பழம்பெரும் நடிகர் நாகேஷின் பேரன் நடிகனானார்!
தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர்கள் அதிகரித்து வருகின்றனர். அப்பா, மகன் என்ற காலம் போய் தாத்தா வழியில் பேரன்கள்
திரைப்படங்களில் நடிக்க வருகின்றனர்.
நடிகர் திலகம் சிவாஜி கணேசன், டணால் தங்கவேலு, ஜெமினிகணேசன் ஆகியோரின் பேரன்கள் வரிசையில் தற்போது மறைந்த பழம்பெரும் காமெடி நடிகர் நாகேஷின் பேரன் கஜேஷ் ஆனந்த் நடிகராக அறிமுகம் ஆகியுள்ளார்.
இவர் நடிகர் ஆனந்த பாபுவின் மகனாவார். ஏ.எம்.நந்தகுமார் இயக்கும் படத்தில் அவர் நடிக்கிறார். இப்படத்துக்கு இன்னும் பெயரிடப்படவில்லை. இதன் படப்பிடிப்பு துவங்கியுள்ளது.

ஓட்டல் டூ சினிமா சூட்டிங்
கஜேஷ் ஆனந்த் ஓட்டல் நிர்வாகம் பற்றி படித்துள்ளார். வேலைக்காக சிங்கப்பூர் செல்ல இருந்த நிலையில் நடிப்பதற்கு வாய்ப்பு வந்ததால் தற்போது ஹீரோவாகிவிட்டார்.

சூட்டிங் பார்த்ததில்லை
கஜேஷ்க்கு 18 வயது இருக்கும் போது தாத்தா நாகேஷ் மறைந்து விட்டார். தந்தை ஆனந்த் பாபு நடிகராக இருந்தும் கூட படப்பிடிப்பு நடந்த பகுதிகளுக்கு போனது இல்லையாம் சினிமாவை விட்டு விலகியே இருந்த அவர் இப்போது நடிக்க வந்துவிட்டார்.

தாத்தாவின் ஆசிர்வாதம்
கஜேஷ் ஆனந்த் நடிப்பு மற்றும் நடன பயிற்சிகள் எடுத்து வருகிறார்.சினிமாவில் வளர தாத்தாவின் ஆசீர்வாதம் எனக்கு கிடைக்கும் என்றும் கூறியுள்ளார்.

நடிகர் டணால் தங்கவேலுவின் பேரன்
கலைந்த கனவுகள் என்ற திரைப்படத்தின் மூலம் பழம்பெரும் நகைச்சுவை நடிகர் டனால் தங்கவேலுவின் பேரன் அஸ்வின் ஹீரோவாக அறிமுமாகியுள்ளார்.

ஜெமினிகணேசன் பேரன்
சாவித்திரி,ஜெமினிகணேசன் தம்பதியரின் மகள் வயிற்றுப் பேரன்அபிநய், ராமானுஜராக நடிக்கிறார்.

சிவாஜி கணேசன் பேரன்
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பேரனும் நடிகர் பிரபுவின் மகனுமாகிய விக்ரம் பிரபு கும்கி படத்தில் அறிமுகமானார். இப்போது தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.


Click it and Unblock the Notifications











