Kanguva: சூர்யாவிற்கு வில்லனாகும் நட்டி நட்ராஜ்.. கங்குவா படத்தில் பெரிய ஃபைட் இருக்காமே!

சென்னை: நடிகர் சூர்யா, திஷா பட்டானி உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துவரும் படம் கங்குவா. சிவா இயக்கத்தில் இந்தப் படத்தின் சூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

கோவா, சென்னை, கொடைக்கானலின் அடர்ந்தக் காட்டுப்பகுதிகளில் இந்தப் படத்தின் சூட்டிங் நடத்தப்பட்டு வருகிறது.

கமர்ஷியல் படங்களை இயக்கிவந்த சிவா, வரலாற்று பின்னணியில் இந்தப் படத்தை இயக்கி வருகிறார். படத்தின் மோஷன் போஸ்டர் முன்னதாக வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.

Actor Natraj acts one of the Villain in Suryas Kanguva movie,

கங்குவா படத்தில் சூர்யாவின் வில்லனாக இணைந்த நட்ராஜ்: நடிகர் சூர்யா அடுத்தடுத்த சிறப்பான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். சூரரைப் போற்று, ஜெய்பீம், விக்ரம், எதற்கும் துணிந்தவன் என அடுத்தடுத்த வித்தியாசமான ஜானர்களில் படங்களை கொடுத்த சூர்யா, தற்போது சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் நடித்து வருகிறார். வரலாற்று சிறப்புடன் இந்தப் படத்தின் கதை எடுக்கப்பட்டு வருகிறது. கோவா, சென்னை, கொடைக்கானலின் அடர்ந்த காட்டுப்பகுதிகளில் இந்தப் படத்தின் சூட்டிங் எடுக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தின் மோஷன் போஸ்டர் முன்னதாக வெளியாகி ரசிகர்களை கவர்ந்த நிலையில், தற்போது படத்தின் அடுத்தடுத்த போஸ்டர்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் வரும் 23ம் தேதி சூர்யாவின் பிறந்தநாளையொட்டி படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார். 3டியில் உருவாகிவரும் இந்தப் படம் 10 மொழிகளில் வெளியாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

தற்போது வெளியாகியுள்ள புதிய போஸ்டரில் சூர்யா வித்தியாசமான கெட்டப்பில் குதிரையில் அமர்ந்திருப்பது போல காணப்படுகிறது. இந்தப் போஸ்டரை கண்டு ரசித்துள்ள ரசிகர்கள், அடுத்ததாக இன்னும் இரு தினங்களில் வெளியாகவுள்ள கிளிம்ப்ஸ் வீடியோவிற்காக மரண மாஸாக காத்திருக்கின்றனர். ஸ்டூடியோ கிரீன் மற்றும் யூவி கிரியேஷன்ஸ் இணைந்து தயாரித்துவரும் இந்தப் படம் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது.

Actor Natraj acts one of the Villain in Suryas Kanguva movie,

ரிலீசுக்கு முன்னதாகவே இந்தப் படத்தின் டிஜிட்டல் உள்ளிட்ட உரிமைகள் மிகப்பெரிய விலைக்கு கைமாறியுள்ளதாகவும் முன்னதாக தகவல்கள் வெளியாகின. படம் 1500 ஆண்டுகளுக்கு முந்தைய கதைக்களத்தை கொண்டு படம் உருவாகி வருவதை சிவா தனது பேட்டியொன்றில் முன்னதாக உறுதிப்படுத்தியுள்ளார். படம் அடுதத ஆண்டில் திருவிழா கொண்டாட்டமாக வெளியாகவுள்ளதாக தயாரிப்புத் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஞானவேல் ராஜா கொடுத்துள்ள சமீபத்திய பேட்டியில் பிரபல நடிகர் நட்டி நட்ராஜ் இந்தப் படத்தில் சூர்யாவிற்கு வில்லனாகியுள்ளதாக தெரிவித்துள்ளார். சூர்யாவிற்கு படத்தில் அதிகமான வில்லன்கள் உள்ள நிலையில் நட்ராஜும் அதில் ஒருவர் என்று அவர் கூறியுள்ளார். சூர்யாவிற்கும் நட்ராஜிற்கும் இடையில் மிகப்பெரிய ஃபைட் சீன் உள்ளதாகவும் இதன் சூட்டிங் துவங்கியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X