ஆண்டாள் கோவில் வடிவில்..3 கிலோவில் நெக்லஸ் அணிந்திருக்கும் ஹீரோவின் மனைவி!
சென்னை : பிரபல நடிகரின் மனைவி, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் கோபுர வடிவத்தில் மூன்று கிலோ எடை கொண்ட நெக்லஸ் அணிந்து கொண்டு போஸ் கொடுத்துள்ளார்.
தமிழ் சினிமா நட்சத்திரமான நகுல் தற்போது சின்னத்திரையில் பல ரியாலிட்டி ஷோவில் நடுவராக அலங்கரித்து வருகிறார்.
இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் நகுல், அவ்வப்போது விதவிதமான புகைப்படத்தை இணையத்தில் பகிர்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.

நடிகர் நகுல்
நடிகர் நகுல் நடித்த காதலில் விழுந்தேன் படத்தில் இடம் பெற்ற நாக்கு முக்க பாடல் பட்டி, தொட்டி எல்லாம் ஹிட்டடித்து இளம் நடிகர்கள் பட்டியலில் இடம் பிடித்தார் நகுல். அதன்பின் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், மாசிலாமணி, நான் ராஜாவாகப் போகிறேன், வல்லினம் ஆகிய படங்களில் நடித்தார்.

நகுலின் மனைவி ஸ்ருதி
இவர் 2016ம் ஆண்டு சுருதி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அகிரா என்ற மகள் உள்ளார். இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் நகுல், மனைவி மற்றும் குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து வருகிறார். நகுலைப் போலவே அவரது மனைவி ஸ்ருதியும் இணையத்தில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

3 கிலோவில் நெக்லஸ்
இந்நிலையில் நடிகர் நகுல் மனைவி ஸ்ருதி, தன் கழுத்தில் 3 கிலோ தங்கத்தால் செய்த நெக்லஸ் ஒன்றை அணிந்திருக்கிறார். ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவில் வடிவத்தில் இந்த நெக்லஸின் டிசைன் வடிவமைக்கப்பட்டுள்ளது. 3 கிலோ எடையில் அவர் அணிந்திருக்கும் நெக்லசை பார்த்து பெண் ரசிகர்கள் வாயடைத்துப் போனார்கள்.

போத்தீஸ் ஸ்வர்ணா மஹால்
தமிழ்நாட்டின் முன்னணி ஆபரண நிறுவனமான போத்தீஸ் ஸ்வர்ணா மஹால், "பிரைடல் தங்க நகை" விருதை வென்றது. தொடர்ச்சியாக இரண்டு விருதுகளை வென்ற தென்னிந்தியாவில் போத்தீஸ் ஸ்வர்ண மஹால் இந்த ஆண்டும் விருதை பெரும் நோக்கத்தோடு, உலகளவில் தமிழ்நாட்டின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை வெளிப்படுத்த ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் வடிவத்தில் 3 கிலோ எடையில் உருவாக்கப்பட்டுள்ளது.

தலைசிறந்த படைப்பு
இதேபோல, பேட்டரிகள் மற்றும் ரிமோட் சென்சார் மூலம், ஹாரம் மற்றும் ஒட்டியாணம் உருவாக்கப்பட்டுள்ளது. LED விளக்குகள் மற்றும் தெய்வீக இசையுடன் பகவான் விஷ்ணு ஓய்வெடுப்பதைக்காட்ட முழு கோபுரமும் எழுந்து நிற்கிறது. கோவிலை புகைப்படம் எடுக்க அனுமதியில்லை என்பதால், போத்தீஸ் ஸ்வர்ண மஹாலை கைவினைஞர்களின் குழுவினர் கோவில் வளாகத்தில் தங்கி, கோவிலுக்குள் இருக்கும் ஒவ்வொரு சிற்பத்தின் நுணுக்கமான கையால் வரைந்து புகழ்பெற்ற தலைசிறந்த படைப்பை உருவாக்கி உள்ளனர்.


Click it and Unblock the Notifications











