தசரா படப்பிடிப்பில் குடித்தது உண்மைதான்..பேட்டியில் உண்மையை உளறி கொட்டிய நானி!

சென்னை : தசரா படப்பிடிப்பின் போது ரியாலிட்டிக்காக உண்மையில் மது குடித்தேன் என நானி பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படத்தில், நானி, கீர்த்தி சுரேஷ்,சமுத்திரக்கனி, தீக்ஷித் ஷெட்டி, ஷைன் டாம் சாக்கோ, ஜரீனா வஹாப் ஆகியோர் நடித்துள்ளனர்.

கிராமத்து பின்னணியில் உருவாகி உள்ள இப்படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் வெண்ணிலா என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

நடிகர் நானி

நடிகர் நானி

நடிகர் நானி தன்னுடைய இயல்பான நடிப்பின் மூலம் பான் இந்தியா ஸ்டாராக மாறி உள்ளா. இவரது நடிப்பில் ஷியாம் சிங்கா ராய், அடடே சுந்தரா என அடுத்தடுத்த படங்கள் வெளியாகி மாபெரும் வெற்றிப்பெற்றன. இதில் ஷியாம் சிங்கா ராய் திரைப்படம் வசூலை அள்ளியது.

தசரா ரிலீஸ் தேதி

தசரா ரிலீஸ் தேதி

இந்த படத்தைத் தொடர்ந்து ஆக்ஷன் கலந்த என்டர்டெயின்மென்ட் திரைப்படமாக உருவாகி உள்ள படம் தான் தசரா. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் முதல் பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. பான் இந்திய திரைப்படமாக வெளியாகி உள்ள இந்த படத்தில், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் பல மொழிகளில், இந்த மார்ச் மாதம் 30ம் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது.

கதை பிடித்து விட்டது

கதை பிடித்து விட்டது

படம் வெளியாக ஒரு நாளே எஞ்சிஇருக்கும் நிலையில், படத்தின் ப்ரோமோஷன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படம் குறித்து பேட்டி அளித்த நானி, இந்த படத்தின் கதையை கேட்டவுடன் பிடித்துவிட்டதால், ஒகே சொல்லி விட்டேன். அதே போல இந்த படத்தில் இடம் பெற்ற வசனத்திற்காக நான் பெரியதாக சிரமப்படவில்லை எல்லாம் இயல்பாக இருந்தது.

ரியாலிட்டிக்காக மது அருந்தினேன்

ரியாலிட்டிக்காக மது அருந்தினேன்

அதே போல இந்த படத்தில் பல காட்சிகளில் ரியாலிட்டிக்காக மது அருந்தினேன். இந்த படத்தில் எனது கதாபாத்திரத்தின் கண் எப்போதும் மது அருந்தியது போல சிவப்பாகவே இருக்க வேண்டும். இதற்காக தண்ணீர் அல்லது வேறு ஏதாவது குடித்தால் அந்த ரியாலிட்டி இருக்காது என்று இயக்குநர் கூறினார்.

தத்ரூபமான காட்சி

தத்ரூபமான காட்சி

இதனால், ஒரு சில காட்சிகளில் உண்மையான மதுவை குடிப்பது போல காட்சி வைக்கலாமா என இயக்குநர் தயக்கத்தோடு என்னிடம் கேட்டார். அவர் கோரிக்கையை நான் ஏற்றுக்கொண்டேன். ஷாட்டுக்கு இரண்டு சிப்ஸ் அல்லது இரண்டு டம்ளர் மது அருந்தி நடித்தேன் அந்த காட்சி மிகவும் தத்ரூபமாக வந்துள்ளது. இந்த படம் நிச்சயம் வெற்றிபெறும் என்று நான் நம்புகிறேன் என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X