இசையமைப்பாளர் தமனுக்கு காஸ்ட்லி கார் பரிசளித்த பாலய்யா.. சும்மாவா இப்படியொரு விஷயம் இருக்கே!
ஐதராபாத்: நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணா, ஸ்ரத்தா ஸ்ரீநாத், பாபி தியோல் உள்ளிட்டவர்கள் நடித்து கடந்த மாதத்தில் வெளியானது டாக்கு மகராஜ். பாபி கொல்லி இயக்கத்தில் உருவாகி இருந்த இந்த படம் கமர்சியல் ஜானரில் எடுக்கப்பட்டிருந்தது. கேங்ஸ்டராக தன்னுடைய வாழ்க்கையை தொடர்ந்து வந்த நபர் தன்னுடைய ஊரையும் பெயரையும் மாற்றிக் கொண்டு தன்னுடைய மகளுடன் சிறப்பான வாழ்க்கையை மேற்கொள்ளும் நிலையில் அவரது சுயம் வெளிப்படுவதாக இந்த படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.
படம் மிகப்பெரிய அளவில் ஹிட்டை கொடுத்துள்ளது. படத்தில் ஊர்வசி ரவுத்தாலாவுடன் பாலய்யா போட்டுள்ள டான்ஸ் மிகப்பெரிய வரவேற்பை கொடுத்து, படத்தின் வெற்றிக்கும் முக்கியமான காரணமாக அமைந்திருந்தது. படத்திற்கு தமன் இசை மிகப் பெரிய பலமாக அமைந்திருந்தது.

நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணா: தெலுங்கு பட உலகின் முன்னணி நடிகரான நந்தமுரி பாலகிருஷ்ணா பல ஆண்டுகளாக தெலுங்கில் முன்னணி நடிகராக அடுத்தடுத்த ஹிட்களை கொடுத்து வருகிறார். அவரது நடிப்பில் கடந்த மாதத்தில் ரிலீசான டாக்கு மகராஜ் மிகப்பெரிய அளவில் அவருக்கு வரவேற்பையும் வசூலையும் பெற்றுக் கொடுத்துள்ளது. அவரது பகவத் கேசரி, அகாண்டா உள்ளிட்ட படங்கள் சிறப்பான விமர்சனங்களை பெற்றுக் கொடுத்த நிலையில் பாபி கொல்லி இயக்கத்தில் வெளியான டாக்கு மகராஜ் படமும் அவருக்கு சிறப்பாக கை கொடுத்துள்ளது. படம் கேங்ஸ்டர் கதைக்களத்தில் சிறப்பான திரைக்கதையுடன் உருவாகியுள்ளது.
டாக்கு மகாராஜ் படம்: படத்தில் கேங்ஸ்டராக இருக்கும் பாலய்யா, ஒரு கட்டத்தில் தன்னுடைய ஊரையும் பெயரையும் மாற்றிக் கொண்டு தன்னுடைய மகளுடன் சிறப்பான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். அப்போது ஒரு இளம்பெண் கடத்தப்பட அவரை மீட்க வரும் பாலய்யாவின் அதிரடி ஆக்ஷனை படம் அடுத்தடுத்த சம்பவங்களாக கோர்வையாக கொடுத்துள்ளது. இந்த படத்தில் பாபி தியோல், ஸ்ரத்தா ஸ்ரீநாத், ஊர்வசி ரவுத்தாலா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் பாலைய்யாவுடன் இணைந்துள்ள நிலையில் படம் கமர்சியலாக எடுக்கப்பட்டு மிகப்பெரிய ஹிட்டை கொடுத்துள்ளது. இந்த படத்தில் ஊர்வசி ரவுத்தாலாவுடன் பாலகிருஷ்ணா இணைந்து ஆட்டம் போட்டுள்ள பாடல் மிகப்பெரிய ஹிட்டடித்து யூடியூப்பில் தொடர்ந்து ட்ரெண்டிங்கில் இருந்தது.
தமனுக்கு காஸ்ட்லி கார் பரிசு: இந்நிலையில் இந்த படத்தின் இசையமைப்பாளர் தமன் மிகப்பெரிய பாராட்டுகளுக்கு உள்ளாகியுள்ளார். பாலய்யாவின் இன்ட்ரோ பாடலும் தமன் இசையில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. படத்தின் வெற்றிக்கு தமனின் இசை முக்கியமான காரணமாக அமைந்திருந்தது. இந்நிலையின் இசையமைப்பாளர் தமனுக்கு காஸ்ட்லி காரை பாலைய்யா கிஃப்ட்டாக கொடுத்துள்ளார். விலைமதிப்புள்ள Porsche காரை தமனுக்கு பரிசளித்துள்ளார் இதனால் தமன் மட்டுமல்லாமல் ரசிகர்கள் மற்றும் படக்குழுவினரும் மிகப்பெரிய மகிழ்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர்.
மீண்டும் நடிகரான தமன்: தற்காலங்களில் ஒரு படம் வெற்றி பெற்றால் இசையமைப்பாளர், இயக்குநர் உள்ளிட்டவர்களுக்கு காஸ்ட்லி கார் கொடுப்பது வழக்கமாக உள்ளது. அந்த வகையில் பாலைய்யா தமனுக்கு கொடுத்துள்ள இந்த கார் ரசிகர்களின் கொண்டாட்டத்திற்கு உள்ளாகியுள்ளது. அடுத்தடுத்த படங்களில் இசையமைத்து வரும் தமன், அதர்வாவுடன் இணைந்து இதயம் முரளி படத்தில் நடித்து வருகிறார். ஷங்கர் இயக்கத்தில் பாய்ஸ் படத்தில் 20 ஆண்டுகளுக்கு முன்னதாக நடித்திருந்த தமன், தொடர்ந்து தன்னுடைய இசையில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார். இந்நிலையில் அவர் மீண்டும் நடிக்க களமிறங்கியுள்ளார்.


Click it and Unblock the Notifications











