ஒருத்தனுக்கு நிக்கவே முடியலையாம்.. ஒன்பது பொண்டாட்டி கேட்குதாம்..நரேஷை கலாய்க்கும் ஃபேன்ஸ்!
சென்னை: தெலுங்கு நடிகர் நரேஷ் பாபுவின் பிறந்தநாள் விழாவில் பேசிய அவரின் நான்காவது மனைவி அவருக்கு செம எனர்ஜி, அந்த எனர்ஜி எனக்கு இல்லை என்று பேசி இருந்தார். இந்த வீடியோ இணையத்தில் டிரெண்டாகி காட்டுத்தீ போல பரவியது. இதைப்பார்த்த இணையவாசிகள் நரேஷ் பாவுவையும் பவித்ராவையும் கண்டபடி ட்ரோல் செய்து வருகின்றனர்.
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான நரேஷ் பாபு, தெலுங்கு, தமிழ்,மலையாளம் என அடுத்தடுத்து திரைப்படத்தில் நடித்துள்ளார். தமிழில் இவர், பொருத்தம், நெஞ்சத்தை அள்ளித்தா ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். இவருக்கு ஏற்கனவே மூன்று முறை திருமணமாகி விவாகரத்து பெற்ற நிலையில், நடிகை பவித்ரா லோகேஷூடன் இணைந்து நடித்த போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்து, சில ஆண்டுகள் ரிலேஷன்ஷிப்பில் இருந்தனர். அப்போது நரேஷ் பாபுவின் மூன்றாவது மனைவி இவர் ஓட்டல் அறையில் இருந்த போது, மீடியாவை அழைத்து சென்று, அனைவர் முன்னிலையிலையிலும் இருவரையும் செருப்பால் அடித்தார். இந்த சம்பவத்திற்கு பிறகு, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

நரேஷ் பாபு, பவித்ரா லவ்: அது இணையத்தில் மிகப்பெரிய அளவில் பேசுபொருளானது, ஆனால், அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல், இருவரும் புதிதாக திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடியை போல பல இடங்களில் வலம் வந்தனர். அது மட்டுமல்லாமல் நரேஷ் பாபு, தன்னுடைய இயக்கத்தில் தனது வாழ்க்கை வரலாற்று திரைப்படமான மல்லி பெல்லு என்ற திரைப்படத்தை இயக்கி இருந்தார். அதில், தன் வாழ்க்கையில் நடந்த அனைத்து சம்பவங்களையும், நடிகை பவித்ராவுடன் ஏற்பட்ட காதல் அனுபவத்தையும் அழகாக சொல்லி இருந்தார்.இப்படத்தில் நடிகை வனிதா விஜயகுமாரும் நடித்திருந்தார். கடந்த மே மாதம் வெளியான இத்திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு போகவில்லை. அதுமட்டுமில்லாமல் நரேஷின் மூன்றாவது மனைவி இந்த படத்தில் பல காட்சிகள் தன்னை இழிவுப்படுத்தும் வகையில் இருப்பதாக கூறி இந்த திரைப்படத்தை ஓடிடியில் வெளியிடக்கூடாது என்று வழக்கு போட்டிருந்தார்.
பிறந்த நாள் விழாவில்: இந்நிலையில், நடிகர் நரேஷின் பிறந்த நாள் விழா, அண்மையில் கொண்டாடப்பட்டது. அதில் திரை உலகத்தை சேர்ந்த அனைவரும் கலந்து கொண்டனர். அப்போது பேசிய நடிகை பவித்ரா லோகேஷ், நரேஷ், இவ்வளவு பெரிய நடிகராக இருந்த போதும்,இப்போதும், குருவிற்கு மரியாதை கொடுக்கக்கூடியவராக இருக்கிறார். இந்த அளவுக்கு குரு மீது இவர் வைத்து இருக்கும் மரியாதையை பார்த்து நான் வியந்தேன் என்றார்.

10 பொண்டாட்டி கேக்குதா: நரேஷ், அனைத்து விஷயத்தையும் மெனக்கட்டு செய்யக்கூடியவர், அவர் ஒரு சாதாரண மனுஷனே இல்லை, அவருக்கு 10 ஆட்களின் எனர்ஜி இருக்கிறது. என்னால் அதை செய்ய முடியாதுப்பா. எந்த வேலை எடுத்தாலும் அதை சரியாக முடிக்க வேண்டும் என்கின்ற எண்ணம் இருக்கிறது. அதுதான் இவருடைய வெற்றிக்கு காரணம் என பவித்ரா லோகேஷ் பேசி இருந்தார். இந்த பேச்சு இணையத்தில் டிரெண்டான நிலையில், நெட்டிசன்கள் இவர்கள் இருவரின் போட்டோக்களை மீம்ஸ் போட்டு ட்ரோல் செய்து வருகின்றனர். இன்னும் சில இணையவாசிகள் ஒருத்தனுக்கு நிக்கவே முடியலையாம்.. ஒன்பது பொண்டாட்டி கேட்குதா என்று கிண்டலடித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











