2 குழந்தைகளை வைத்துக் கொண்டு ஸ்ருதிக்கு லிப் கிஸ் கொடுத்த நகுல்.. என்ன விசேஷம் தெரியுமா?
சென்னை: ஷங்கர் இயக்கத்தில் வெளியான பாய்ஸ் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான நடிகை தேவயானியின் தம்பியான நகுல் 41 வயதை கடந்த நிலையில், சமீப காலமாக சரியாக சினிமா வாய்ப்புகள் அமையாமல் போராடிக் கொண்டிருக்கிறார். ஆனாலும், குடும்பத்துடன் ஜாலியாக பொழுதை கழித்து வரும் அவர் சோஷியல் மீடியா மூலம் ரசிகர்களுடன் எப்பவுமே கனெக்ட்டில் இருக்கிறார்.
தனது மனைவி ஸ்ருதியின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அதில், குழந்தைகளை வைத்துக் கொண்டு மனைவிக்கு அவர் லிப் கிஸ் கொடுத்த போட்டோவை பார்த்து கமெண்ட்டுகளை கொட்டித் தீர்த்து வருகின்றனர்.

நடிகர் நகுல் மீது உதவி இயக்குநர் ஏகப்பட்ட சர்ச்சை கருத்துக்களை சொன்னது பெரும் சர்ச்சையாக வெடித்தது. சமீபத்தில், தனது சகோதரி தேவயானியின் 3பிஹெச்கே படம் வெளியான போது, அவரை சந்தித்து அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார் நகுல்.
வெற்றிக்காக போராடும் நகுல்: நடிகர்கள் பாய்ஸ் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர்களில் தமன் இசையமைப்பாளராக கலக்கிக் கொண்டிருக்கிறார். நடிகர் சித்தார்த் டாப் ஹீரோவாக அசத்திய நிலையில், அவருக்கு பெரிய செட் பேக் அமைந்தது. அதன் பின்னர், தற்போது சித்தா, 3பிஹெச்கே என குறைந்த பட்ஜெட் படங்களை எடுத்து வெற்றி பெற்று வருகிறார். பாய்ஸ் படத்தில் அறிமுகமான நகுல் சோலோ ஹீரோவாக ஆளே மாறி காதலில் விழுந்தேன் படத்தில் நடித்து ரசிகர்களை ஷாக் ஆக்கினார். அந்த படத்தை தொடர்ந்து மாசிலாமணி, கந்தக்கோட்டை என கமர்ஷியல் வெற்றிகளை பெற்றார். ஆனால், அதன் பின்னர் அவர் நடிப்பில் வெளியான நான் ராஜாவாக போகிறேன், வல்லினம் உள்ளிட்ட படங்கள் வசூல் ரீதியாக பெரிதாக போகவில்லை.
தொடர் தோல்விகள்: பருமனான உடலை சிம்புவுக்கு முன்னாடியே ஸ்லிம்மாக மாற்றி நடித்து வந்த நகுல் கடைசியாக 2015ம் ஆண்டு வெளியான தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் படத்தில் மூலம் வெற்றியை ருசித்தார். அட்டகத்தி தினேஷ், ஐஸ்வர்யா தத்தா உள்ளிட்ட பலர் அந்த படத்தில் நடித்திருந்தனர். ஆனால், அதன் பின்னர் நகுல் நடித்த நாரதன், பிரம்மா.காம், செய், கடந்த ஆண்டு வெளியான வாஸ்கோடகாமா உள்ளிட்ட படங்கள் தொடர்ந்து தோல்விப் படங்களாக மாறின. லேட்டஸ்ட்டாக தி டார்க் ஹெவன் எனும் படத்தில் நகுல் நடித்து வருகிறார்.
மனைவிக்கு உதட்டில் முத்தம்: கடந்த 2016ம் ஆண்டு ஸ்ருதி என்பவரை திருமணம் செய்துக் கொண்டார் நகுல். அகிரா என்கிற மகளும் அமோர் என்கிற மகனும் நகுலுக்கு உள்ளனர். மனைவி ஸ்ருதியின் பிறந்தநாளை முன்னிட்டு அவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சற்றுமுன் ஷேர் செய்துள்ளார் நகுல். அதில், பீச்சில் குழந்தைகளை வைத்துக் கொண்டு மனைவிக்கு லிப் கிஸ் அடிக்கும் போட்டோவையும் அவர் ஷேர் செய்துள்ளார்.
குவியும் கமெண்ட்ஸ்: நடிகர் நகுல் மீண்டும் சினிமாவில் நாக்க மூக்காவாக வந்து கலக்க வேண்டும் என்றும், ஸ்ருதி அக்காவுக்கு ஹேப்பி பர்த்டே சொல்லிடுங்க ப்ரோ என்றும் அழகான குடும்பம் என்றும் ஏகப்பட்ட கமெண்ட்டுகளை ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர். மனைவியின் சிறு வயது புகைப்படங்களை நகுல் ஷேர் செய்ய அதற்கும் லைக்குகள் மற்றும் ஹார்ட்டீன்கள் குவிந்து வருகின்றன.


Click it and Unblock the Notifications











