தேவயானி தம்பி நடிகர் நகுலுக்கு திருமணம் நிச்சயமானது - சமையல் கலைஞரை மணக்கிறார்

By Mayura Akilan

சென்னை: நடிகை தேவயானியின் தம்பி நடிகர் நகுல் திருமண நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது. சமையல் கலைஞர் ஸ்ருதிபாஸ்கர் என்பவரை காதல் திருமணம் செய்யப்போகிறார் நகுல்.

நடிகை தேவயானிக்கு மயூர், நகுல் ஆகிய 2 தம்பிகள் இருக்கிறார்கள். நடிகை தேவயானி பிரபலமாக நடித்துக்கொண்டிருக்கும் போதே இயக்குநர் ராஜகுமாரனை காதல் திருமணம் செய்து கொண்டார். அவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். அதே போல், அவருடைய மூத்த தம்பி மயூரும் காதல் திருமணம் செய்து கொண்டார். இப்போது அவர் மனைவி-குழந்தையுடன் புனேவில் வசித்து வருகிறார்.

Actor Nakul engaged to Sruti Bhaskar

இளைய தம்பி நகுல், ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த ‘பாய்ஸ்' படத்தில் 5 கதாநாயகர்களில் ஒருவராக நடித்தார். ‘காதலில் விழுந்தேன்' படத்தில் கதாநாயகனாக அறிமுகம் ஆனார். மாசிலாமணி, கந்த கோட்டை, நான் ராஜாவாக போகிறேன்,வல்லினம், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் ஆகிய படங்களிலும் நகுல் கதாநாயகனாக நடித்து ஆகிய படங்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றன.

கடந்த சில மாதங்களுக்கு முன்பே 4 வருடங்களாக ஒரு பெண்ணை காதலித்து வருவதாவும், அவருடைய பெயரை இப்போது வெளியிட விரும்பவில்லை. அந்த பெண் சென்னையை சேர்ந்தவர்தான். ‘எம்.பி.ஏ.' படித்து இருக்கிறார் என்றும் நகுல் கூறியிருந்தார். இப்போது அவருடைய பெயர் ஸ்ருதி பாஸ்கர் என்று தெரியவந்துள்ளது. நகுல் ஸ்ருதி பாஸ்கர் திருமணம் நிச்சயம் தற்போது நடைபெற்றள்ளது.

ஸ்ருதி, ஒரு நட்சத்திர ஓட்டலில் சமையல் கலை நிபுணராக பணிபுரிந்து வந்தார். இப்போது வீட்டிலேயே கேக் மற்றும் இனிப்புகளை தயார் செய்து விற்பனை செய்கிறார். நண்பர் மூலம் நகுலுக்கு அறிமுகமாகி, நட்பு காதலாகி, நிச்சயம் வரை வந்துள்ளது.

சினிமாவில் அடுத்தடுத்த கட்டங்களுக்கு முன்னேறி வரும் நகுல், தனது சொந்த வாழ்க்கையிலும் அடுத்தக்கட்டத்துக்கு முன்னேறியிருக்கிறார். உறவினர்கள் முன்னிலையில் இருவரும் மோதிரம் மாற்றிக் கொண்டு தங்கள் திருமணத்தை நிச்சயித்துள்ளனர். இந்த செய்தியை நகுல் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதோடு, நிச்சயதார்த்தத்தின் போது எடுக்கப்பட்டுள்ள படங்களையும் வெளியிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X