“அடடே சுந்தரா“.. கலகலப்பான காமெடி திரைப்படம்.. நிச்சயம் அனைவருக்கும் பிடிக்கும் !

சென்னை : குடும்பத்துடன் பார்த்து ரசிக்க வேண்டிய காதல் பாடம் 'அடடே சுந்தரா" என்று நானி தெரிவித்துள்ளார்.

Actor Nani said that, Adade Sundara was nice comedy movie

நானி, நஸ்ரியா, நரேஷ், அழகம்பெருமாள், நதியா, ரோகிணி உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் அடடே சுந்தரா. தெலுங்கு இயக்குநர் விவேக் ஆத்ரேயா இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு நகேத் பொம்மி ஒளிப்பதிவு செய்துள்ளார். விவேக் சாஹர் இசை அமைத்திருக்கிறார். மைதிரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படம், தெலுங்கு, தமிழ், மலையாளம் மொழிகளில் வரும் 10-ம் தேதி வெளியாக உள்ளது.

அடடே சுந்தரா படத்தின் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் பேசிய நானி,அடடே சுந்தரா படத்தில் நடித்தது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. ஷ்யாம் சிங்கா ராய் போன்ற ஆக்சன் படங்களில் நடித்துவிட்டு, நகைச்சுவையும், காதலும் கலந்த திரைக்கதையில் நடித்திருக்கிறேன். இந்த படம் நிச்சயம் ரசிகர்களுக்கு விருந்தாக இருக்கும் என்றார்.

Actor Nani said that, Adade Sundara was nice comedy movie

தொடர்ந்து பேசிய நானி, படத்தின் கதை, அனைத்து தரப்பு மக்களையும் கவரும் வகையில் அமைந்து இருப்பதாகவும், படத்தின் உணர்வுப்பூர்வமான திரைக்கதை, அனைத்துவித ரசிகர்களையும் கவரும். எங்களுடைய ஒட்டுமொத்த படக்குழுவினரும் இப்படத்திற்காக கடினமாக உழைத்து இருக்கிறோம் என்றார் நானி. ஜூன் 10ந் தேதி வெளியாக உள்ள இந்த திரைப்படத்தை அனைவரும் திரையரங்கில் பார்த்து மகிழ்ச்சி அடைய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

Actor Nani said that, Adade Sundara was nice comedy movie

இதையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய நஸ்ரியா, இந்தப் படத்தில் நானியுடன் இணைந்து நடித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். காதல் கதைக்கு ஊக்கமும், ஆதரவும் அளித்து வரும் தமிழ் ரசிகர்கள் அடடே சுந்தரா படத்திற்கும் ஆதரவு வழங்க வேண்டும். பொழுதுபோக்கு அம்சங்களுடன் காதலும் நகைச்சுவையும் கலந்து உருவாகியிருக்கும் இந்தப் படம் ரசிகர்களுக்கு ஜாலியான அனுபவத்தைக் கொடுக்கும் என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X