ட்விட்டரில் நட்டி சொன்ன கருத்து.. நாட்டுக்கு ரொம்ப முக்கியமானது தான்!
சென்னை : நடிகர் நட்ராஜ் ஒளிப்பதிவாளராகவே சினிமாவில் தன்னுடைய பயணத்தை துவங்கி நல்ல பெயரை பெற்றார்.
தொடர்ந்து ஒரு சில படங்களில் நடிக்கத் துவங்கியவர் தற்போது முழுநேர நடிகராக மாறியுள்ளார்.
தற்போது இயக்குநர் செல்வராகவனுடன் இணைந்து பகாசூரன் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். விரைவில் இந்தப் படம் ரிலீசாக உள்ளது.

நடிகர் நட்ராஜ்
நடிகர் நட்டி நட்ராஜ் சிறந்த ஒளிப்பதிவாளராக பல திரைப்படங்களில் பணிபுரிந்தவர். துப்பாக்கி, ராஞ்சனா, புலி போன்ற படங்களில் இவரது சிறப்பான ஒளிப்பதிவு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. தொடர்ந்து அதிகமான இந்திப் படங்களுக்கு இவர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

ஒளிப்பதிவு + நடிப்பு
இந்நிலையில் தன்னுடைய நடிப்பு பயணத்தையும் ஒளிப்பதிவுடன் சேர்த்தே செய்து வருகிறார். கடந்த 2002ல் இவரது திரைப்பயணம் துவங்கியது. தான் ஒளிப்பதிவாளராக அறிமுகமான விஜய்யின் யூத் படத்திலேயே சிறிய கேரக்டரில் இவர் நடித்துள்ளார். தொடர்ந்து மிளகா, முத்துக்கு முத்தாக, சதுரங்க வேட்டை என இவரது நடிப்பு தொடர்ந்தது.

சதுரங்க வேட்டை படம்
குறிப்பாக சதுரங்க வேட்டை படத்தில் காந்தி பாபு என்ற கேரக்டரில் கலக்கினார். இந்தப் படத்தின் இரண்டாவது பாகம் அரவிந்த் சாமி நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ளது. நம்ம வீட்டுப் பிள்ளை, கர்ணன் என இவரது நடிப்பு தொடர்ந்து வருகிறது. இதில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடித்திருந்த நம்ம வீட்டுப் பிள்ளை படத்தில் நெகட்டிவ் ஷேடில் நடித்திருந்த கேரக்டர் இவருக்கு சிறப்பாக கைக்கொடுத்தது.

பகாசூரன் படம்
தொடர்ந்து தற்போது சில படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். தற்போது இயக்குநர் செல்வராகவனுடன் இணைந்து பகாசூரன் என்ற படத்தில் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார். விரைவில் இந்தப் படம் ரிலீசாக உள்ள நிலையில், சமீபத்தில் வெளியான போஸ்டர் சிறப்பான கவனத்தை பெற்றுள்ளது.

சமூக வலைதளங்களில் ஆக்டிவ்
சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக காணப்படுகிறார் நட்ராஜ். அவ்வப்போது பல அப்டேட்களை கூறி வருகிறார். சமூகத்திற்கு தேவையான கருத்துக்களையும் வெளிப்படுத்தி வருகிறார். இந்நிலையில் தற்போது டைல்ஸ் குறித்த கருத்தை இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். டைல்ஸ் முதியோர்களின் எதிரி என்று குறிப்பிட்டுள்ள நட்டி, சமீபத்தில் இதனால தன்னுடைய தாய் மாமனை இழந்து விட்டதாக கூறியுள்ளார்.

டைல்ஸ் குறித்து நட்ராஜ்
குளித்துவிட்டு வந்த அவரது தாய் மாமன், கால் வழுக்கி கீழே விழுந்து தலையில் அடிபட்டு உயிரிழந்து விட்டதாகவும் தெரிவித்துள்ள அவர், நம்முடைய கௌரவம் டைல்சில் இல்லை என்றும் நம்முடைய முதியோர்களை காப்பதில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இவரது இந்தப் பதிவு கவனிக்கத்தக்கது தான் என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











