Nepolean: புகுந்த வீட்டிற்கு வந்த அக்ஷயா.. மருமகளை தடபுடலாக வரவேற்ற நெப்போலியன்!

சென்னை: நடிகர் நெப்போலியனின் மகன் தனுஷின் திருமணம் கடந்த ஆண்டு ஜப்பானில் பாரம்பரிய முறைப்படி கோலாகலமாக நடைபெற்றது. இந்த திருமணத்தில் சரத்குமார், ராதிகா, சுஹாசினி, குஷ்பு, மீனா, கார்த்தி, கலா மாஸ்டர் என பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள். திருமணம் முடிந்த கையோடு தனுஷ் ஆசைப்பட்டபடி அனைவரும் கப்பலில் பயணம், பல நாடுகள் சுற்றுலா சென்றுவிட்டு தற்போது தான் முதன் முதலாக அக்ஷயா தனது சொந்த வீட்டிற்கு வந்துள்ளார்.

தமிழ் சினிமாவின் வில்லன் நடிகரான நெப்போலியன் தன்னுடைய மகன்களின் விருப்பத்திற்காக முழுவதுமாக அரசியலில் இருந்து விலகிய அமெரிக்காவில் செட்டிலாகி விட்டார். அவ்வபோது திரைப்படங்களில் தலைகாட்டி வருகிறார் நெப்போலியன். பின் அமெரிக்காவில், ஒரு ஐடி நிறுவனத்தையும் தொடங்கி, ரூ.1000 கோடி முதல் ரூ.1500 கோடி வரை சொத்துக்கு அதிபதியாக இருக்கிறார் நொப்போலியன்.
மூத்த மகனுக்கு திருமணம் செய்து பார்க்க ஆசைப்பட்ட நெப்போலியன், தனது உறவுக்கார பெண்ணான அக்‌ஷயா என்பவரை திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, அரசியல் தலைவர்கள், நடிகர்கள், பிரபலங்கள் என அனைவருக்கும் பத்திரிக்கை கொடுக்கப்பட்டு, அனைவரும் வியந்து போகும் அளவிற்கு ஜப்பானில் திருமணம் நடந்தது.

Napoleon Dhanush akshaya
Photo Credit:

நடிகர் நெப்போலியன்: தமிழ்நாட்டில் திருமணம் நடந்தால், எப்படி நடக்குமோ அது போல, பந்தக்கால் நடுவது, ஹல்தி என அனைத்தும் செய்து திருமணம் நடந்தது. இந்த திருமணத்திற்காக பல நடிகர்கள் இரண்டு நாட்களுக்கு முன்பே ஜப்பான் சென்றுவிட்டனர். அவர்கள் அனைவருக்கும் ஸ்டார் ஓட்டலில் அறை எடுத்து தங்கவைத்து நன்றாக கவனித்துக்கொண்டார் நெப்போலியன். அக்ஷயா, நெப்போலியனின் உறவுக்கார பெண், ஏழ்மையான குடும்பம் என்பதால் தான் இதுபோன்ற ஒரு தியாகத்தை அந்த பெண் செய்து இருக்கிறாள். தனுஷ் மற்றும் அக்ஷயா திருமணம் குறித்து பலவிதமான விமர்சனங்கள் எழுந்தாலும், அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர்.

மருமகளுக்கு வரவேற்பு: தனுஷூக்கு பல நாடுகளை சுற்றிப்பார்க்க வேண்டும், கடல் பயணம் செய்ய வேண்டும் என்பது அவரின் நீண்ட நாள் அதற்காக, திருமணம் முடிந்த கையோடு தனுஷ் ஆசைப்பட்டபடி அனைவரும் கப்பலில் பயணம் மேற்கொண்டனர். கப்பலில் பல மாதமாக சுற்றிவிட்டு, பல நாடுகளுக்கு சுற்றுலா சென்றுவிட்டு, அண்மையில் தான் அமெரிக்காவில் உள்ள நெப்போலியனின் சொந்த வீட்டிற்கு வந்தார்கள். அந்த வீட்டில் தான் மாதம்பட்டி ரங்கராஜ், பரிதாபங்கள் கோபி, சுதாகர் தனுசை சந்தித்து பேசினார்கள். அந்த வீடியோவில் அக்ஷயா இல்லாததால் பலரும், அவர் எங்கே என கேட்டு வந்தனர்.

இந்நிலையில், திருமணமாகி பத்து மாதத்திற்கு பிறகு முதன்யாக தனது சொந்த வீட்டிற்கு வந்துள்ளார் அக்ஷயா. தனது மருமகள் வீட்டிற்கு வந்ததை நடிகர் நெப்போலியன் ஊரையே கூட்டி தடபுடலாக வரவேற்றுள்ளார். அக்ஷயா நடந்து வர அனைவரும் மலர் தூவி அவரை வரவேற்றனர். இது பார்ப்பதற்கே மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. இந்த வீடியோ நடிகர் நெப்போலியன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். பலரு அவருக்கு வாழ்த்தக்களை தெரிவித்து வருகின்றனர். ஜப்பானில் நடைபெற்ற திருமணத்தில் ஒரு சிலர் மட்டுமே கலந்து கொண்டதால், அமெரிக்காவில் ஒரு ரிசப்ஷன் நடைபெறும் என நெப்போலியன் ஏற்கனவே சொல்லி இருந்தது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X