விழாவுக்கு அழைத்த ராதாரவி... ஆப்சென்டான நாசர்... அப்ப பிரச்சினை இன்னும் தீரலையா!

தன்னுடைய அழைப்பை ஏற்க நடிகர் நாசர் மறுத்துவிட்டதாக நடிகர் ராதாரவி தெரிவித்துள்ளார்.

Recommended Video

விழாவுக்கு அழைத்த ராதாரவி...அப்சென்டான நாசர்!- வீடியோ

சென்னை: பொறுக்கீஸ் அல்ல நாங்க திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு வரும்படி தான் விடுத்த அழைப்பை ஏற்க நடிகர் நாசர் மறுத்துவிட்டதாக நடிகர் ராதாரவி தெரிவித்துள்ளார்.

கே.என்.ஆர். மூவிஸ் சார்பில் ராஜா தயாரித்துள்ள படம் 'பொறுக்கிஸ் அல்ல நாங்கள்'. பிசாசு, சவரக்கத்தி படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய மஞ்சுநாத். இந்த படத்தை இயக்கியுள்ளார்.

படத்தின் தயாரிப்பாளர் ராஜாவே கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக லவனிகா நடித்துள்ளார். இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிகர் ராதாரவி நடித்துள்ளார். ரவிவர்மா இசையமைத்துள்ளார். ஆலயமணி நான்கு பாடல்களை எழுதிப் பாடியுள்ளார். ஜூலியன் எடிட்டிங்கை கையாண்டுள்ளார்.

இசை வெளியீடு

இசை வெளியீடு

இப்படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னையில் சமீபத்தில் நடைபெற்றது. இதில், நடிகர் ஜே.கே.ரித்தீஷ், இயக்குநர் கரு.பழனியப்பன், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, சமூக ஆர்வலர் பியூஸ் மனுஷ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

ராதாரவி பாராட்டு

ராதாரவி பாராட்டு

விழாவல் பேசிய நடிகர் ராதாரவி, படக்குழுவை வெகுவாக பாராட்டினார். தான் அழைப்புவிடுத்தும் நடிகர் சங்கத் தலைவர் நாசர் விழாவில் பங்கேற்கவில்லை என்றார்.

மஞ்சுநாத்தின் சுய உழைப்பு

மஞ்சுநாத்தின் சுய உழைப்பு

விழாவில் அவர் பேசியதாவது, "இந்தக் குடும்பத்தில் நானும் ஒருவன்.. மலேசியாவில் எனது நண்பர் ஒருவர் சொந்தப் படம் எடுக்கிறேன் எனக் கூறியபோது மஞ்சுநாத்தை அழைத்துச் சென்று கேமராமேனாக அறிமுகம் செய்துவைத்தேன்.. மற்றபடி இப்போதுவரை அவரது சுய உழைப்பு தான்.. மஞ்சுநாத் பார்ப்பதற்கு அமைதியாக இருந்தாலும் புரட்சிகரமான கருத்துக்களை கொண்டவர்.

பாடகர் ஆலயமணி

பாடகர் ஆலயமணி

இந்தப்படத்தில் பாடியுள்ள பாடகர் ஆலயமணியை எனக்கு பிடிக்கும். இன்றைக்கு யார் யாரோ பாடும்போது, முன்னணி நடிகர்கள் எல்லாம் பாடும்போது, அவர்களைவிட, ஆலயமணி நன்றாக பாடக்கூடியவர். எனக்கு பாட வராது. அதனாலேயே அவரைப் பிடிக்கும்..

பியூஸ் மனுஷால் பயம்

பியூஸ் மனுஷால் பயம்

பியூஸ் மனுஷ் இந்த விழாவில் கலந்துகொள்கிறார் என்றதுமே பயந்தேன். காரணம் அவர் எப்போதும் வாரண்ட்டோடு சுற்றுபவர். அவருக்கும் எப்போதுமே பொதுவுடமை எண்ணம். அதனால் நம்மையும் வாரண்ட்டோடு சுற்ற வைத்து விடுவாரோ என்று பயந்தேன். இது அரசாங்கத்தை அட்டாக் பண்ணுகிற படமே அல்ல.. அரசாங்கத்தில் உள்ள குறைகளைப் பற்றி சொல்லும் படம்

நாசர் ஏன் வரவில்லை

நாசர் ஏன் வரவில்லை

இந்த விழாவிற்கு தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் நாசரை அழைத்திருந்தேன். முதலில் வருகிறேன் எனச் சொன்னவர், பின் எதனாலோ வராமல் பின்வாங்கிவிட்டார். ஒருவேளை இங்கு வருபவர்களின் பட்டியலைப் பார்த்திருப்பாரோ என்னவோ..?" என நகைச்சுவையாக தெரிவித்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X