சினிமா மன அழுத்தத்தை கொடுக்குது .. பிடிக்கலன்னாலும் பெஸ்ட்டாதான் கொடுப்பேன்.. நடிகர் நாசர் பிலாசபி!

சென்னை: நடிகர் நாசர் நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர் மற்றும் பின்னணி குரல் கொடுப்பவர் என பல தளங்களில் தன்னை சிறப்பாக வெளிப்படுத்தி வருபவர். நடிப்பில் கமல்ஹாசனுக்கு அடுத்தப்படியாக மிகச்சிறப்பான ஆளுமையை தமிழ் சினிமாவில் இவர் வெளிப்படுத்தி வருவதாக தொடர்ந்து பாராட்டுக்களை பெற்று வருகிறார் நாசர்.

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவராகவும் சிறப்பான செயல்பாட்டை கொடுத்து வரும் நாசர், அடுத்ததாக மணிரத்னம் -கமல்ஹாசன் காம்பினேஷனில் உருவாகி வரும் தக் லைஃப் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். தொடர்ந்து தன்னை பிசியாக வைத்து வருகிறார். சமீபத்தில் தன்னுடைய மகன் குறித்து நாசர் பகிர்ந்த சம்பவங்கள் அனைத்து தரப்பினரையும் நெகிழ்ச்சிக்குள்ளாக்கியது.

nassar thug life movie retro

நடிகர் நாசர்: நடிகர் நாசர் வில்லனாக, ஹீரோவாக, கேரக்டர் ஆர்ட்டிஸ்டாக பல அவதாரங்களை கொடுத்தவர். இவை அனைத்திலும் தன்னை மிகச்சிறப்பாக வெளிப்படுத்தியவர். கமல்ஹாசனுக்கு அடுத்தபடியாக நாசரின் நடிப்பும் தொடர்ந்து பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகின்றன. நடிகராக மட்டுமில்லாமல் இயக்குநர், தயாரிப்பாளர், பின்னணி குரல் கொடுப்பவர் என்று அடுத்தடுத்த தளங்களில் தன்னை சிறப்பாக வெளிப்படுத்திவரும் நாசர், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவராகவும் செயல்பட்டு வருகிறார். அடுத்தடுத்து நடிகர் கமல்ஹாசனுடன் இணைந்து தக் லைஃப் படத்திலும் சூர்யாவின் ரெட்ரோ படத்திலும் நாசர் நடித்துள்ளார்.

மகன் குறித்து நாசர் நெகிழ்ச்சி: தொடர்ந்து பிசியாக செயல்பட்டுவரும் நாசர், சமீபத்தில் தன்னுடைய மகன் ஃபைசல் குறித்து வெளிப்படுத்திய விஷயம் மிகப்பெரிய அளவில் அனைத்து தரப்பினரையும் நெகிழ்ச்சிக்குள்ளாக்கியது. தன்னுடைய மகன் விபத்து காரணமாக கோமாவில் 14 நாட்கள் இருந்த நிலையிலும் அவருக்கு நடிகர் விஜய் மட்டுமே நியாபகத்தில் இருந்தார் என்று நாசர் தெரிவித்திருந்தார். இதையடுத்து அவரை குணப்படுத்த விஜய்யின் புகைப்படங்கள், வீடியோக்களை அதிகமாக போட்டு காட்டியதாகவும் கூறியிருந்தார். இந்த விஷயத்தை கேள்விப்பட்டு நடிகர் விஜய் தன்னுடைய மகனை அடிக்கடி பார்க்க வந்ததாகவும் தன்னுடைய நெகிழ்ச்சியை நாசர் வெளிப்படுத்தியிருந்தார்.

சினிமாவால் மன அழுத்தம்: இந்நிலையில் தன்னுடைய கேரியர் குறித்து நாசர் கொடுத்துள்ள சமீபத்திய பேட்டியும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. குணச்சித்திர நடிகராக தன்னுடைய கேரகடர்களை பெஸ்ட்டாக கொடுத்து வருகிறார் நாசர். தான் சினிமாவில் நடிப்பது சில நேரங்களில் முரண்பாடாக இருப்பதாக தெவித்துள்ளா நாசர். சில நேரங்களில் சுகமாகவும் சில நேரங்களில் மன அழுத்தத்தையும் சினிமா கொடுப்பதாக கூறியுள்ளார். ஆனாலும் அதை நேசித்து தன்னுடைய கேரக்டர்களை எப்படி பெஸ்ட்டாக கொடுப்பது என்பதை மட்டுமே யோசிப்பதாகவும் நாசர் மேலும் தெரிவித்துள்ளார்.

இஸ்ரோ விஞ்ஞானியை காட்டிலும் அதிக சம்பளம்: சினிமா தனக்கு அதிகமாக கொடுத்துள்ளதாகவும் இஸ்ரோ விஞ்ஞானியை காட்டிலும் தான் அதிகமாக சம்பாதிப்பதாகவும் தெரிவித்துள்ள நாசர், அதனால் சினிமாவில் தான் எடுத்துக் கொள்ளும் கேரக்டர்களை பெஸ்ட்டாக கொடுக்கவே தான் விரும்புவதாகவும் இதுவே தனக்கு மிகப்பெரிய நிம்மதியை கொடுப்பதாகவும் கூறியுள்ளார். சினிமாவை நேசிப்பதை காட்டிலும் அதை சிறப்பாக செய்வதையே தான் விரும்புவதாகவும் நாசர் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X