என் வாழ்க்கையிலும் அந்த மேஜிக்.. பெண் குழந்தைக்கு அப்பா ஆனார் நடிகர் நகுல்.. வாழ்த்தும் பிரபலங்கள்!

By

சென்னை: நடிகர் நகுல், தான் விரைவில் அப்பாவாக போவதாகத் தெரிவித்துள்ளார்.

Recommended Video

Actor Nakkhul & Shruti Blessed with Baby Girl

பாய்ஸ் படம் மூலம் நடிகராக அறிமுகமானவர் நகுல். பிரபல நடிகை தேவயானியின் தம்பி.

இந்தப் படத்துக்குப் பிறகு உடலைக் குறைத்து, காதலில் விழுந்தேன் படம் மூலம் ஹீரோ ஆனார்.

நாக்க முக்க பாடல்

நாக்க முக்க பாடல்

இதில் அவர் ஜோடியாக சுனேனா நடித்திருந்தார். விஜய் ஆண்டனி இசை அமைத்திருந்தார்.
சன் பிக்சர்ஸ் வெளியிட்ட இந்தப் படம் நகுலுக்கு நல்ல ஓபனிங்கை கொடுத்தது. பி.வி.பிரசாத் இயக்கி இருந்த இந்தப் படத்தில் இடம்பெற்ற, நாக்க முக்க பாடல் பட்டி தொட்டியெங்கும் ஹிட்டானது. இதையடுத்து அவர், மாசிலாமணி என்ற படத்தில் நடித்தார். இதிலும் அவர் ஜோடியாக சுனேனா நடித்திருந்தார். இந்தப் படமும் ரசிகர்களால் கவனிக்கப்பட்டது.

மஞ்சள் வெயில்

மஞ்சள் வெயில்

இதையடுத்து, கந்தகோட்டை, நான் ராஜாவாக போகிறேன், வல்லினம் உட்பட சில படங்களில் நடித்தார். நகுல் பின்னணி பாடகரும் கூட. யுவன் சங்கர் ராஜா, ஹாரிஸ் ஜெயராஜ், தமன் ஆகிய இசையமைப்பாளர்களின் இசையில் சில பாடல்களை பாடியுள்ளார். அந்நியன் படத்தில் காதல் யானை.., வேட்டையாடு விளையாடு படத்தில், மஞ்சள் வெயில் மாலையிலே, கஜினியில் எக்ஸ் மச்சி உள்ளிட்ட சில ஹிட் பாடல்கள், இவர் குரலில் இருந்து வந்தவை.

காதல் திருமணம்

காதல் திருமணம்

காதலில் விழுந்தேன் படத்துக்கு பின், நகுல், சுனைனா மீண்டும் இணைந்து, எரியும் கண்ணாடி என்ற படத்தில் இப்போது நடித்து வருகின்றனர். லாக்டவுன் காரணமாக இதன் படப்பிடிப்பு தடை பட்டுள்ளது. நகுல், தனது காதலி ஸ்ருதி பாஸ்கர் என்பவரை கடந்த 2016 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். சினிமா பிரபலங்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

கர்ப்பமான போட்டோ

கர்ப்பமான போட்டோ

சமூக வலைதளங்களில் தனது மனைவியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அடிக்கடி வெளியிடும் நடிகர் நகுல், தான் அப்பாவாக போகும் தகவலை, கடந்த சில மாதங்களுக்கு முன் அறிவித்திருந்தார். கூடவே மனைவி கர்ப்பமாக இருக்கும் போட்டோவையும் பதிந்திருந்தார். உங்கள் ஆசியும் அன்பும் எப்போதும் தேவை என்றும் கூறியிருந்தார்.

அழகான பெண் குழந்தை

அழகான பெண் குழந்தை

இந்நிலையில் அவர்களுக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தையின் விரல்களைப் பிடித்தபடி இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள நடிகர் நகுல், எங்கள் வாழ்க்கையும் மேஜிக் ஆகியிருக்கிறது. தந்தையின் மகள், தாயின் உலகம், பேபி குல்பி பிறந்திருக்கிறார் எனத் தெரிவித்திருக்கிறார். நடிகை சுனைனா அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். சினிமா பிரபலங்கள் ரசிகர்கள், சமூக வலைதளங்களில் நகுலுக்கு வாழ்த்து கூறி வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X