின் பெரும்பாலான படங்களில் துணை நடிகராகவே நடித்திருந்தாலும் அனைவரின் கவனமும் இவர் மீதே இருந்தது.

    குண்டு ராவ் டூ நாகேஷ்

    குண்டு ராவ் டூ நாகேஷ்

    தமிழகத்திற்கு நாகேஷ் எனும் கலைஞனை அடையாளம் காட்டினார் எம்ஜிஆர். நாடகங்களில்தான் நடித்துக் கொண்டிருந்தார், அப்பொழுது ஒரு நாடகத்திற்கு தலைமைதாங்க எம்ஜி ராமச்சந்திரனை அழைத்தார்கள், நாடகத்தில் நாகேஸ்வரன் எனும் பாத்திரத்தில் சில நொடிகள் வந்தார் அந்த குண்டுராவ், ஆனால் அந்த வயிற்றுவலி நோயாளி வேடத்தில் பின்னி எடுத்தார். அதனை ரசித்த எம்ஜிஆர், பின்பு மேடைக்கே அழைத்து ஒரு கோப்பை வழங்கினார்,

    நடன கலைஞன்

    நடன கலைஞன்

    உடல் மொழியிலும் தனித்துவம் படைத்தவர் புகழ் பெற்ற ஹாலிவுட் நடிகர்களான பஸ்டர் கீட்டன் மற்றும் ஜெர்ரி லூயிஸ் இருவரின் கலவை இவர்.!

    ஆனால் அவர்களது சாயல் இருக்காது. தனக்கென தனி ஸ்டைலை உருவாக்கி கொண்டவர்! ஒட்டக நடை ஸ்டைலில் தனது நடன பாணியை அறிமுகப் படுத்தி வெற்றி கண்டவர். அவரின் பல நடனங்கள் அற்புதமானவை. பல திறன் கொண்ட நடிகர் அவர். நடிப்பில் தன் முன்னால் நிற்கும் நடிகர்கள் யாராயினும் அசால்ட்டாக நடிப்பில் தூக்கி சாப்பிடுவார்.

    நான்கு தலைமுறையோடு நடித்தவர்

    நான்கு தலைமுறையோடு நடித்தவர்

    எதிர்நீச்சல் படத்தில் மாதுவாக வாழ்ந்தார். சர்வர் சுந்தரம், காதலிக்க நேரமில்லை சினிமா செல்லப்பா, திருவிளையாடல் படத்தில் சில நிமிடங்களே வரும் தருமி தில்லானா மோகனாம்பாள் படத்தில் வைத்தி ஆகிய கதாபாத்திரங்கள் இவருக்கு புகழை பெற்றுத்தந்தன. கிட்டதட்ட 4 தலைமுறை நடிகர்களோடு நெடிய பயணம் செய்தவர் அவர். ஆயிரக்கணக்கான படங்களில் நடித்திருக்கிறார். கோச்சடையான் அவரது கடைசி படம்.

    சோகங்களும் அதிகம்

    சோகங்களும் அதிகம்

    சோகங்களும் அவருக்கு ஏராளம் இருந்தது, ஆனால் ஒன்றையும் வெளிகாட்டவில்லை. உதாரணம் தன் முகத்தில் கொட்டிகிடக்கும் அம்மை தழும்புகள் பற்றி அவர் இப்படி சொன்னார். "அம்மி நல்லா அரைக்கணும்ணா கொத்துவாங்க, ஆண்டவன் நல்லா நடிடாண்ணு என் முகத்துல நல்லா கொத்திட்டான் தன் குறைகளை கூட சிரித்துக்கொண்டே நகைச்சுவையாக சொன்ன பிறவி கலைஞன் நாகேஷ்.

    மகா கலைஞனை கொண்டாடுவோம்

    மகா கலைஞனை கொண்டாடுவோம்

    இவரின் நடிப்பு, உடல்மொழி, பாவம் அனைத்தும் ஜெர்ரியை போன்றே இருக்கும் என்பதால் இவரை பலரும், இந்தியாவின் ஜெர்ரி லூயிஸ் என்று அழைத்தனர். 1974ம் ஆண்டு இவருக்கு கலைமாமணி விருது வழங்கப்பட்டது. பின்னர், தமிழக அரசு சார்பில், 1994ம் ஆண்டு நம்மவர் விருது பெற்றார். 2009ம் ஆண்டு ஜனவரி மாதம் 31ம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார். அவரது பிறந்தநாள் கொண்டாடப்படும் இந்த நாளில் மாபெரும் அந்த கலைஞனை நினைவு கூர்வோம்.

    Read more about: nagesh நாகேஷ்
    English summary
    Today is late legendary actor Nagesh's birthday. Happy Birthday Nagesh Remembering the legendary comedian actor.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X