குடும்பத்தோட பாட்டுக் கச்சேரி... கிடாருடன் களத்தில் இறங்கிய நகுல்
சென்னை : லாக்டவுனில் குடும்பத்தினருடன் வீட்டில் முடங்கியுள்ளார் நடிகர் நகுல்.
இதையடுத்து அவர் தனக்கு விருப்பமான பாடலை குடும்பத்தினருடன் பாடி மகிழ்ந்தார்.
கிடாருடன் அவர் பாடிய பாடலின் வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

ட்விட்டரில் பரபர
ஷங்கரின் பாய்ஸ் படம்மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார் நடிகர் நகுல். தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். மேலும் கடந்த 2010 முதல் ட்விட்டர் பக்கத்திலும் பரபரப்புடன் செயல்பட்டு வருகிறார். ரசிகர்களுடன் தொடர்ந்து பல்வேறு விஷயங்களை பகிர்ந்து வருகிறார்.

சமூக அக்கறை
தன்னுடைய சொந்த விஷயங்கள் குறித்த பதிவுகளையும் பகிர்ந்துவரும் அவர் சமூக அக்கறையுடன் பல்வேறு விஷயங்களையும் ட்விட்டர் பக்கத்தின் மூலம் பதிவு செய்து வருகிறார். இந்த கொரோனா சூழலில் உதவி தேவைப்படும் நபர்களுக்கு தன்னால் இயன்றவற்றை ட்விட்டர்மூலம் செய்து வருகிறார்.

பாட்டுக் கச்சேரி
தன்னுடைய கொண்டாட்டங்களையும் பதிவு செய்ய அவர் மறப்பதில்லை. தற்போது லாக்டவுனால் தன்னுடைய குடும்பத்தினருடன் வீட்டில் முடங்கியுள்ள அவர், சிறப்பான கிடார் இசை கலைஞர் என்பது தெரிந்த விஷயம்தான். இந்நிலையில் தன்னுடைய குடும்பத்தினருடன் இணைந்து பாட்டுக் கச்சேரி நடத்தியுள்ளார் நகுல்.

கிடாருடன் பாடல்
தன்னுடைய மனதிற்கு மிகவும் நெருக்கமான சிநேகிதனே பாடலை தன்னுடைய மனைவியுடன் இணைந்து கிடார் வாசித்துக் கொண்டே பாடியுள்ளார். மேலும் அவருடைய குழந்தை அகிராவும் இந்த கூட்டணியில் இணைந்துள்ளது. நேற்றைய தினம் அவர் தனது கொரோனா தடுப்பூசியை போட்டு மற்றவர்களையும் போட வலியுறுத்தி புகைப்படம் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











