twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சிறுநீரகப் பிரச்னை.. சிகிச்சை பெற்றுவந்த பிரபல நடிகர் திடீர் மரணம்.. திரையுலகம் அதிர்ச்சி!

    By
    |

    ஐதராபாத்: பிரபல வில்லன் நடிகர் உடல் நலக்குறைவு காரணமாக, உயிரிழந்திருப்பது சினிமா வட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    பிரபல தெலுங்கு நடிகர், நர்சிங் யாதவ். தமிழ், தெலுங்கு, இந்தி என சுமார் 300 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.

    காமெடி வில்லன் வேடங்களில் அதிகமாக நடித்துள்ள இவரை, ராம்கோபால் வர்மாவின் அனைத்து படங்களிலும் பார்க்கலாம்.

    ஆடையேதும் அணியாமல்.. 2020க்கு பிரபல நடிகை எப்படி குட்பை சொல்றாங்க பாருங்க.. தீயாய் பரவும் போட்டோ!ஆடையேதும் அணியாமல்.. 2020க்கு பிரபல நடிகை எப்படி குட்பை சொல்றாங்க பாருங்க.. தீயாய் பரவும் போட்டோ!

     ரஜினியின் பாட்ஷா

    ரஜினியின் பாட்ஷா

    தமிழில், ரஜினியின் சூப்பர் ஹிட் படமான பாட்ஷா, ஹரி இயக்கத்தில் விஷால், ஸ்ருதிஹாசன் நடித்த பூஜை, சுசீந்திரன் இயக்கத்தில் விக்ரம் நடித்த ராஜபாட்டை, சக்தி, ரம்யா நம்பீசன் நடித்த ஆட்டநாயகன், பிரபு சாலமன் இயக்கத்தில் சார்மி நடித்த லாடம், விஜய், த்ரிஷா நடித்த குருவி உட்பட பல படங்களில் நடித்திருக்கிறார்.

     கைதி நம்பர் 150

    கைதி நம்பர் 150

    இந்தியிலும் சில படங்களில் நடித்துள்ளார். தெலுங்கில், கைதி நம்பர் 150, அட்டாக், ரேஸ் குர்ரம், சங்கர் தாதா எம்.பி.பி.எஸ், போக்கிரி, நுவ்வொஸ்தானன்டே நேனொத்தன்டனா உட்பட பல படங்களில் நடித்துள்ள இவர், கடந்த சில மாதங்களாக, உடல்நிலை சரியில்லாமல் இருந்தார்.

     சுயநினைவை இழந்தார்

    சுயநினைவை இழந்தார்

    சிறுநீரகப் பிரச்னையும் அவருக்கு இருந்தது. இதன் காரணமாக, சிகிச்சை பெற்றுவந்த அவர், கடந்த ஏப்ரல் மாதம் வீட்டில் இருக்கும்போது திடீரென சுயநினைவை இழந்தார். இதையடுத்து சோமாஜிகுடா பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சேர்த்தனர். அங்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

     மோசமானது

    மோசமானது

    செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்டு அவர் மருத்துவக் கண்காணிப்பில் இருப்பதாக அவர் மனைவி சித்ரா அப்போது தெரிவித்திருந்தார். பின்னர் அவர் வீடு திரும்பினார். இந்நிலையில், இரண்டு நாட்களுக்கு முன் டயாலிசிஸ் செய்வதற்காக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

     ஹேமா ஹீமீலு

    ஹேமா ஹீமீலு

    அங்கு அவர் உடல்நிலை திடீரென மோசமானது. தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் நேற்றிரவு அவர் உயிரிழந்தார். மறைந்த அவருக்கு வயது 57. இதையடுத்து திரையுலகினர் அவருக்கு சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். நடிகை விஜய நிர்மலா இயக்கிய ஹேமா ஹீமீலு என்ற தெலுங்கு படம் மூலம் நடிகராக அறிமுகமானவர், நர்சிங் யாதவ்.

     திறமையான கலைஞர்கள்

    திறமையான கலைஞர்கள்

    மறைந்த இவருக்கு சித்ரா என்ற மனைவியும் ருத்விக் என்ற மகனும் உள்ளனர். 2020 ஆம் ஆண்டில் பல திறமையான சினிமா கலைஞர்கள் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், கடந்த வருடத்தின் கடைசி நாளான நேற்று நர்சிங் யாதவ் மறைந்திருப்பது, தெலுங்கு சினிமா வட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    Read more about: actor நடிகர்
    English summary
    Actor Narsing Yadav, with over 300 movies to his credit, passed away on Friday in Hyderabad. He was 52.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X