நெப்போலியன் உடன் அமெரிக்காவில் தொழிலதிபர் ஆதித்யாராம்.. எங்கே போயிருக்காருன்னு பாருங்க!
சென்னை: ஆதித்யாராம் பில்டர்ஸ் ஓனரும் சினிமாவுக்காக பிரம்மாண்டமாக ஆதித்யாராம் ஸ்டூடியோவையே உருவாக்கியுள்ள தொழிலதிபர் ஆதித்யாராம் சமீபத்தில், அமெரிக்காவுக்கு சென்ற நிலையில், நடிகர் நெப்போலியன் வீட்டுக்குசெ சென்று அவரது மகன் தனுஷை சந்தித்து பேசி வந்தார். அதன் வீடியோவையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்திருந்தார்.
இந்நிலையில், தற்போது நடிகர் நெப்போலியன் உடன் இணைந்து அமெரிக்காவில் ஈஷா யோக மையம் உருவாக்கியுள்ள கோயிலுக்குச் சென்று வழிபாடு நடத்திய வீடியோவையும் ஷேர் செய்துள்ளார்.

சமீபத்தில், நடிகர் தனுஷின் குபேரா படத்தின் இசை வெளியிட்டு விழாவிலும் ஆதித்யாராம் கலந்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.
உபசரிப்பதில் நெப்போலியனை மிஞ்ச முடியாது: தனது மகன் தனுஷின் திருமணத்துக்காக ஜப்பானுக்கே வந்த சினிமா பிரபலங்களை ரொம்பவே அக்கறையுடனும் அன்புடனும் கவனித்துக் கொண்டார் நடிகர் நெப்போலியன். உடல்நிலை முடியாத மகனுக்கு ஏன் திருமணம் செய்து வைக்கிறார் என ஏகப்பட்ட ஏளனப் பேச்சுகளையும் கடந்து தனது மகன் தனுஷுக்கு நினைத்ததை போலவே திருமணம் செய்து வைத்தார். இந்நிலையில், அமெரிக்காவுக்கு வந்த ஆதித்யாராமை தொடர்ந்து உபசரித்து வருகிறார் நடிகர் நெப்போலியன்.
நெப்போலியன் வீட்டில் ஆதித்யாராம்: ஆதித்யாராம் க்ரூப்ஸ் ஆஃப் சேர்மன் ஆதித்யாராம் சினிமாவிலும் அதிக ஆர்வம் செலுத்தி வருகிறார். ஸ்டூடியோவை உருவாக்கியுள்ள அவர், படத்தயாரிப்பிலும் ஈடுபட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில், அமெரிக்காவுக்குச் சென்ற ஆதித்யாராமை நடிகர் நெப்போலியன் தனது வீட்டுக்கு அழைத்த நிலையில், அவர் அங்கே சென்று பெட்டில் படுத்து இருந்த தனுஷிடம் பேசி, பாசக்கார அப்பா நெப்போலியன் என்றும் அவரை எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் என்றும் பேசிவிட்டு வந்தார்.
அமெரிக்காவில் ஈஷா மையம்: கோவையில் பிரம்மாண்டமாக ஈஷா மையத்தை ஜக்கி வாசுதேவ் உருவாக்கியுள்ள நிலையில், அதன் கிளை ஒன்று அமெரிக்காவின் டென்னஸ்ஸி பகுதியிலும் உள்ளது. அந்த இடத்துக்கு ஆதித்யாராமை நெப்போலியன் அழைத்துச் சென்ற நிலையில், அங்கே எடுத்துக் கொண்ட வீடியோவையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆதித்யாராம் ஷேர் செய்துள்ளார்.
ஹீரோவா நடிப்பாரா?: லெஜண்ட் சரவணன் போல இவரும் கூடிய சீக்கிரமே படத்தில் ஹீரோவாகவும் நடிப்பாரா? என்கிற கேள்விகளையும் ரசிகர்கள் எழுப்பி வருகின்றன்ர். பார்க்க ஆள் ரொம்பவே ஸ்மார்ட்டாக இருக்காரே என்றும் குபேரா ஆடியோ லாஞ்சிலேயே ரியல் குபேரா என செம மாஸ் என்ட்ரி கொடுத்தாரே என கமெண்டுகள் குவிந்து வருகின்றன.


Click it and Unblock the Notifications











