Vishal - Nandaa: விஷால் குழந்தை கிடையாது.. ஆதாரம் இருக்கா? எனக்கு நீ சமமா? ஆதங்கத்தை கொட்டிய நந்தா!

சென்னை: மதகஜராஜா படத்தின் ரிலீஸ்க்கு முன்னர் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் விஷால் கலந்து கொண்டார். அவரது கைகள் நடுக்கத்துடன் இருந்ததாலும் சரியாக பேச முடியாததால், விஷால் ஒரே நாளில் டிரெண்டிங் ஆனார். விஷாலின் இந்த நிலைக்கு காரணம், மூன்று பேர்தான் என கூறப்பட்டது. அதில் ஒருவர் இயக்குநர் பாலா, மற்றொருவர் நடிகர் நந்தா மூன்றாவது நபர் நடிகர் ரமணா. இவர்கள் மூவரில், நடிகர் நந்தா சமீபத்தில் அளித்த பேட்டியில் இது தொடர்பாக மனம் திறந்து பேசியுள்ளார்.

நடிகர் விஷால் நடிப்பில் உருவாகி வெளியான படம் லத்தி. இந்த படத்தை நடிகர் நந்தா மற்றும் ரமணா இருவரும் இணைந்து தயாரித்தார்கள். இவர்கள் இருவரும் விஷாலின் நெருங்கிய நண்பர்களாக இருந்ததால், இந்த படத்தை அவர்கள் தயாரித்தார்கள். இந்த படத்தின்போது விஷால் மற்றும் தயாரிப்பாளர்களான நந்தா, ரமணா இடையே விரிசல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகத்தான் விஷால் இந்த நிலைக்கு ஆளாகியுள்ளார் என திரைத்துறையைச் சேர்ந்த பலரும் கூறினார்கள். குறிப்பாக பண விஷயத்தில் விஷாலை அவர்கள் ஏமாற்றி விட்டதாக கூறினார்கள். இப்படியான நிலையில் நடிகரும் தயாரிப்பாளருமான நந்தா இது தொடர்பாக முதல் முறையாக வெளிப்படையாக பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.

Actor Nandaa Interview Opens About Problem With Vishal and Vishal Health

நந்தா: அதாவது, " எனக்கும் ரமணாவிற்கும் படம் தயாரிக்க வேண்டும் என்ற எண்ணமே இல்லை. லத்தி படத்தை விஷால் தயாரிக்க முடியவில்லை, காரணம் அவரது விஷால் ஃபிலிம் ஃபேக்டரி மீது வழக்கு உள்ளது. எனவே எங்களை தயாரிக்கச் சொன்னார் நாங்கள் தயாரித்தோம். லத்தி படம் முடிந்து விஷால் நடிப்பில் மார்க் ஆண்டனி மற்றும் ரத்னம் என இரண்டு படங்கள் வெளியாகிவிட்டது. மூன்றாவதாக ஒரு படத்தில் நடித்து வருகிறார். கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுகளுக்கு முன்னர் எடுக்கப்பட்ட இந்த படத்தை அவரது உடல் நிலைக்கு காரணமாக கூறுகிறார்கள். அதேபோல், பாலா இயக்கத்தில் வெளியான அவன் இவன் படத்தையும் காரணமாக கூறுகிறார்கள்.

விஷால்: விஷால் நடிகர் சங்கத்தின் செயலாளராக உள்ளார். தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராக இருந்தவர், அவரை எப்படி நாங்கள் ஏமாற்ற முடியும்? நாங்கள் ஏமாற்றும் அளவிற்கு விஷால் ஒன்றும் குழந்தை இல்லை. என்ன நடந்தது என்பது எங்களுக்குத் தெரியும், விஷாலுக்கும் தெரியும். லத்தி படத்தின் போது ஏற்பட்ட மன கஷ்டத்தால் தான் நாங்கள் பேசுவதில்லை. லத்தி படம் எங்களுக்கு லாபமும் கொடுக்கவில்லை நஷ்டமும் கொடுக்கவில்லை. அப்படி இருக்கும்போது இது குறித்து எதுவுமே தெரியாமல் யார் யாரோ பேசுவதற்கு எல்லாம் நான் பதில் சொல்லிக் கொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை எனத் தோன்றியது. அப்படி உண்மை என்ன எனத் தெரியாமல், விமர்சிப்பவர்களுக்கு பதில் அளிக்கும் அளவுக்கு அவர்கள் எனக்கு சமம் கிடையாது.

Actor Nandaa Interview Opens About Problem With Vishal and Vishal Health

பதில்: எனக்கு சினிமாவில் வாய்ப்பு இருந்தாலும் இல்லை என்றாலும், நான் மிகவும் வசதியாக தான் உள்ளேன். நான் விஷாலிடம் பொய் கணக்கு சொல்லி பணத்தை ஏமாற்றி விட்டதாக கூறுகிறார்கள். அப்படியொரு தேவை எனக்கும் இருந்ததில்லை, ரமணாவுக்கும் இருந்ததில்லை. ஆனாலும் பலர் எங்களை மட்டும் இல்லாமல் எனது குடும்பத்தையும் விமர்சிக்கிறார்கள். உண்மை ஒரு நாள் வெளியே வரும், இவை அனைத்திற்கும் காலம் பதில் சொல்லும்" எனக் கூறியுள்ளார். மேலும் விஷாலிடம் பிடித்த குணம் என்றால், அவரிடம் உதவி என யாராவது போய் கேட்டால் தன்னிடம் இருக்கிறதோ இல்லையோ அவர்களுக்கு உதவி செய்வார், அந்த மனம் அவருக்கு உள்ளது எனக் கூறினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X