For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஹாலிவுட்டில் கால் பதிக்கும் நெப்போலியன் அங்கேயும் மீசையை முறுக்குவாரா

|
Christmas Coupon Movie Trailer Launch - ஹீரோயின் கூட நெருக்கமா நடிக்க வாய்ப்பு கிடைச்சிருக்கு !

சென்னை: தமிழ் சினிமாவில் நாயகன், வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்த நடிகர் நெப்போலியன் முதன் முறையாக ஹாலிவுட் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகயுள்ளார். இதன் மூலம் ஹாலிவுட் படத்தில் நடிக்கும் முதல் தமிழ் நடிகர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் ஆகிறார்.

தென்னிந்திய திரையுலகை கலக்கிய நம் நெப்போலியன் தற்போது ஹாலிவுட்டிலும் வெற்றிகரமாக அடி எடுத்து வைத்துள்ளார். டெவில் நைட், டான் ஆப் தி நேன் ரோக் எனும் சூப்பர் திரில்லர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதை தொடர்ந்து கிறிஸ்துமஸ் கூப்பன் எனும் காதல் கதையில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இது பற்றி கருத்து தெரிவித்த நெப்போலியன், நான் காணும் கனவை நான் நம்புகிறேன் அதனால் அதனோடு ஒத்துப்போகிறேன், என்று கிறிஸ்துமஸ் கூப்பன் பிரஸ் மீட்டின் போது கூறினார். அதை அவரது வாழ்விலும் அவர் நிகழ்த்தி காட்டியுள்ளார்.

பிக் பாஸ் இறுதிப்போட்டியில் ஜெயிக்கப்போவது வெளிநாட்டுக்காரர் தான் சொல்கிறார் பாலாஜி ஹாசன்

உயரமான நடிகர்கள்

உயரமான நடிகர்கள்

உயரமான நடிகர்களை கூறுங்கள் என்று யாராவது நம்மிடம் கேட்டால் நம் நினைவுக்கு வருபவர்கள் அமிதாப் பச்சன், ரகுவரன், அஜய் ரத்னம் மற்றுமொருவர் நெப்போலியன் என விரல் விட்டு என்னும் அளவிற்கு தான் திரையுலகில் இருக்கிறார்கள். 100 படங்களுக்கும் மேலாக தென்னிந்திய திரைப்படங்களில் தனது சிறப்பான நடிப்பால் பல பாராட்டுகளை பெற்றவர். கிராமத்து கதாபாத்திரங்களுக்கு மிகவும் பொருத்தமானவர்.

முரட்டு தோற்றம் முறுக்கிய மீசை

முரட்டு தோற்றம் முறுக்கிய மீசை

கிட்டத்தட்ட ஆறரை அடி உயரம் உள்ள குமரேசன் துரைசாமி என்ற சாதாரண மனிதன் இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் கண்ணில் பட்டார். அவருடைய முரட்டுத்தனமான தோற்றமும், முறுக்கிய மீசையுமே, இயக்குநர் பாராதிராஜாவின் பார்வையில், இவரை நம்முடைய புது நெல்லு புது நாத்து படத்தில் வில்லனா நடிக்க வைக்கலாமே என்று எண்ணத்தோன்றியது.

ரஜினிக்கு நிகரான நடிப்பு

ரஜினிக்கு நிகரான நடிப்பு

இப்படித்தான் நடிகர் நெப்போலியன் புது நெல்லு புது நாத்து என்ற படத்தில் இயக்குநர் இமயம் பாரதிராஜா மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். பின்னர் பல படங்களில் நெகடிவ் ரோல்களில் நடித்தார். எஜமான் படத்தில் அவரின் வல்லவராயன் கதாபாத்திரம் மிகவும் முக்கியமான கதாபாத்திரமாக அமைந்தது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் கதாபாத்திரத்திற்கு நிகரான ஒரு நடிப்பு.

சீவலப்பேரி பாண்டி

சீவலப்பேரி பாண்டி

பின்பு டாப் கியர் போட்டு கதாநாயகன் பாத்திரத்தில் மேலேறி சீவலப்பேரி பாண்டி, கிழக்கு சீமையிலே போன்ற படங்களில் நடித்து அனைவரையும் கவனிக்க வைத்தார்.

குறிப்பாக சீவலப்பேரி பாண்டி என்னும் நெல்லை சீமையில் வாழ்ந்து மறைந்த ஒருவரின் உண்மைக் கதையில் நடித்த பிறகு தான் இவரின் மார்கெட் எகிறத் தொடங்கியது.

அப்போது வெளியான இந்தப் படத்தின் போஸ்டர்களில் நெப்போலியன் வீச்சரிவாளை கையில் பிடித்துக்கொண்டு நிற்கும் போஸ் பார்ப்பவர்களை மிரள வைத்தது. பின்பு எட்டுப்பட்டி ராசா, சின்னமணி, தமிழச்சி போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்தார்.

தசாவதாரம்

தசாவதாரம்

பின்பு கதாநாயகனிலிருந்து குணசித்திர கேரக்டர்களில் நடிக்கத் தொடங்கி, போக்கிரி, தசாவதாரம், விருமாண்டி போன்ற படங்களில் உலகநாயகன் கமல்ஹாசனுடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படி கமல்ஹாசன், ரஜினிகாந்த் போன்ற திரையுலக ஜாம்பவான்களுடனும் இணைந்து நடித்துள்ளார். மேலும் பல முன்னணி கதாநாயகர்களுடனும் நடித்திருக்கிறார்.

கிறிஸ்துமஸ் கூப்பன்

கிறிஸ்துமஸ் கூப்பன்

இப்படி தென்னிந்திய திரையுலகை கலக்கிய நம் நெப்போலியன் தற்போது ஹாலிவுட்டிலும் வெற்றிகரமாக அடி எடுத்து வைத்துள்ளார். டெவில் நைட், டான் ஆப் தி நேன் ரோக் எனும் சூப்பர் திரில்லர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதை தொடர்ந்து கிறிஸ்துமஸ் கூப்பன் எனும் காதல் கதையில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இணையமைச்சர் நெப்போலியன்

இணையமைச்சர் நெப்போலியன்

நடிப்பு மட்டுமின்றி அரசியலிலும் அவரது பங்களிப்பு மிகுதியானது. விவசாய குடும்பத்தில் பிறந்து வாழ்ந்த இவர் கல்லூரி காலத்திலேயே திராவிட முன்னேற்ற கழக கொள்கைகள் மீது பற்றோடு இருந்தார். அவரின் அந்த பற்று அவரை தி.மு.க வின் சார்பில் பெரம்பலூர் லோக்சபா தொகுதியில் போட்டியிட வைத்தது. தேர்தலில் வெற்றி பெற்று மத்திய சமூகநீதித் துறை இணையமைச்சராக மன்மோகன் சிங் அமைச்சரைவையில் பொறுப்பேற்றார்.

அமெரிக்கன் சிட்டிசன்

அமெரிக்கன் சிட்டிசன்

திருச்சியை பூர்வீகமாக கொண்டவர், இன்று அமெரிக்காவின் சிட்டிசனாகவே மாறிவிட்டார். சென்னையில் ஜீவன் டெக்னாலஜிஸ் எனும் மென்பொருள் நிறுவனத்தை தொடங்கி பின்னர் அதை நியூஸிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளில் அதை விரிவுபடுத்தினார். அப்போது தொழில்முறை நண்பரான கணேஷ் ஆங்கில படம் ஒன்றை தயாரித்து அதில் நெப்போலியனை ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வற்புறுத்தியுள்ளார். இதுவே நெப்போலியன் ஹாலிவுட் படத்தில் நடிப்பதற்கான காரணம்.

கனவை நம்புகிறேன்

கனவை நம்புகிறேன்

நெப்போலியன், நான் காணும் கனவை நான் நம்புகிறேன் அதனால் அதனோடு ஒத்துப்போகிறேன், என்று கிறிஸ்துமஸ் கூப்பன் பிரஸ் மீட்டின் போது கூறினார். அதை அவரது வாழ்விலும் அவர் நிகழ்த்தி காட்டியுள்ளார். சிறிது காலம் தனது குடும்பத்தில் ஏற்பட்ட சில பிரச்சனைகளால் அமெரிக்காவிற்கு சென்றவர் இன்று அந்த நாட்டின் கிரீன் கார்டை பெற்றுவிட்டார்.

எட்டுப்பட்டி ராசா

எட்டுப்பட்டி ராசா

இந்த நிலையில் தற்போது அவருடைய இளமைக்கால புகைப்படங்கள் வலைத்தளங்களில் வெளியாகி வருகின்றன. அந்த புகைப்படங்களை பார்க்கும் போது அவரின் எளிமை மற்றும் அவர் கடந்து வந்த கடுமையான பாதைகள் நமக்கு தெரிகின்றது. அவை அனைத்தும் பொக்கிஷமாக வைத்து பாதுகாக்க வேண்டிய புகைப்படங்கள். ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்து, வளர்ந்து எட்டுப்பட்டி ராசாவாக உயர்ந்த நெப்போலியன் இன்று ஹாலிவுட்டில் நடிக்கும் அந்தஸ்தை பெற்றுள்ளார். ஹாலிவுட் ராசா என்ற பெயரை நெப்போலியன் பெறுவாரா என்று பார்க்கலாம்.

English summary
Actor, Napoleon, who is playing the role of hero, villain and character in Tamil cinema, has signed on for the first time in Hollywood. This makes him the first Tamil actor to act in a Hollywood movie.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more