திமுக தலைவர் ஸ்டாலினை நேரில் சந்தித்து… நாசர் அவரது மனைவி கமீலா வாழ்த்து!

சென்னை : முதல்வராக பதவியேற்க உள்ள மு.க.ஸ்டாலினை நடிகர் நாசர் அவரது மனைவி கமீலா நாசர் ஆகியோர் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

திராவிட முன்னேற்றக்கழம் அமோக வெற்றிப் பெற்று, 159 தொகுதிகளை வென்றுள்ளது.

முதன்மையாக ஆட்சி பொறுப்பேற்க உள்ள முக ஸ்டாலினை, அண்ணா அறிவாலயத்தில் அவரது கூட்டணிக்கட்சித் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

159 இடங்களில் வெற்றி

159 இடங்களில் வெற்றி

ஏப்ரல் 6ந் தேதி நடந்த சட்டமன்றத்திற்கு தேர்தல் நடைபெற்றன. இதில் பதிவான வாக்குகள் மே 2ந் தேதி எண்ணப்பட்டன. இதில் திமுக கூட்டணி 159 இடங்களை கைப்பற்றி, தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க உள்ளது.

திமுக ஆட்சி

திமுக ஆட்சி

அதிமுக 66 இடங்களையும் அதிமுக கூட்டணியில் இடம் பெற்ற பா.ம.க 5 இடங்களிலும், பாஜக 4 இடங்களையும் வென்றுள்ளன. தமிழ்நாட்டில் மொத்தம் பதிவான வாக்குகளில் திமுக 37.7 சதவீதம் வாக்குகளைப் பெற்றுள்ளது. தற்போது 10 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் திமுக ஆட்சி அமைக்கிறது.

நேரில்வாழ்த்து

நேரில்வாழ்த்து

தமிழக முதல்வராக முகஸ்டாலின் பதவியேற்க உள்ளதை முன்னிட்டு, அண்ணா அறிவாலயத்தில் கூட்டணிக் கட்சித் தலைவர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், வியாபார நிபுணர்கள், திரையுலக பிரபலங்கள் என பலரும் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

நேரில் வாழ்த்து

நேரில் வாழ்த்து

அதேபோல நடிகர் நாசர் மற்றும் அவரது மனைவி கமீலா நாசர் முக ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். கமலஹாசனின் மக்கள் நீதி மய்யத்தில் மாநிலச் செயலாளராக இருந்த கமீலா தேர்தலுக்கு முன்பு அந்த பதவியை ராஜினாமா செய்தார். முக ஸ்டாலினுக்கு வாழ்த்துச் சொல்ல தாம் நேரில் சந்தித்ததாகவும் இது மரியாதை நிமித்தமான சந்திப்பு எனவும் கமீலா கூறியுள்ளார்.

More from Filmibeat

Read more about: nasar நாசர்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X