நானியின் சூர்யாவின் சாட்டர்டே படத்தின் முதல் நாள் வசூல் இவ்வளவா.. அதிகாரப்பூர்வமாக வெளியிட்ட டீம்!

சென்னை: நடிகர் நானியின் 31வது படமாக உருவாகி நேற்றைய தினம் திரையரங்குகளில் ரிலீசாகியுள்ளது சரிபோதா சனிவாரம் படம். தமிழில் சூர்யாவின் சாட்டர்டே என வெளியாகியுள்ள இந்தப் படம் தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடி வருகிறது. விவேக் ஆத்ரேயா இயக்கத்தில் இரண்டாவது முறையாக இந்தப்படம் மூலம் நானி இணைந்துள்ளார்.

படத்தில் நானியுடன் எஸ்ஜே சூர்யா, பிரியங்கா மோகன் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள நிலையில், இந்தப் படத்தின்மூலம் நேரடி தெலுங்குப்படத்தில் எஸ்ஜே சூர்யா நடித்துள்ளார். அவரது நடிப்பு தெலுங்கு ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றுத் தந்துள்ளது.

nani saripodhaa sanivaaram sj surya

சரிபோதா சனிவாரம் படம்: நடிகர் நானி இயக்குநர் விவேக் ஆத்ரேயாவுடன் இரண்டாவது முறையாக இணைந்து சரிபோதா சனிவாரம் படம் நேற்றைய தினம் சர்வதேச அளவில் ரிலீசாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ளது. நானியின் 31வது படமான இந்தப் படத்தில் அவருடன் எஸ்ஜே சூர்யா, பிரியங்கா மோகன் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர். முன்னதாக நானி -விவேக் ஆத்ரேயா கூட்டணியில் வெளியான ஆண்டே சுந்தரானிகி படம் மிகப்பெரிய அளவில் ஹிட்டடித்த நிலையில் இந்தப் படத்திற்கும் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருந்தது. இந்நிலையில் படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை சரியான அளவில் பூர்த்தி செய்துள்ளது.

நானியின் அடுத்த வெற்றி: சில கலவையான விமர்சனங்களையும் படம் பெற்றுள்ள நிலையிலும் படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வெற்றிநடை போட்டு வருகிறது. குறிப்பாக தமிழ் ரசிகர்களையும் இந்தப் படம் வெகுவாக ஈர்த்துள்ளது. இந்த வாரம் தமிழ் படங்கள் எதுவும் ரிலீசாகாத நிலையில் நானியின் சரிபோதா சனிவாரம், சூர்யாவின் சாட்டர்டேவாக ரசிகர்களை கவர்ந்து தமிழிலும் வெற்றிநடை போட்டு வருகிறது. படத்திற்கு முன்னதாக நானி, பிரியங்கா மோகன், எஸ்ஜே சூர்யா மற்றும் இயக்குநர் விவேக் ஆத்ரேயா ஆகியோர் சரியான பிரமோஷன்களை கொடுத்திருந்தனர். குறிப்பாக நானி மற்றும் எஸ்ஜே சூர்யாவின் ஜோடி மாஸ் காட்டியிருந்தது.

nani saripodhaa sanivaaram sj surya

நானி -எஸ்ஜே சூர்யா காம்போ: பிரமோஷன்களில் மட்டுமில்லாமல் படத்திலும் இந்த காம்பினேஷன் மாஸ் காட்டியுள்ளது. பிரியங்கா மோகனுக்கும் படத்தில் அழுத்தமான கேரக்டர் அமைந்துள்ள நிலையில், அவரும் நடிப்பில் அசத்தியுள்ளார். படம் தமிழ், தெலுங்கில் மட்டுமில்லாமல் கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியாகியுள்ளது. முன்னதாக ஷ்யாம் சிங்கா ராய் படத்திலிருந்தே பான் இந்தியா ஸ்டாராக மாறியுள்ளார் நானி. இந்தப் படத்திலும் அது தொடர்ந்துள்ளது. இந்நிலையில் படத்தின் அதிகாரப்பூர்வ கலெக்ஷனை படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

முதல் நாள் வசூல்: படம் சர்வதேச அளவில் முதல் நாளிலேயே 24.11 கோடிகளை வசூலித்துள்ளதாக படத்தின் தயாரிப்பு நிறுவனமான டிவிவி என்டர்டெயின்மெண்ட் அறிவித்துள்ளது. மேலும் பாக்ஸ் ஆபீஸ் சிவ தாண்டவமே என்றும் தெரிவித்துள்ளது. தொடர்ந்து ஷ்யாம் சிங்கா ராய் உள்ளிட்ட அடுத்தடுத்த படங்களில் சிறப்பான வெற்றியை கொடுத்து வரும் நானிக்கு இந்தப் படமும் மிகச்சிறப்பாக அமைந்துள்ளது. அடுத்தடுத்த நாட்களில் இந்தப் படத்தின் கலெக்ஷன் மிகச்சிறப்பாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X