அட விஜய்யோட தளபதி 69 படத்துல இவரும் இருக்காரா.. கூட்டணி பலமாயிட்டே இருக்கே!
சென்னை: நடிகர் விஜய்யின் தளபதி 69 படத்தின் அடுத்தடுத்த நடிகர், நடிகைகளை தயாரிப்பு தரப்பான கேவிஎன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் கடந்த இரு தினங்களாக அறிவித்து வருகிறது. தொடர்ந்து மூன்றாவது நாளாக இன்றும் நடிகர்கள், நடிகைகளை அறிவிக்கும் வேலை தொடர்ந்து வருகிறது.
தளபதி 69 படத்தை இயக்குநர் ஹெச் வினோத் இயக்கவுள்ள நிலையில், படத்திற்கு இசையமைப்பாளராக இணைந்துள்ளார் அனிருத். இவர்களின் கூட்டணியே மாஸாக உள்ள நிலையில், படத்தில் பாபி தியோல், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, கௌதம் மேனன், பிரியாமணி ஆகியோர் இணையவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் விஜய்: நடிகர் விஜய் அரசியலில் என்ட்ரியாகியுள்ள நிலையில் அவரது இறுதிப்படமாக உருவாகவுள்ளது தளபதி 69. இந்தப் படத்தில் நடித்து முடித்துவிட்டு படங்களில் நடிப்பதிலிருந்து விலகி தீவிர அரசியலில் ஈடுபட உள்ளதாக நடிகர் விஜய் முன்னதாக தன்னடைய அரசியல் கட்சி குறித்த அறிவிப்பின்போதே உறுதி செய்துவிட்டார். இதனிடையே கடந்த செப்டம்பர் 5ம் தேதி விஜய்யின் கோட் படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. படத்தில் பிரஷாந்த், பிரபுதேவா என முன்னணி நடிகர்கள் இணைந்திருந்தபோதிலும் படத்தின் திரைக்கதையில் படத்தின் இயக்குநர் வெங்கட் பிரபு கோட்டை விட்டுவிட்டதாக விமர்சனங்கள் எழுந்தன.
தளபதி 69 படம்: இதனிடையே கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக தளபதி 69 படத்தின் அறிவிப்பை தயாரிப்பு தரப்பான கேவிஎன் புரொடக்ஷன்ஸ் சமூக வலைதளங்களில் வெளியிட்டு பரபரப்பை கிளப்பியது. முன்னதாக தகவல்கள் வெளியானதை உறுதிப்படுத்தும்வகையில் இந்தப் படத்தை ஹெச் வினோத் இயக்கவுள்ளதாகவும் அனிருத் இசையமைக்கவுள்ளதாகவும் உறுதிப்படுததப்பட்டது. இந்நிலையில் கடந்த இரு தினங்களாக இந்தப் படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் குறித்த அடுத்தடுத்த அறிவிப்புகளை கேவிஎன் நிறுவனம் அடுத்தடுத்து வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தியது.
விஜய்யுடன் இணைந்த நடிகர் நரேன்: இதில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜு உள்ளிட்ட சிலர் தளபதி 69 படத்தில் இணையவுள்ளதாக முன்னதாகவே தகவல்கள் வெளியான நிலையில், படத்தில் கௌதம் மேனன், பாபி தியோல், பிரியாமணி உள்ளிட்டவர்கள் இணைந்துள்ளதாக படக்குழு சார்பில் கூறப்பட்டது. இந்நிலையில் தற்போது அடுத்த நடிகராக நரேன் தளபதி 69 படத்தில் இணைந்துள்ளதாக தற்போது கேவிஎன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. தன்னுடைய கதை தேர்வுகளில் மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருபவர் நடிகர் நரேன். அவர் நடிகர் விஜய்யுடன் இணையவுள்ளது படத்திற்கு மேலும் வலு சேர்க்கும் என்று எதிர்பார்க்கலாம்.

நடிகர்கள் அறிமுகம்: தளபதி 69 படத்தின் அடுத்தடுத்த கேரக்டர்களை தொடர்ந்து மூன்று நாட்கள் வெளிப்படுத்த உள்ளதாக முன்னதாக கேவிஎன் நிறுவனம் அறிவித்திருந்த நிலையில், மூன்றாவது நாளான இன்று அடுத்தடுத்து நரேன், கௌதம் மேனன், பிரியாமணி உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் இணையவுள்ளதாக தயாரிப்பு தரப்பு அறிவித்துள்ளது. படம் அரசியல் களத்தை மையமாக வைத்து உருவாகவுள்ளதாக கூறப்பட்டுள்ள நிலையில், இந்த நடிகர்கள், நடிகைகளின் கேரக்டர்கள் தளபதி 69 படத்திற்கு எப்படிப்பட்ட பலத்தை சேர்க்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது. மேலும் படத்தின் தலைப்பு குறித்தும் ரசிகர்கள் தொடர்ந்து ஆர்வம் காட்டி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











