வில்லனாக நடிப்பது பிடிச்சிருக்கு.. ரசிச்சு நடிக்கிறேன்.. சிலாகிக்கும் நந்தா

சென்னை : வில்லன் கதாபாத்திரங்களில் நடிப்பது எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது . ஒரு ரசிகனாக நான் அதனை விரும்பி நடிக்கிறேன் என நடிகர் நந்தா கூறியுள்ளார்.

நடிகர் நந்தாவை நாம் மௌனம் பேசியதே படத்தில் இருந்தே பார்த்து வருகிறோம். தனது முதல் படத்திலே சூர்யாவுடன் சிறந்த கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருப்பார் நந்தா. அந்த படத்தில் அவர் நடித்த கண்ணன் கதாபாத்திரத்திற்கு இப்போது வரை ரசிகர்கள் இருக்கிறார்கள்.

Actor Nanda likes to act as villain

சமீபத்தில் கூட ஒரு நேர்காணலில் நான் உண்மையில் கண்ணன் தான் எனக்கு சரியான கதாபாத்திரம் தான் கொடுத்திருக்கிறார்கள் என சூர்யா அடிக்கடி கூறுவார் என கூறியிருந்தார். நந்தா அதற்கு பின் பல படங்களில் தொடர்ந்து கதாநாயகனாக நடித்து வந்தார் .

இவர் நாயகனாக நடித்த சில படங்கள் மக்களை கவர்ந்தது சில படங்கள் தோல்வியை சந்தித்தது. அதற்கு பிறகு நந்தா மக்களால் வெகுவாக கவனிக்கப்பட்ட படம் என்று சொன்னால், ஈரம் படத்தை சொல்லலாம். இந்த படத்தில் முதல் முறையாக யாரும் எதிர்பாராத அளவில் வில்லனாக நடித்து அசத்தியிருப்பார் நந்தா. இந்த படத்தில் வில்லனாக நடித்து அசத்தியதால் பல விருதுகளையும் அந்த சமயத்தில் வென்றிருந்தார் நந்தா .

Actor Nanda likes to act as villain

நந்தா தற்போது மணிரத்னம் தயாரிப்பில் தனசேகரன் இயக்கி வெளிவந்த வானம் கொட்டட்டும் படத்தில் ஒரு சிறிய வில்லத்தனமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பாஸ்கரன் என்ற கதாபாத்திரத்தை யாரும் எதிர்பாராத அளவில் சிறப்பாகவே நடித்து இருந்தார். வானம் கொட்டட்டும் பட விளம்பரங்களின் போது எனக்கு வில்லன் கதாபாத்திரங்களில் நடிப்பது மிகவும் பிடித்திருக்கிறது . ஒரு ரசிகனாக நான் அதனை விரும்பி நடிக்கிறேன் என கூறியிருந்தார் .

இவர் இதற்கு முன் வந்தான் வென்றான் படத்தில் கூட கிட்டதட்ட ஒரு வில்லன் கதாபாத்திரத்தில் தான் நடித்திருப்பார். அதன் பின் நீண்டகாலம் கழித்து தற்போது வானம் கொட்டட்டும் படத்தில் நடித்து இருக்கிறார். வானம் கொட்டட்டும் படம் கடந்த வாரம் வெளியாகி நல்ல வெற்றியை பதிவு செய்துள்ளது குறிப்பிடதக்கது .

Actor Nanda likes to act as villain

இந்த படத்தின் விளம்பரங்களின் போது பேசிய நந்தா, படங்கள் இணையத்தில் வெளியாவதை ஏன் இந்த அரசால் தடுக்கமுடியவில்லை என குற்றம் சாட்டினார். பல ஆபாச இணையதளங்களை ஒரே நாளில் முடக்கும் இந்த அரசால் ஏன் படங்கள் வெளியாகும் இணையதளங்களை தடுக்க முடியவில்லை என கேள்வி எழுப்பி இருந்தார்.

நந்தா அடுத்ததாக பரமபதம் விளையாட்டு படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும் விஷாலின் துப்பறிவாளன் 2 படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் லண்டன் படப்பிடிப்பு சமீபத்தில் தான் முடிவடைந்தது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X