யூத் விஜய்க்கும் வாரிசு விஜய்க்கும் இருக்கும் வித்தியாசம்.. நட்ராஜ் பளீச்!
சென்னை : நடிகர் விஜய் எப்போதுமே ரசிகர்களுக்கு மட்டுமில்லாமல் சக நடிகர்களுக்கும் எப்போதுமே பிடித்தமானவர்.
வாரிசு படத்தின் வெற்றி கொடுத்த சந்தோஷத்தை தொடர்ந்து தற்போது லியோ படத்தின் சூட்டிங்கில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார் விஜய்.
இந்நிலையில் நடிகரும் ஒளிப்பதிவாளருமான நட்ராஜ் விஜய் குறித்து கொடுத்துள்ள சமீபத்திய பேட்டியில் அவரை புகழ்ந்துள்ளார்.

நடிகர் விஜய்
நடிகர் விஜய் எப்போதுமே ரசிகர்களுக்கு மட்டுமில்லாமல் சக நடிகர்களுக்கும் மிகவும் பிடித்தமானவர். நாளைய தீர்ப்பு படத்தில் துவங்கிய விஜய்யின் பயணம் தற்போது லியோ படத்தில் நிலை கொண்டுள்ளது. கடந்த மாதத்தில் விஜய் நடிப்பில் வெளியான வாரிசு படம் அவரது ரசிகர்களுக்கு சிறப்பான ட்ரீட்டாக அமைந்தது.

வாரிசு படம்
குடும்ப சென்டிமெண்டை மையமாக கொண்டு வெளியான வாரிசு படத்தில் தன்னுடைய காமெடி, ஆக்ஷன், கெத்து, சோகம் என அனைத்து அம்சங்களையும் சிறப்பாக கொடுத்திருந்தார். ரசிகர்களையும் இந்தப் படத்தின்மூலம் ஈர்த்திருந்தார். பீஸ்ட் படம் போலவே இந்தப் படமும் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் வசூலில் 300 கோடி ரூபாயை கடந்துள்ளதாக தயாரிப்பு தரப்பு மகிழ்ச்சி தெரிவித்திருந்தது.

லியோ படத்தில் விஜய்
தற்போது லியோ படத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இணைந்துள்ளார் விஜய். இதற்காக விஜய், த்ரிஷா, கௌதம் மேனன், அர்ஜுன், சஞ்சய் தத், பிரியா ஆனந்த் உள்ளிட்டவர்கள் காஷ்மீரில் முகாமிட்டுள்ளனர். அங்கு 60 நாட்கள் இந்தப் படத்தின் படப்பிடிப்பு திட்டமிடப்பட்டு, தற்போது சூட்டிங் நடைபெற்று வருகிறது.

அடுத்தடுத்த படங்களில் விஜய்
இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களையும் திட்டமிட்டு வருகிறார் விஜய். அடுத்ததாக அட்லீ இயக்கத்தில் விஜய் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது விஜய்யின் 68வது படம். தற்போது ஷாருக்கின் ஜவான் படத்தை இயக்கிவரும் அட்லீ, அடுத்ததாக விஜய்யுடன் இணையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

விஜய்க்கு நட்ராஜ் பாராட்டு
இந்நிலையில் கோலிவுட்டின் சூப்பர் நடிகர் மற்றும் கேமராமேன் நட்ராஜ், விஜய் குறித்து தன்னுடைய சமீபத்திய பேட்டியில் பாராட்டி பேசியுள்ளார். நடிகர் விஜய் காமெடி, சீரியஸ், ஃபன் உள்ளிட்ட அனைத்தையும் சிறப்பாக கொண்டு வருவார் என்றும் விஜய்யின் கிரகிப்புத் தன்மை எப்போதும் தன்னை வியக்க வைப்பதாகவும் நட்ராஜ் தெரிவித்துள்ளார்.

யூத் -வாரிசு வித்தியாசம்
யூத் படத்தில் விஜய்யுடன் இணைந்து நட்ராஜ் பணியாற்றிய நிலையில், யூத் மற்றும் தற்போது வாரிசு படம் இரண்டுக்கும் இடையில் விஜய்யின் வித்தியாசம் என்று பார்த்தால், யூத் நேரத்தில் ஒரே நேரத்தில் அதிகமான படங்களில் நடித்ததாகவும் தற்போது செலக்டிவான படங்களில் நடித்துவருவதாகவும் நட்ராஜ் தெரிவித்துள்ளார்.

விஜய்யின் கிரகிப்பு தன்மை
மேலும் மற்றவர்கள் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர் விஜய் என்றும் நட்ராஜ் தன்னுடைய பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். விஜய் சூட்டிங் ஸ்பாட்டில் யாருடனும் பேசாமல் இருப்பது கூட, அந்தக் காட்சி எப்படி சிறப்பாக வர வேண்டும் என்பதை அவர் உற்று நோக்கிக் கொண்டும் கிரகித்துக் கொண்டும் இருப்பதால்தான் என்றும் நட்ராஜ் கூறியுள்ளார்.

பாடி லேங்க்வேஜிற்காக மெனக்கெடும் விஜய்
ஒவ்வொரு படத்திலும் வித்தியாசம் காட்ட வேண்டும் என்றும் ஒரே மாதிரியான பாடி லேங்க்வேஜ் போகக்கூடாது என்றும் அவர் அதிகமாக மெனக்கெடுவார் என்றும் நட்ராஜ் பாராட்டியுள்ளார். அதேபோல ஆக்ஷன் என்று கூறியவுடன் அந்த கேரக்டராகவே மாறும் தன்மை விஜய்க்கு கிடைத்த கிப்ட் என்றும் அவர் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











