எஸ்ஜே சூர்யாவிற்கு எதிராக திரண்ட நானி -பிரியங்கா மோகன்.. மிரட்டலான சூர்யாவின் சனிக்கிழமை பட டீசர்!
சென்னை: நடிகர் நானி தெலுங்கில் முன்னணி இளம் நடிகராக தொடர்ந்து ஏராளமான ரசிகர்களின் விருப்பத்திற்குரிய நாயகனாக வலம்வந்துக் கொண்டிருக்கிறார். இவருக்கு தெலுங்கில் மட்டுமில்லாமல் தமிழ், இந்தி ஆகிய மொழிகளிலும் ஏராளமான ரசிகர்கள் காணப்படுகின்றனர். வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் நானி நடிப்பில் கடந்த ஆண்டு இறுதியில் ஹாய் நானா படம் வெளியாகி மிகப்பெரிய அளவில் அவருக்கு வரவேற்பை பெற்றுக் கொடுத்தது.
இந்நிலையில் அடுத்ததாக சரிபோதா சனிவாரம் படத்தில் நடித்து முடித்துள்ளார் நானி. இந்தப் படம் தமிழ் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பான் இந்தியா படமாக வரும் ஆகஸ்ட் 29ம் தேதி ரிலீசாகவுள்ளது. இந்நிலையில் படத்தில் வில்லனாக மிரட்டலான நடிப்பை கொடுத்துள்ள எஸ்ஜே சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷலாக இன்றைய தினம் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

நடிகர் நானி: நடிகர் நானி அழுத்தமான கதைக்களங்களில் நடித்து ஏராளமான ரசிகர்களை தொடர்ந்து கவர்ந்து வருகிறார். தெலுங்கில் மட்டுமில்லாமல் தமிழ், ஹிந்தி மொழிகளிலும் ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ளார். இந்நிலையில் தற்போது சரிபோதா சனிவாரம் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார் நானி. இந்தப் படம் வரும் ஆகஸ்ட் மாதம் 29ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த படத்தின் ப்ரோமோஷன்களில் தற்போது படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். பிரியங்கா மோகன், எஸ்ஜே சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்துள்ளனர்.
சூர்யாவின் சனிக்கிழமை படம்: படம் தமிழில் சூர்யாவின் சனிக்கிழமை என்ற பெயரில் ரிலீசாகவுள்ளது. அடடே சுந்தரா படத்தின் இயக்குனர் ஆத்ரேயா மீண்டும் நானியுடன் இந்த படத்திற்காக இணைந்துள்ளார். இந்த படத்தை ஆர்ஆர்ஆர் படத்தின் தயாரிப்பாளர்கள் தனய்யா மற்றும் கல்யாண தாசரி ஆகியோர் இந்தப் படத்தை தயாரித்துள்ளனர். கடந்த ஆண்டிலேயே இந்த படத்தின் அறிவிப்பு வீடியோ மிகப் பெரிய அளவில் ரசிகர்களை கவரும் வகையில் வெளியானது. இதனிடையே, இந்த படத்தில் நானிக்கு வில்லனாக நடித்துள்ள எஸ்ஜே சூர்யாவின் பிறந்தநாளையொட்டி இன்றைய தினம் படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது.

பான் இந்தியா படம்: படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் பான் இந்தியா படமாக ரிலீசாக உள்ளது. நானியின் 31வது படமாக உருவாகியுள்ள இந்த படத்தின் அடுத்தடுத்த போஸ்டர்கள் உள்ளிட்டவை வெளியாகி ரசிகர்களை மிகப்பெரிய அளவில் கவர்ந்துள்ளன. கடந்த ஆண்டு இறுதியில் நானியின் நடிப்பில் வெளியான ஹாய் நானா படம் மிகப்பெரிய அளவில் அவருக்கு வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. முன்னதாக ஷியாம் சிங்கா ராய், அடடே சுந்தரா படங்களும் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்ற நிலையில் தசரா படம் அவருக்கு கலவையான விமர்சனங்களை பெற்றுக் கொடுத்தது.
மிரட்டல் டீசர்: இந்நிலையில் அடடே சுந்தரா படத்துக்கு பிறகு தற்போது இயக்குநர் விவேக் ஆத்ரேயாவுடன் மீண்டும் இந்த படத்தில் நானி கூட்டணி அமைத்துள்ளார். அடடே சுந்தரா மிகப் பெரிய அளவில் வரவேற்பை பெற்ற நிலையில் மீண்டும் அந்த மேஜிக்கை இந்த கூட்டணி நிகழ்த்தும் என்று எதிர்பார்க்கலாம். இந்நிலையில் இன்றைய தினம் எஸ்ஜே சூர்யாவின் பிறந்தநாளையொட்டி வெளியாகி உள்ள டீசரில் நானி, பிரியங்கா மோகன், எஸ்ஜே சூர்யா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். மிக கொடூரமான வில்லனாக எஸ் ஜே சூர்யா இதில் காட்டப்பட்டுள்ளார் இந்நிலையில் இந்த டீசரிலேயே எஸ் ஜே சூர்யாவுக்கு, நானி ஹாப்பி பர்த்டே சார் என்று கூறுவதாக காணப்படுகிறது. இந்த காட்சிகள் படத்திலும் இடம்பெற்று இருக்குமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது


Click it and Unblock the Notifications











