சிவகார்த்திகேயன் வெளியிட்ட நானியின் ஷ்யாம் சிங்கா ராய் பட தமிழ் டீசர்!
ஐதராபாத் : தெலுங்கில் பிரபலமான நானி, சாய் பல்லவி உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ஷ்யாம் சிங்கா ராய்.
இந்தப் படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. இதை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ளார்.
தற்போது படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும்நிலையில் படம் டிசம்பர் 24ம் தேதி ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் நானி
நான் ஈ படத்தின் மூலம் தமிழ் மற்றும் தெலுங்கில் பிரபலமான நடிகராக உள்ளார் நானி. இவரது நடிப்பில் தெலுங்கில் சிறப்பான பல படங்கள் ரிலீசாகி வருகின்றன. இந்நிலையில் தற்போது இவர் நடித்துவரும் படம் ஷ்யாம் சிங்கா ராய். இந்தப் படத்தில் இவருக்கு ஜோடி சேர்ந்துள்ளார் சாய் பல்லவி.

டிசம்பர் 24ல் ரிலீஸ்
படத்தில் கிருத்தி ஷெட்டியும் நடித்துள்ளார். இந்தப் படம் ரசிகர்களின் விருப்பத்திற்கும் எதிர்பார்ப்பிற்கும் உள்ளாகியுள்ளது. படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில் தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. படம் கிறிஸ்துமசையொட்டி டிசம்பர் 24ம் தேதி ரிலீசாக உள்ளது.

4 மொழிகளில் ரிலீஸ்
நிஹாரிகா என்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் சார்பில் வெங்கட் போயன் பள்ளி இந்தப் படத்தை தயாரித்துள்ளார். படத்தை இயக்கியுள்ளார் ராகுல் சங்க்ரித்யன். படம் மிகவும் பிரம்மாண்டமாக அதிக பொருட்செலவில் உருவாகியுள்ளது. படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய தென்னிந்திய மொழிகளில் ரிலீசாக உள்ளது.

சிவா வெளியிட்ட தமிழ் டீசர்
இன்றைய தினம் படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. தமிழில் டீசரை நடிகர் சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார். நேச்சுரல் ஸ்டார் மற்றும் தனது நண்பர் நானி படத்தின் டீசரை வெளியிடுவதில் மகிழ்ச்சி என்றும் அவர் கூறியுள்ளார்.

3 நாயகிகள்
படத்தில் சாய் பல்லவி, கிருத்தி ஷெட்டி மற்றும் மடோனா சபாஸ்டியன் என 3 ஹீரோயின்கள் நடித்துள்ளனர். படத்தில் நானி இரட்டை கதாபாத்திரங்களில் நடித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஆக்ஷன் படமாக உருவாகியுள்ள இந்தப் படத்தின் டீசர் தற்போது ரசிகர்களை கவரும் வகையில் அமைந்துள்ளது.

திரையரங்குகளில் ரிலீஸ்
படத்திற்கு இசையமைத்துள்ளார் மிக்கி ஜே மேயர். முன்னதாக நானியின் வி மற்றும் டக் ஜெகதீஷ் படங்கள் கொரோனா காரணமாக ஓடிடியில் வெளியான நிலையில் தற்போது ஷ்யாம் சிங்கா ராய் படம் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











