நெப்போலியன் வீட்டில் அடுத்த கொண்டாட்டம்.. தனுஷ் செய்ததை பாருங்க.. மகிழ்ச்சியில் மருமகள்!

சென்னை: நெப்போலியனின் மகன் தனுஷின் திருமணம் ஜப்பானில் பாரம்பரிய முறைப்படி நடைபெற்றது. இந்த திருமணத்தில் சரத்குமார், ராதிகா, சுஹாசினி, குஷ்பு, மீனா, கார்த்தி, கலா மாஸ்டர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள். திருமணம் முடிந்த கையோடு அனைவரும் கப்பலில் பயணம் செய்து தற்போது அமெரிக்கா வந்துள்ள நிலையில், அவர்கள் வீட்டில் தற்போது சிறிய கொண்டாட்டம் ஒன்று நடந்துள்ளது.

தமிழ் சினிமாவின் வில்லன் நடிகரான நெப்போலியன் தனது மகனுக்காக அமெரிக்காவில் செட்டில் ஆனார். மூத்த மகன் திருமண வயது அடைந்ததைத் தொடர்ந்து, தனுஷுக்கு ஜப்பானில் திருமணம் நடந்தது. தமிழ்நாட்டில் திருமணத்தை நடத்தினால் எப்படி நடக்குமோ அது போல, பந்தக்கால் நடுவது,ஹல்தி என அனைத்தும் தடபுடலாக திருமணம் நடந்தது. இந்த திருமணத்திற்காக பல நடிகர்கள் இரண்டு நாட்களுக்கு முன்பே ஜப்பான் சென்றுவிட்டனர். அவர்கள் அனைவருக்கும் ஸ்டார் ஓட்டலில் அறை எடுத்து தங்கவைத்து நன்றாக கவனித்துக்கொண்டார் நெப்போலியன்.

Napoleon Dhanush akshaya

பலவிதமான விமர்சனம்: திருமண வீடியோவில் தனுஷால் தாலிக்கூட கட்ட முடிவில்லை, அவரின் தாயார் தான் தாலியை எடுத்து போட்டார். இதைப்பார்த்த பார்த்த பலர், இப்படி ஒரு நிலைமையில் அவருக்கு திருமணம் தேவையா என கேட்டனர். மேலும், அவரால் இல்லற வாழ்க்கையில் ஈடுபட முடியாது, ஏழ்மையான பெண் என்பதால், நெப்போலியன் இப்படி ஒரு திருமணத்தை செய்துவிட்டார். அக்ஷயா, நெப்போலியனின் உறவுக்கார பெண்தான்,ஏழ்மையான குடும்பம் என்பதால் தான் இதுபோன்ற ஒரு தியாகத்தை அந்த பெண் செய்து இருக்கிறாள். திருமணத்தில் உறவினர்களால் ஏதாவது குழப்பம் வந்துவிடக்கூடாது என்பதற்காக பெண்ணின் சொந்தங்கள் யாரும் வரவில்லை. பெண்ணின் பெற்றோர் மட்டுமே வந்தனர் என பயில்வான் ரங்கநாதன் கூட ஒரு வீடியோவில் பேசி இருந்தார்.

குவியும் வாழ்த்து: இப்படி தனுஷ் அக்ஷயா திருமணம் குறித்து பலவிதமான விமர்சனங்கள் எழுந்தாலும், அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் இருவரும் மகிழ்ச்சியாகத்தான் வாழ்ந்து வருகின்றனர். அதற்கு சாட்சியாக காதலர் தினத்தை முன்னிட்டு, அக்ஷயா தனுஷூக்கு காதல் தின வாழ்த்து சொல்லி கேக் ஊட்டி விட்டுள்ளார். அவர் மட்டுமில்லாமல் நெப்போலியனுக்கும் அவரது மனைவி கேக் ஊட்டி காதலர் தின வாழ்த்தை தெரிவித்துள்ளார். காதலர் தினத்தை நெப்போலியன் தனது குடும்பத்தினருடன் எளிமையாக கொண்டாடி இருக்கிறார்கள். அந்த வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. அதைப்பார்த்த ரசிகர்கள் தனுஷ் மற்றும் அக்ஷயாவிற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X