கொரோனா தடுப்பூசி போட்ட நடிகர் நானி... ரெண்டில் ஒன்றை தேர்ந்தெடுக்க அறிவுரை
ஐதராபாத் : தெலுங்கில் முன்னணி நடிகராக திகழ்ந்து வருகிறார் நடிகர் நானி.
கொரோனா தடுப்பூசியை நேற்றைய தினம் அவர் போட்டுக் கொண்டுள்ளார்.
மேலும் ரசிகர்கள் பாதுகாப்பாக இருக்கவும் அவர் சாய்ஸ் வழங்கியுள்ளார்.

முன்னணி நடிகர்
நடிகர் நானி தெலுங்கில் முன்னணி நடிகர். இது மட்டுமின்றி நான் ஈ உள்ளிட்ட படங்களின் மூலம் இவருக்கு தமிழ் ரசிகர்களும் மிகவும் அதிகம். தொடர்ந்து சிறப்பான படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் இவரது 25வது படம் 'வீ' கடந்த ஆண்டில் ஓடிடியில் ரிலீசானது.

ரிலீசுக்கு காத்திருக்கும் நானி
இந்நிலையில் அடுத்ததாக ட்ரக் ஜெகதீஷ் என்ற படத்தின் ரிலீசுக்காக இவர் காத்திருக்கிறார். மேலும் ஷ்யாம் சிங்கா ராய் என்ற படத்திலும் நடித்து வருகிறார். இதில் சாய் பல்லவி, கீர்த்தி ஷெட்டி மற்றும் மடோனா சபாஸ்டியன் ஆகியோரும் நடித்து வருகின்றனர்.

புகைப்படம் வெளியீடு
மேலும் தயாரிப்பாளராகவும் திகழும் நானி, தனது அடுத்த ப்ராஜெக்டையும் அறிவித்துள்ளார். இந்நிலையில் நேற்றைய தினம் அவர் கொரோனா தடுப்பூசியை போட்டுள்ளார். இந்த புகைப்படத்தை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இரண்டு ஆப்ஷன்கள்
மேலும் பொதுமக்களுக்கு இரண்டு ஆப்ஷன்களை அவர் கொடுத்துள்ளார். நாம் தடுப்பூசி போட்டு பாதுகாப்பாக இருக்க வேண்டும் மற்றும் பாதுகாப்பாக இருந்து தடுப்பூசியை போட்டு கொள்ளவேண்டும் என்றும் இதில் ஏதாவது ஒன்றை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











