Nasser Father Death: சோகம்.. நடிகர் நாசரின் தந்தை காலமானார்.. கண்ணீரில் மூழ்கிய குடும்பம்!
சென்னை: பிரபல நடிகரும் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவருமான நாசர் தனது தந்தையை இழந்து வாடி வருகிறார். நடிகர் நாசரின் தந்தை மெஹபூப் பாட்ஷா வயது மூப்புக் காரணமாக செவ்வாய்க்கிழமை காலமானார். அவருக்கு வயது 95.
இந்திய சினிமாவிலேயே இப்படியொரு நடிகர் இருப்பாரா என மக்கள் மட்டுமின்றி திரையுலக பிரபலங்களே வியந்து பார்க்கும் அசாத்திய அவதார புருஷன் நாசரை நடிகனாக்கி அழகு பார்த்த அவரது தந்தை மெஹபூபா இயற்கை எய்தினார்.

அவரது மறைவால் ஒட்டுமொத்த திரையுலகமும் நடிகர் நாசரின் குடும்பமும் கண்ணீர் கடலில் ஆழ்ந்துள்ளது.
இந்த ஆண்டு நடிகர் அஜித் தனது தந்தையை இழந்திருந்தார். இந்நிலையில், அடுத்ததாக நாசர் தனது தந்தையை இழந்துள்ளது பலரையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
நகை பாலிஷ் செய்யும் சாதாரண தொழிலாளியாக வேலை பார்த்து வந்த மெஹபூபா பாட்ஷா தனது மகன் நாசரின் விருப்பத்திற்கு ஏற்ப அவரை நடிப்புக் கல்லூரியில் படிக்க வைத்து நடிகராக பார்க்க விரும்பினார்.
ஆனால், சினிமாவில் சாமானியர்கள் சாதிக்க முடியாத நிலை, அப்போதும் நாசரை துரத்தியது. படித்து விட்டு வேலை கிடைக்கவில்லை என சென்னையில் ஒரு பிரபல ஹோட்டலில் சர்வராக நாசர் வேலை பார்க்க, இதுக்கா சினிமாவுக்கு படிச்ச, போய் சினிமாவில் சாதிக்கிற வழியை பாரு என ஊக்கப்படுத்தி அனுப்பியவர் தான் நாசரின் தந்தை.
95 வயதான நாசரின் தந்தை வயது மூப்புக் காரணமாக இன்று இயற்கை எய்தியுள்ளார். செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள தட்டான்மலையில் உள்ள சொந்த வீட்டில் அவரது உடல் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. நடிகர் நாசரின் நெருங்கிய சினிமா நண்பர்கள் மற்றும் உறவினர்கள் இறுதி அஞ்சலியில் பங்கேற்று நாசருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











