இந்தியன் ஜான் விக்.. லியோ படத்துக்கு நடிகர் நகுல் கொடுத்த விமர்சனம்.. பிரபலங்கள் கொண்டாடும் வெற்றி!

சென்னை: தளபதி விஜய் நடித்துள்ள லியோ திரைப்படத்தை சினிமா பிரபலங்கள் பலரும் தியேட்டருக்கு சென்று பார்த்து தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

முதல் நாளில் நடிகை கீர்த்தி சுரேஷ், த்ரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, கல்யாணி பிரியதர்ஷன் உள்ளிட்ட பல நடிகைகள் லியோ பார்த்துவிட்டு படம் சூப்பரா இருக்கு, விஜய் நடிப்பு செம என பாராட்டி இருந்தனர்.

இந்நிலையில் தற்போது படத்தைப் பார்த்த நடிகர் நகுல் இந்தியன் ஜான் விக் மாதிரி லியோ இருக்கு எனக் கூறியுள்ளார்.

Actor Nakkhul praised Leo is a Indian John Wick type of movie and appreciates Vijays acting

ஹாலிவுட் தரத்தில்: லோகேஷ் கனகராஜ் மேக்கிங்கில் தொடர்ந்து பல புதிய தொழில்நுட்பத்தை கையாண்டு வருகிறார். இதுவரை சிஜி பக்கம் போகாமல் இருந்தவர், லியோவில் முதன் முறையாக அந்த ஹைனா காட்சிக்காக அதிக பொருட்செலவு மற்றும் ஒரு வருட உழைப்பை கொட்டி உருவாக்கப்பட்டு படத்தின் துவக்கத்திலேயே ரசிகர்களுக்கு விருந்து வைத்துள்ளார்.

பிரபலங்கள் கொண்டாடும் வெற்றி: வழக்கமாக புது படங்கள் வந்தால் குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி என்பார்கள்.. ஆனால், தளபதி விஜய் நடித்த லியோ படத்தை ஏகப்பட்ட சினிமா பிரபலங்கள் தியேட்டருக்கு சென்று பார்த்து வருகின்றனர். பல பேருக்கு முதல் நாளே பார்க்க டிக்கெட் கிடைக்கவில்லை என்கிற வருத்தத்தையும் பதிவு செய்துள்ளனர்.

நகுல் கொடுத்த விமர்சனம்: தனது மனைவியுடன் லியோ படத்தை தியேட்டருக்கு சென்று பார்த்த நடிகர் நகுல் வெளியே வருவதை அறிந்த யூடியூபர்கள் சிலர் மைக்கை நீட்டி கேள்வி எழுப்ப, படம் நிஜமாவே நல்லா இருக்கு, இந்தியன் ஜான் விக் பார்த்தது மாதிரி இருக்கு, அந்த வைபில் இருந்து இன்னும் வெளியவே வரல.. இத்தனை வருஷமா எப்படி விஜய் சாரல எந்த ஒரு லேகும் இல்லாமல் ரசிகர்களை மகிழ்விக்க முடிகிறது என்று தெரியவில்லை எனக் கூறியுள்ளார்.

Actor Nakkhul praised Leo is a Indian John Wick type of movie and appreciates Vijays acting

லியோ படத்தை பார்த்த பல பிரபலங்களும் நடிகர் விஜயின் நடிப்பை புகழ்ந்து பாராட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. பர்ஃபார்மராக நடிகர் விஜய் தனது நடிப்பால் இந்த தடவை உருட்டி மிரட்டி மாஸ் காட்டி உள்ளார். லியோ படத்தை அவரது ரசிகர்கள் ரிப்பீட் மோடில் பார்க்க அது ஒன்றே போதுமானது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X