அவர் எதிர்பார்த்த வெற்றி கிடைத்துவிட்டது.. ரொம்ப நன்றி சிவா.. சந்தோஷத்தில் குதித்த நட்டி!

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த நம்ம வீட்டு பிள்ளை படத்தின் வெற்றியை தொடர்ந்து அந்த படத்தில் நடித்துள்ள சில நடிகர்கள் பெரும் மகிழ்ச்சிக்கு உள்ளாகி இருக்கின்றனர்.

Recommended Video

NAMMA VEETU PILLAI FDFS PUBLIC REVIEW | SIVAKARTHIKEYAN | PANDIRAJ | AISHWARYA | FILMIBEAT TAMIL

சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த நம்ம வீட்டு பிள்ளை படத்தின் வெற்றியை தொடர்ந்து அந்த படத்தில் நடித்துள்ள சில நடிகர்கள் பெரும் மகிழ்ச்சிக்கு உள்ளாகி இருக்கின்றனர்.

சிவகார்த்திகேயன் நடித்துள்ள நம்ம வீட்டு பிள்ளை படம் வெளியாகி உள்ளது. இந்த படத்தை இயக்குனர் பாண்டியராஜ் இயக்கி உள்ளார். அதேபோல் படத்தில் அனு இம்மானுவேல், ஐஸ்வர்யா ராஜேஷ், சமுத்திரகனி, யோகி பாபு, சூரி ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்த படம் நேற்றில் இருந்து நல்ல ரிவ்யூக்களை பெற்று வருகிறது. அதேபோல் சிவகார்த்திகேயனுக்கு படம் இன்னொரு பெரிய ஹிட் படமாக மாறும் என்றும் கூறுகிறார்கள்.

என்ன சொன்னார்

என்ன சொன்னார்

இந்த நிலையில் இந்த படத்தில் நடித்துள்ள சினிமோட்டோகிராபர் மற்றும் நடிகர் நடராஜ் இதுகுறித்து டிவிட் செய்துள்ளார். அதில், சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு நன்றி.. அதேபோல் இயக்குனர் பாண்டியராஜ் சாருக்கும் நன்றி.. சிவகார்த்திகேயன் சாருக்கு மிக்க நன்றி.. லவ் யூ ஆல்.. என்று உருக்கமாக டிவிட் செய்துள்ளார்.

நடராஜ் டிவிட்

நடிகர் நடராஜ் சதுரங்க வேட்டை படத்திற்கு பின் பெரிய ஹிட் எதுவும் கொடுக்கவில்லை. இவர் நிறைய படங்களில் வரிசையாக நடித்தார். அதில் சில படங்கள் பெரியதாக வரவேற்பை பெறவில்லை. இதனால் அவர் கடும் மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.

எப்படி இருந்தார்

எப்படி இருந்தார்

நடிகர் ஷாருக்கான், தீபிகா படுகோன் தொடங்கி தோனி வரை பலருக்கும் நட்டிதான் விருப்பமான கேமராமேன். ஆனால் நடிப்பில் அவர் இரண்டு படங்களை தவிர வேறு எந்த படத்தில் பெரிதாக ஹிட் கொடுக்கவில்லை. அவர் மிகப்பெரிய பிரேக் ஒன்றிற்காக காத்துக் கொண்டு இருக்கிறார்.

சந்தோசம்

சந்தோசம்

இந்த நிலையில்தான் நம்ம வீட்டு பிள்ளை படம் அவருக்கு பெரிய ஹிட் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தின் பாசிட்டிவ் ரிவ்யூக்கள் அவரை பெரிய அளவில் மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறதாம். இதனால் அவர் சந்தோசத்தில் இருக்கிறார் என்கிறார்கள்.

ரோல் இல்லை

ரோல் இல்லை

இந்த படத்தில் அவருக்கு பெரிய ரோல் எதுவும் கிடையாது. ஆனாலும் இதன் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் அவர் தனக்கு தொடர்ச்சியாக வாய்ப்பு கிடைக்கும் என்று நினைக்கிறார். இதனால் அவர் சிவகார்த்திகேயனுக்கு போன் செய்து தனது நன்றியை தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X