தயாரிப்பாளர் மகன் என்றால் நடிக்க வந்து விடுவாயா?... பிரபல நடிகரிடம் நாசர் கேட்ட கேள்வி !

சென்னை : லயோலா கல்லூரியில் நடந்த கலை விழாவில் சிறப்பு விருந்தினராக நடிகர் ஜீவா கலந்து கொண்டு பேசினார்.

லயோலா கல்லூரியில் இருப்பது எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கு, விஜய், சூர்யா போன்றவர்களை இந்த கல்லூரி வளர்த்துள்ளது என்றார்.

இந்த விழாவில் நடிகர் சங்கத் தலைவர் நாசர் கலந்து கொண்டு மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

நடிகர் ஜீவா

நடிகர் ஜீவா

கலைவிழாவில் பேசிய நடிகர் ஜீவா, நீண்ட நாட்களுக்குப் பிறகு இவ்வளவு கூட்டத்தை பார்த்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். கடந்த சில வருடங்களாக திரையரங்குகளில் கூட இவ்வளவு கூட்டத்தை பார்க்க முடியவில்லை. மேடையில் இருந்த அனைத்து பிரமுகர்களுக்கும் நன்றி. லயோலா கல்லூரியில் இருப்பது எப்போதுமே ஒரு மகிழ்ச்சியான தருணமே.

ஜாம்பவான்களை உருவாக்கிய கல்லூரி

ஜாம்பவான்களை உருவாக்கிய கல்லூரி

பல ஆண்டுகளுக்கு முன் நான் இங்கு வந்து இருக்கிறேன். நான் இங்கு உள்ள கிரவுண்டில் கிரிக்கெட் விளையாடி உள்ளேன். இந்த இடத்திற்கு வந்ததும் அது பசுமையான நினைவாக வந்து செல்கிறது.. சூர்யா, விஜய், விஷால், உதயநிதி போன்ற பல ஜாம்பவான்களையும் சாதனையாளர்களையும் உருவாக்கிய கல்லூரி இது. இந்த கல்லூரியில் என்னை ஒரு விருந்தினராக அழைத்ததற்கு நான் மிகவும் பெருமைப்படுகிறேன்.

ஏன் நடிக்க வந்த ?

ஏன் நடிக்க வந்த ?

நாசர் சாரை பார்த்தவுடன் நான் பேச வந்ததை மறந்துவிட்டேன். அவருடன் இணைந்து பணியாற்றியதற்கு பெருமைப் படுகிறேன். அவர் தான் எனக்கு வழிகாட்டி. என்னுடைய முதல் படத்திலேயே எனக்கு மாமனாராக அவர் நடித்திருந்தார். அப்போது நான் ஒரு தயாரிப்பாளரின் மகனாக தான் அறிமுகமானேன். அவர் என்னைப் பார்த்து "தயாரிப்பாளர் மகன் என்றால் நடிக்க வந்து விடுவியா? என்றும், ஏன் நடிக்க வந்த ? என்றும் கேட்டார். அந்த எளிமையான கேள்விக்கு இதுநாள் வரை என்னிடம் பதில் இல்லை.

என் முதல் குரு

என் முதல் குரு

நீங்கள் எந்தத் துறைக்குச் சென்றாலும் அனைவருக்கும் ஒரு வழிகாட்டி மற்றும் ஒரு குரு தேவை. அந்த வகையில் எனக்கு நிறைய குரு கிடைத்தார்கள். அந்த வகையில் என் முதல் குரு என்று சொன்னால் அது நாசர் சார் தான். இன்று இந்த மேடையை அவருடனும் பகிர்ந்து கொண்டிருப்பதற்கு நான் பெருமைப்படுகிறேன் என்றார்.

உத்வேகம் தேவை

உத்வேகம் தேவை

உத்வேகத்துடன் இருங்கள். பலரை ஊக்குவியுங்கள், நன்றாக இருங்கள், என்னுடைய சிறந்த படங்கள் இன்னும் வரவிருக்கிறது. முந்தைய படங்களை விட வரவிருக்கும் படங்களில் உங்களை மேலும் மகிழ்விக்கவுள்ளேன். அதற்கும் உங்களின் ஆதரவு தேவை என்று நடிகர் ஜீவா தனது பேச்சை முடித்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X