Nani Net worth: நான் ஈ நாயகன் நானிக்கு ஹேப்பி பர்த்டே.. அடேங்கப்பா இத்தனை கோடிக்கு சொந்தக்காரரா?
ஹைதராபாத்: டோலிவுட் திரையுலகின் முன்னணி நடிகர் நானியின் 39வது பிறந்தநாள் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சமூக வலைதளங்களில் நடிகர் நானிக்கு ஏகப்பட்ட திரை பிரபலங்களும் ரசிகர்கள் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இயக்குநர் மணிரத்னத்தின் படங்களை பார்த்து ஈர்க்கப்பட்ட நடிகர் நானி திரைத்துறையில் இயக்குநராக வரவேண்டும் என்றே போராடினார். ஆனால், 2008ம் ஆண்டு அஸ்த சம்மா படத்தின் மூலம் அவரது தலையெழுத்து நீ ஒரு ஹீரோ மெட்டீரியல்ப்பா என மேக்கப் போட்டு நடிக்க அனுப்பி வைத்தது.
இதுவரை 34 படங்களில் நடித்துள்ள நடிகர் நானி ஒட்டுமொத்தமாக சேர்த்து வைத்துள்ள சொத்து மதிப்பு மற்றும் புதிய படங்களுக்கு அவர் வாங்கும் சம்பளம் உள்ளிட்ட விவரங்களை விபரமாக இங்கே பார்ப்போம்..

ஹேப்பி பர்த்டே நானி
டோலிவுட் சினிமாவின் பல முன்னணி நடிகர்கள் சென்னையில் பிறந்து வளர்ந்த நிலையில், 1984ம் ஆண்டு பிப்ரவரி 24ம் தேதி ஹைதராபாத்தில் பிறந்து வளர்ந்த நடிகர் நானியின் 39வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. ஆரம்பத்தில் இயக்குநராக வேண்டும் என சினிமாவுக்கு வந்து கிளாப் பாயாக எல்லாம் கஷ்டப்பட்ட நானி அதன் பின்னர் சினிமாவில் ஹீரோவாக அசத்திய போராட்டக் கதையை வைத்தே தனியாக ஒரு படத்தையே உருவாக்கலாம்.

’நான் ஈ’ ஹீரோ
வெப்பம் படத்தின் மூலமே தமிழ் சினிமாவில் அறிமுகமான நானிக்கு மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்த படம் என்றால் அது இயக்குநர் ராஜமெளலி இயக்கத்தில் வெளியான நான் ஈ திரைப்படம் தான். நானி சில காட்சிகள் மட்டுமே நடித்திருந்தாலும், இன்று வரையில் அவருக்கான அடையாளமாகவே அந்த படம் அமைந்துள்ளது. சமந்தா, கிச்சா சுதீப் நடித்த அந்த திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என பர்ஃபெக்ட்டான பைலிங்குவல் படமாக வெளியாகி வசூலில் சக்கைப் போடு போட்டது.

நேச்சுரல் ஸ்டார்
தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார் நடிகர் நானி. ஆஹா கல்யாணம், நேனு லோக்கல், தேவதாஸ், வி உள்ளிட்ட படங்களில் நடித்தாலும், ஜெர்ஸி திரைப்படம் தான் அவருக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தை இந்தியளவில் பெற்றுத் தந்தது. தேசிய விருது வென்ற அந்த படத்தை தொடர்ந்து பெரிய பட்ஜெட் படங்களில் நானி நடித்து வருகிறார். அவரது சம்பளமும் அதிகரித்து விட்டது.

ஷியாம் சிங்கா ராய்
நேச்சுரல் ஸ்டார் நானி என்றே ரசிகர்கள் அவரை அன்போடு அழைத்து வருகின்றனர். இயல்பாக படங்களில் பெரிய பந்தா இல்லாமல் நடித்து வரும் நானி நடிகை சாய் பல்லவி உடன் இணைந்து நடித்த ஷியாம் சிங்கா ராய் படமும் ரசிகர்களின் கவனத்தை அதிகம் கவர்ந்தது. அடுத்ததாக கீர்த்தி சுரேஷ் உடன் இணைந்து நானி நடித்துள்ள தசரா படம் இந்த ஆண்டு வெளியாகி மிரட்ட காத்திருக்கிறது.

நானியின் சம்பளம்
நடிகர் நானி ஒரு படத்துக்கு 6 முதல் 8 கோடி ரூபாய் சம்பளம் வாங்கி வந்த நிலையில், தசரா படத்துக்கு 15 கோடி ரூபாய் சம்பளமாக வாங்கி உள்ளார் என தகவல்கள் வெளியாகி உள்ளன. ஹிட் கேஸ் 3ம் பாகம் மற்றும் மேலும், ஒரு படத்திலும் நடித்து வருகிறார் நானி.

மனைவி மற்றும் மகன்
நானி காதலித்து வந்த அஞ்சனா எனும் பெண்ணை கடந்த 2012ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். நானிக்கு அர்ஜுன் எனும் அழகான ஆண் குழந்தை உள்ளது. மனைவி மற்றும் மகனுடன் ஹைதராபாத்தில் உள்ள டிரைடன்ட் டவர்ஸ் சொகுசு குடியிருப்பில் வாழ்ந்து வருகிறார் நானி. 8 சொகுசு பெட்ரூம் கொண்ட அரண்மனை போன்ற வீட்டில் தனியாக ஜிம் ஒன்றும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

சொகுசு கார்கள்
நடிகர் நானி சொகுசு கார்களை அதிகம் விரும்புவர் தனியாக கார் கலெக்ஷனே வைத்துள்ளார். 2.75 கோடி மதிப்புள்ள லேண்ட் ரோவர் ரேஞ்ச் ஓவர் 3.0 வோக், 62 லட்சம் ரூபாய் மதிப்புள்ள BMW 5 Series, 25 லட்சம் ரூபாய் மதிப்புள்ள Toyota Innova Crysta மற்றும் சொகுசு பைக்குகள் என ஏகப்பட்டவை நானியிடம் உள்ளன.

சொத்து மதிப்பு
நடிகர் நானியிடம் ஒட்டுமொத்தமாக 65 முதல் 70 கோடி ரூபாய் சொத்து உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஹைதராபாத்தை தாண்டி வேறு சில ஊர்களிலும் அவருக்கு சொந்தமாக சில வீடுகள் இருப்பதாக கூறுகின்றனர். நானியின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











