ஜப்பான் வந்த மாப்பிள்ளை தனுஷ்..15 நாள் கப்பல் பயணம்.. அம்பானிக்கே டஃப் கொடுத்த நெப்போலியன்!
சென்னை: தமிழ் சினிமாவின் ஸ்டார் நடிகர் என்ற அந்தஸ்தை பெற்றவர் நெப்போலியன். இவரின் மூத்த மகன் தனுஷூக்கு அக்ஷயா என்பவருடன் நிச்சயம் நடந்த நிலையில், நவம்பர் மாதம் ஜப்பானில் திருமணம் நடைபெற உள்ளது. இதற்காக சொகுசு கப்பல் மூலம் ஜப்பானுக்கு பயணம் செய்த நெப்போலியனின் குடும்பம், 15 நாள் பயணத்திற்கு பிறகு ஜப்பான் சென்றுள்ளனர்.
நெப்போலியனின் மூத்த மகன் தனுஷ் தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர். அவரால் நடக்க முடியாது என்பதால், அமெரிக்காவில் அவருக்காக வீட்டைப் பார்த்து பார்த்து கட்டினார் நடிகர் நெப்போலியன். தற்போது மகன் தனுஷ் திருமண வயதை எட்டிவிட்டதை அடுத்து அவருக்கு திருமணம் செய்து வைக்க ஆசைப்பட்டார் நெப்போலியன். இதற்காக அவரின் உறவுக்கார பெண்ணான அக்ஷயாவை பேசி முடிக்கப்பட்டு ஜூன் மாதம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

நெப்போலியன் மகன்: இந்த திருமணம் குறித்து பல விமர்சனங்கள் எழுந்தாலும், அதை பொருட்படுத்தாமல் திருமணவேலையில் படுபஸியாக இருக்கிறார் நெப்போலியன். திருமணம் ஜப்பானில் நடப்பதால், ஜூலை மாதமே அரசியல் பிரமுகர்கள், திரைப்பிரபலங்கள் என அனைவருக்கும் பத்திரிக்கை கொடுத்து முடித்துவிட்டார். தனுஷ் மற்றும் அக்ஷயாவின் திருமண பத்திரிக்கை பழங்கால முறைப்படி ஓலைச்சுவடி வடிவில் அச்சிடப்பட்டு உள்ளது.
சொகுசு கப்பலில் பயணம்: தனுஷ் மற்றும் அக்ஷயாவின் திருமணம் நவம்பர் 7ஆம் தேதி புதன்கிழமை ஜப்பானின் தலைநகரமான டோக்கியாவில் நடைபெற உள்ளது. அதற்காக அமெரிக்காவில் இருந்து கனடா வரை சாலை வழிப் பயணம் மேற்கொண்ட நெப்போலியன் அங்கு இருந்து பெரிய சொகுசு கப்பலில் ஜப்பானுக்கு பயணம் செய்தார்.அந்த சொகுசு கப்பலில், பலவிதமான விளையாட்டு பொழுதுபோக்கு அம்சங்கள், விரும்பி உணவை சமைத்துக்கொடுக்க ஆட்கள் என சகல வசதியும் உள்ளது.
அம்பானிக்கே டஃப் கொடுப்பாரு போல: தற்போது நெப்போலியனின் குடும்பம் 15 நாள் தொடர் பயணத்திற்கு பிறகு ஜப்பானின் குஷிரோ துறைமுகம் வந்தனர். அங்கிருந்தவர்கள் நெப்போலியன் குடும்பத்தை பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். திருமணத்திற்கு இன்னும் ஒன்றரை மாதம் இருக்கும் நிலையில், இப்போது திருமண வேலைகளை பார்ப்பதற்காக நெப்போலியனின் குடும்பம் ஜப்பான் சென்றுள்ளது. அம்பானி தனது மகனுக்கு உலகமே வியந்து போகும் அளவிற்கு பல கோடிகளை கோட்டி திருமணம் செய்தார். அவருக்கே நெப்போலியன் டஃப் கொடுப்பாரு போல என்று இணையவாசிகள் கருத்துக்களை இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











