ஹாலிவுட் கெட்டப்பில் அசத்தும் நாசர்.. வியப்பில் ரசிகர்கள்!

சென்னை : தமிழ் சினிமாவின் தன்னிகரற்ற நடிகர்களில் மிக முக்கியமானவராக விளங்கி வருபவர் நடிகர் நாசர்.

எந்த ஒரு கதாபாத்திரமாக இருந்தாலும் அதில் தனது மிரட்டும் நடிப்பின் மூலம் அந்த கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுக்கும் தன்மை கொண்ட நாசர் தமிழ் சினிமாவின் மாபெரும் பொக்கிஷம் ஆவார்.

கிட்டத்தட்ட 8-க்கும் மேற்பட்ட மொழிகளில் சரளமாக பேசக்கூடிய திறமை வாய்ந்த நடிகரான நாசர் இந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர் ஆவார். இந்நிலையில் சமீபத்தில் இவர் வெளியிட்டு இருந்த போட்டோஷூட் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருவதை அடுத்து பலரும் வியப்பில் ஆழ்ந்து போய் உள்ளனர்.

ஈடு இணையற்ற நடிகர்

ஈடு இணையற்ற நடிகர்

இயக்குனர் கே.பாலச்சந்தர் இயக்கிய "கல்யாண அகதிகள்" என்ற திரைப்படத்தின் மூலம் முதன்முறையாக திரைத்துறைக்கு அறிமுகப்படுத்தப்பட்ட நாசர் பின் தமிழ் சினிமாவின் ஈடு இணையற்ற நடிகராக வலம்வந்தார்.

திருப்புமுனையாக அமைந்தது

திருப்புமுனையாக அமைந்தது

1985 வெளியான "கல்யாண அகதிகள்" திரைப்படத்தில் இவர் துணை கதாபாத்திரத்தில் நடித்து இருக்க, மணிரத்னம் இயக்கிய "நாயகன்" திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

இன்று வரை பயணித்து

இன்று வரை பயணித்து

இயக்குனர் மணிரத்னம் இயக்கும் பல படங்களில் தொடர்ந்து நடித்து வந்த இவர் கமல்ஹாசன் நடிக்கும் பெரும்பாலான படங்களிலும் இவர் கட்டாயமாக இருப்பார் என்ற அளவிற்கு அவர்கள் இருவருடனும் சேர்ந்து இன்று வரை பயணித்துக் கொண்டிருக்கிறார்.

சிறந்த நடிகராக

சிறந்த நடிகராக

தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என இந்திய மொழிகளில் மொத்தம் எட்டு மொழிகளை சரளமாக பேசக்கூடிய திறமை வாய்ந்த நடிகரான நாசர் இந்தியாவில் பல மொழிகளில் நடித்து இன்றுவரை தனித்துவமான சிறந்த நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

மிகப் பெரிய பக்கபலமாக

மிகப் பெரிய பக்கபலமாக

பெரும்பாலான வில்லன் கதாபாத்திரங்களில் நடித்துவரும் நாசர் "தேவர் மகன்" உள்ளிட்ட திரைப்படங்களில் தனது மிரட்டல் நடிப்பின் மூலம் அந்த திரைப்படங்களுக்கு மிகப் பெரிய பக்கபலமாக இருந்துள்ளார்.

போட்டோ ஷூட்

போட்டோ ஷூட்

இந்நிலையில் சமீபத்தில் நடிகர்கள் பலரும் தங்களை வேறுவிதமாக பிரதிபலிக்கும் பல்வேறு போட்டோ ஷூட் புகைப்படங்களை எடுத்து அதை சமூக வலைதளங்களில் பரவ விட்டு வரும் நிலையில் நடிகர் நாசரின் சமீபத்திய போட்டோ ஷூட் புகைப்படங்கள் இணையத்தில் ட்ரெண்டாகி வருகின்றன.

Recommended Video

இப்போல்லாம் சினிமாவா எடுக்குறாங்க | ACTOR NASSAR EMOTIONAL SPEECH | FILMIBEAT TAMIL
ஹாலிவுட் நடிகரை போல

ஹாலிவுட் நடிகரை போல

வித்தியாசமான கோட்டு சூட்டில் வெள்ளை தாடியுடன், பல்வேறு முக பாவனைகளில் பார்க்க ஹாலிவுட் நடிகரை போலவே காட்சியளிக்கும் நாசரின் இந்த வித்தியாசமான போட்டோ ஷூட் புகைப்படங்கள் இப்போது இணையத்தில் மிக வேகமாக பகிரப்பட்டு ரசிகர்களின் அன்பையும் லைக்குகளையும் பெற்று வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X