காதலில் விழுந்தேன் நாயகன் நகுலுக்கு இன்று பிறந்த நாள்.. வாழ்த்து கூறிய பிரபலங்கள்!

சென்னை : நடிகை தேவயானியின் தம்பியும், நடிகருமான நகுல் இன்று தனது 35 வது பிறந்த நாளை கொண்டாடிவருகிறார்.

எப்போதும் சிரித்த முகத்துடன் இருக்கும் நகுல் தமிழில் பல படங்களில் நடித்தது மட்டும் இல்லாமல் பல பாடல்களை பாடியும் வருகிறார்.

இன்று இவருடைய பிறந்த நாளையொட்டி அவரது நண்பர்கள் ரசிகர்கள் திரைப் பிரபலங்கள் என அனைவரும் அவருக்கு வாழ்த்து சொல்லி வருகின்றனர்.

பல திறமைகள்

பல திறமைகள்

தமிழில் பல வித்தைகளை கையில் வைத்திருக்கும் வெகுசில நடிகர்களில் நடிகர் நகுலும் ஒருவர். இவர் நடிப்பு, பாட்டு மற்றும் நடனம் போன்றவற்றில் வெளுத்துக் கட்டுவார். இவ்வாறு இவருக்கு பல திறமைகளைக் கொண்டிருக்கும் இவர் தமிழ் திரை உலகிற்கு ஷங்கர் இயக்கிய பாய்ஸ் படம் மூலம் அறிமுகம் ஆனார்.

சைக்கோ லவ்வர்

சைக்கோ லவ்வர்

பாய்ஸ் படத்தில் ஐந்து நண்பர்களில் ஒருவராக தோன்றி தனது அறிமுகத்தை முதன்முதலில் கொடுத்த இவர் முழு கதாநாயகனாக உருவெடுத்தது காதலில் விழுந்தேன் படத்தின் மூலம் தான். இதில் இவர் ஒரு சைக்கோ லவ்வராக தனது முதல் படத்திலேயே நடிப்பில் புகுந்து விளையாடி இருப்பார் மேலும் இந்த படத்தின் பாடல்கள் மிகவும் பேசப்பட்ட வேளையில் இவரின் நடிப்பும் வெகுவாக பாராட்டப்பட்டது. இந்தப் படத்தில் வரும் நாக்க முக்கா என்ற பாடல் பட்டிதொட்டி மட்டுமில்லாமல் உலகமெங்கிலும் இன்றும் பல இடங்களில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

ஹேண்ட்சம் லுக்

ஹேண்ட்சம் லுக்

இவ்வாறு தனது கேஷுவலான நடிப்பின் மூலம் தனது முகத்தை பதித்த இவர் ஒரு மிகச் சிறந்த பாடகரும் ஆவார். பாய்ஸ் படத்தில் ஜூஜு என்ற கதாபாத்திரத்தில் குண்டா மற்றும் வித்தியாசமான ஒரு ஹேர்ஸ்டைல் உடன் வரும் இவர் தனது அடுத்த படமான காதலில் விழுந்தேனில் எடையை முற்றிலும் குறைத்து ஒரு ஹேண்ட்சம் பாயாக வந்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.

மீண்டும் இணையும் ஜோடி

மீண்டும் இணையும் ஜோடி

அதன் பின் மாசிலாமணி, நான் ராஜாவாகப் போகிறேன், வல்லினம் போன்ற மிகப்பெரிய வெற்றி படங்களை கொடுத்த இவர் தற்பொழுது நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகை சுனைனாவுடன் சேர்ந்து தற்பொழுது "எரியும் கண்ணாடி" என்ற படத்தில் நடித்து வருகிறார். காதலில் விழுந்தேன், மாசிலாமணி படங்களில் இணைந்து நடித்து பாராட்டுக்களை பெற்ற இந்த ஜோடி பிறகு நீண்ட வருடங்களாக எந்த ஒரு படத்திலும் இணையாத நிலையில் தற்போது 11 ஆண்டுகளுக்குப் பின்பு இணைந்துள்ளது அவர்களது ரசிகர்களிடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதன் டீசர் சில நாட்களுக்கு முன்பு சுனைனா தனது யுடுயூப் மற்றும் இன்ஸ்டா பக்கத்தின் மூலம் வெளியிட்டிருந்தார். இந்த படம் கூடிய விரைவில் திரைக்கு வரும் என்று பலராலும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

பல ஹிட் பாடல்கள்

பல ஹிட் பாடல்கள்

பல படங்களில் நடித்து வந்த இவர், பல ஹிட்டான படங்களில் பாடல்களையும் பாடியுள்ளார். அந்நியன் படத்தில் வரும் காதல் யானை வருகிற ரோமோ, கஜினி, வல்லவன் என பல சூப்பர் ஹிட் படங்களுக்கு பாடல்களை பாடியுள்ள இவர் ஹாரிஸ் ஜெயராஜ், யுவன்சங்கர் ராஜா, தமன் மற்றும் விஜய் ஆண்டனி போன்றவர்களின் இசையில் தொடர்ந்து பாடல்களை பாடி வருகிறார்.

காதல் திருமணம்

காதல் திருமணம்

நடிகராகவும் பின்னணி பாடகராகவும் கைதேர்ந்தவரான நகுல், தனது நீண்ட நாள் காதலியான ஸ்ருதி பாஸ்கர் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். மேலும் இவர் தனது கட்டுமஸ்தான போட்டோக்களையும், இவரின் மனைவியுடன் இணைந்து செய்யும் டப்ஸ்மாஷ் வீடியோக்களையும் தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார். இந்த துருதுரு இளைஞன் நகுலின் பிறந்த நாளான இன்று இவரின் ரசிகர்களும், நண்பர்களும், திரைத்துறையை சேர்ந்த பிரபலங்களும் அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X