அப்பா ஆகிறார் நடிகர் நகுல்.. ஸ்பெஷல் நாளில் மகிழ்ச்சி அறிவிப்பு.. வாழ்த்துகளில் நனையும் ஹீரோ!

By

சென்னை: நடிகர் நகுல், தான் விரைவில் அப்பாவாக போவதாகத் தெரிவித்துள்ளார்.

Recommended Video

Actor Nakkul wife Shruthi Pregnant with her First child

பிரபல நடிகை தேவயானியின் தம்பி நகுல். இவர் ஷங்கரின் பாய்ஸ் படம் மூலம் நடிகராக அறிமுகமானார்.

தொடர்ந்து காதலில் விழுந்தேன் படம் மூலம் ஹீரோ ஆனார். இதில் அவர் ஜோடியாக சுனேனா நடித்திருந்தார். விஜய் ஆண்டனி இசை அமைத்திருந்தார்.

நாக்க முக்க பாடல்

நாக்க முக்க பாடல்

சன் பிக்சர்ஸ் வெளியிட்ட இந்தப் படம் நகுலுக்கு நல்ல ஓபனிங்கை கொடுத்தது. பி.வி.பிரசாத் இயக்கி இருந்த இந்தப் படத்தில் இடம்பெற்ற, நாக்க முக்க பாடல் பட்டிதொட்டியெங்கும் ஹிட்டானது. இதையடுத்து அவர், மாசிலாமணி என்ற படத்தில் நடித்தார். இதிலும் அவர் ஜோடியாக சுனேனா நடித்திருந்தார். என்.ஆர்.மனோகர் இயக்கி இருந்த இந்தப் படமும் ரசிகர்களால் கவனிக்கப்பட்டது.

மஞ்சள் வெயில்..

மஞ்சள் வெயில்..

இதையடுத்து, கந்தகோட்டை, நான் ராஜாவாக போகிறேன், வல்லினம் உட்பட சில படங்களில் நடித்தார். நகுல் பின்னணி பாடகரும் கூட. யுவன் சங்கர் ராஜா, ஹாரிஸ் ஜெயராஜ், தமன் ஆகிய இசையமைப்பாளர்களின் இசையில் சில பாடல்களை பாடியுள்ளார். அந்நியன் படத்தில் காதல் யானை.., வேட்டையாடு விளையாடு படத்தில், மஞ்சள் வெயில் மாலையிலே, கஜினியில் எக்ஸ் மச்சி உள்ளிட்ட சில ஹிட் பாடல்கள், இவர் குரலில் இருந்து வந்தவை.

காதல் திருமணம்

காதல் திருமணம்

காதலில் விழுந்தேன் படத்துக்கு பின், நகுல், சுனைனா மீண்டும் இணைந்து, எரியும் கண்ணாடி என்ற படத்தில் இப்போது நடித்து வருகின்றனர். நகுல், தனது காதலி ஸ்ருதி பாஸ்கர் என்பவரை கடந்த 2016 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த திருமணத்தில் சினிமா பிரபலங்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

பிறந்த நாள்

பிறந்த நாள்

இந்நிலையில், சமூக வலைதளங்களில் தனது மனைவியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அடிக்கடி வெளியிடும் நடிகர் நகுல், நேற்று தனது பிறந்த நாளை கொண்டாடினார். இதையடுத்து தான் அப்பாவாக போகும் தகவலை, அவர் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் மகிழ்ச்சியோடு பகிர்ந்துள்ளார்.

ஸ்பெஷலான நாள்

ஸ்பெஷலான நாள்

நண்பர்களே, இது எனக்கும் என் மனைவிக்கும் ஸ்பெஷலான நாள் என்று கூறியுள்ள நகுல், ஸ்ருதி, கர்ப்பமாக இருக்கும் போட்டோவையும் பதிந்துள்ளார். உங்கள் ஆசியும் அன்பும் எப்போதும் தேவை என்றும் அவர் கூறியுள்ளார். இதையடுத்து சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Read more about: nakkhul நகுல்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X