என்னது நான் மன்னிப்பு கேட்டேனா.. குட்டி பையனாக மாறி.. நக்கலாக சிரிக்கும் நாஞ்சில் விஜயன்!
சென்னை: தொலைக்காட்சி பிரபலமான நாஞ்சில் விஜயன் நான் மன்னிப்பு கேட்டேனா என்ற கேப்ஷனுடன் ஷேர் செய்துள்ள வீடியோ வைரலாகி வருகிறது.
விஜய் டிவி பிரபலமான நாஞ்சில் விஜயனுக்கும் வனிதாவுக்கும் கடந்த சில நாட்களாக முட்டலும் மோதலுமாய் இருந்து வருகிறது.
வனிதாவின் பர்சனல் போட்டோக்களை வெளியிட்டார் நாஞ்சில் விஜயன். அதன் பிறகு அவரது ராஜமாத கெட்டப்பை கிண்டலடித்தார்.

நீங்கள் பாவம்
இந்நிலையில்தான் நாஞ்சில் விஜயன் தன்னிடம் மன்னிப்பு கேட்டதாக கூறி டிவிட்டினார். ஆனால் அதற்கு பதில் அளிக்கும் வகையில் டிவிட்டிய நாஞ்சில் விஜயன், சில விஷயங்களை புரிய வைக்க முயற்சி செய்தேன் அதை மன்னிப்பு என நீங்கள் நினைத்தால் நீங்கள் பாவம் என வனிதாவின் டிவிட்டர் ஹேண்டிலை குறிப்பிட்டு டிவிட்டினார்.

கையில் பூட்டுடன்
மேலும் இன்னும் பல பிரச்சனைகளை சந்திக்க தயாராக இருங்கள் என்றும் எச்சரித்திருந்தார். அந்த பிரச்சனை ஒரு பக்க்ம இருக்க நேற்று கையில் பெரிய பூட்டுடன் போஸ் கொடுத்த நாஞ்சில் விஜயன், இந்த பூட்டு ஒரு செலிபிரிட்டிக்கு தான் யார் என்று சொல்லுங்கள் என கேட்டார்.

நமுட்டுச் சிரிப்பு
அவர் வனிதாவைதான் வம்பிழுக்கிறார் என்று அறிந்த நெட்டிசன்ஸ், போய் வேலைய பாருங்கள் என்று அறிவுரை கூறினர். இந்நிலையில் குழந்தையை போன்று மாற்றம் செய்து காட்டும் அப்ளிகேஷன் மூலம் தன்னை ஒரு குழந்தையை போல காட்டிய நாஞ்சில் விஜயன், நமுட்டுச் சிரிப்பு சிரித்துள்ளார்.

சிரிப்புதான் வந்தது
அதற்கு என்னது நான் மன்னிப்பு கேட்டனா என கேப்ஷன் கொடுத்துள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்களும் ஆமா ஜி அந்த செய்தியை பார்த்ததும் எங்களுக்கும் சிரிப்புதான் வந்தது என பதில் கூறியுள்ளனர்.
View this post on Instagramஎன்னது நான் மன்னிப்பு கேட்டனா 🤣🤣 #Nanjilvijayan
A post shared by Nanjilvijayan (@nanjilvijayan) on
கஷ்டப்படுத்தி உயர கூடாது
அதேநேரத்தில் சில நெட்டிசன்கள், எதற்கு இப்படி நேரத்தை வீணடிக்கிறீர்கள்? நீங்கள் நல்ல காமெடி நடிகர் போய் அந்த வேலையே பாருங்க. கஷ்டப்பட்டு தான் உயரனும் அடுத்தவரை கஷ்டப்படுத்தி உயர கூடாது என அட்வைஸ் செய்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











