தொடர்ந்து வரும் ஆபாச வீடியோ… கொந்தளித்த பிரபல நடிகரின் மனைவி !

சென்னை : இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து வரும் ஆபாச வீடியோவால் பிரபல நடிகரின் மனைவி கோபத்தின் உச்சத்தில் இருக்கிறார்.

ஆபாச வீடியோ குறித்து காவல்துறையில் புகார் கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

கடுமையான நடவடிக்கை எடுக்காததால் தான், இதுபோன்ற செயல்களில் சில ஆண்கள் தைரியமாக ஈடுபட்டுவருவதாகவும் அவர் கடுமையாக குற்றம்சாட்டி உள்ளார்.

நகுல்

நகுல்

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் உருவான பாய்ஸ் படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானவர் நகுல். பிரபல நடிகை தேவயாணியின் சகோதரரான இவர், அந்த படத்தில் ஓவராக எடை போட்டு செம்ம குண்டாக இருந்தார். அதன் பின்னர் தீவிர உடற்பயிற்சிகளை செய்து ஸ்லிம் லுக்கிற்கு மாறினார்.

பல படங்களில்

பல படங்களில்

அதன் பின்னர் இவர் நடித்த காதலில் விழுந்தேன் படத்தில் இடம் பெற்ற நாக்கு முக்க பாடல் பட்டி, தொட்டி எல்லாம் ஹிட்டடித்து இளம் நடிகர்கள் பட்டியலில் இடம் பிடித்தார் நகுல். அதன்பின் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், மாசிலாமணி, நான் ராஜவாகப் போகிறேன், வல்லினம் ஆகிய படங்களில் நடித்தார்.

காதல் திருமணம்

காதல் திருமணம்

நடிகர் நகுல் 2016ம் ஆண்டு சுருதி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அகிரா என்ற மகளும் உள்ளார். இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் நகுலின் மனைவி சுருதி, அவ்வப்போது தனது கணவர் மற்றும் மகளுடன் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். இவர் தாய் பால் தினத்தை முன்னிட்டு பகிர்ந்த போட்டோஸ் இணையத்தில் வைரலானது.

ஆபாச வீடியோ

ஆபாச வீடியோ

இந்நிலையில், நகுலின் மனைவி சுருதி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு அடையாளம் தெரியாத நபர்கள் தொடர்ந்து ஆபாச வீடியோ மற்றும் ஆபாச கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். இதுபோன்று பலமுறை ஆபாச வீடியோக்களை அனுப்பி தொந்தரவு செய்கின்றனர். அவர்களை ப்ளாக் செய்தாலும் தொடர்ந்து இதே போன்றே செய்து வருகின்றனர்.

கடுமையான நடவடிக்கை தேவை

கடுமையான நடவடிக்கை தேவை

தன்னைப் போன்ற பல பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பாதிக்கப்பட்ட பலரும் புகார்கள் அளித்தும், காவல் துறையில் எந்த வித நடவடிக்கையும் இல்லை. புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால், இது போன்ற செயல்களுக்கு எதிராக குரல் கொடுக்க நினைப்பவர்கள் நமக்கு எதுக்கு வம்பு என்று ஒதுங்கிவிடுகிறார்கள் என்றும், இது போன்ற செயலில் ஈடுபடும் நபர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சுருதி கூறியுள்ளளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X